search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தி"

    • பெருமாளின் ஒரு கரம் கீழ்நோக்கி இருக்கிறது.
    • பொதுவாக, பெருமாள் கோவில்களில் தாயாருக்கு தான் முதல் வணக்கம்.

    கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

    (புரட்டாசி) மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார்.

    எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும்.

    அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகும்.

    கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.

    முதல் வணக்கம் பத்மாவதி தாயாருக்கு

    திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து விடுகிறார்கள்.

    இந்த வழிபாட்டு முறை சரியானது அல்ல.

    முதலில் நாம் செல்ல வேண்டியது திருச்சானூரிலுள்ள பத்மாவதி தாயார் கோயிலுக்குத் தான்.

    இதை பெருமாளின் திருக்கரமே நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

    அவரது ஒரு கரம் கீழ்நோக்கி இருக்கிறது.

    என் முகத்தைப் பார்க்கும் முன் திருவடியைப் பார்.

    திருவடியில் சரணாகதி அடை என்று சொல்வது போல் உள்ளதாக சிலர் இந்தக் கோலத்தைச் சொல்கிறார்கள்.

    இன்னொரு சாராரோ, நீ கீழே இருக்கும் லட்சுமியாகிய பத்மாவதியை பார்த்து விட்டு வந்துவிட்டாயா?

    அவள் சிபாரிசு செய்தால் தான், என் அருள் உனக்கு கிடைக்கும், என்று சொல்வது போல் உள்ளதாக விளக்கம் சொல்கிறார்கள்.

    பொதுவாக, பெருமாள் கோயில்களில் தாயாருக்கு தான் முதல் வணக்கம். பின்பே பெருமாளை வணங்க வேண்டும்.

    • திருமால் மீது சில காரணங்களால் வருத்தம் கொண்ட லட்சுமி, பூலோகம் வந்தாள்.
    • ஆகாசராஜனின் என்பவனின் மகளாகப் பிறந்தாள். பத்மாவதி என்ற பெயர் கொண்டாள்.

    இல்லாள் இல்லாவிட்டால் எதுவுமே இல்லை

    திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் மற்றும் இதர விழா நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் எழுந்தருளி வீதி உலா வருவார் அவரை மலையப்பன் என்று அழைப்பர்.

    துணைவியருடன் பவனி வரும் அவர்ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது தான் இல்லறம்.

    மனைவியைப் பிரிந்து விட்டால் ஒருவனுக்கு மதிப்பு இல்லை என்று பக்தர்களுக்கு ஒரு செய்தி சொல்கிறார்.

    திருமால் மீது சில காரணங்களால் வருத்தம் கொண்ட லட்சுமி, பூலோகம் வந்தாள்.

    ஆகாசராஜனின் என்பவனின் மகளாகப் பிறந்தாள். பத்மாவதி என்ற பெயர் கொண்டாள்.

    லட்சுமியை பிரிந்ததால் திருமால் செல்வ மெல்லாம் இழந்தார்.

    அவளைத் தேடி சீனிவாசன் என்ற பெயருடன் பூலோகம் வந்தார். மிகுந்த சிரமத்தின் பேரில் பத்மாவதியை மணந்தார்.

    அதன்பின் அவருக்கு எல்லா வளங்களும் வந்து சேர்ந்தன.

    மனைவியால் தான், ஒரு கணவனுக்கு மதிப்பு என்பதை இந்த சம்பவத்தின் மூலம் உலகுக்கு ஏழுமலையான் உணர்த்தினார்.

    அதை பக்தர்களுக்கு நினைவுபடுத்தவே திருப்பதியில் ஆண்டுதோறும் புரட்டாசியில் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.

    • நாரம் என்ற சொல்லுக்கு பிரம்ம ஞானம் என்ற பொருளும் உண்டு.
    • நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர்.

    நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது.

    நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு.

    பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாகத்தான்.

    நாரம் என்ற சொல்லுக்கு பிரம்ம ஞானம் என்ற பொருளும் உண்டு.

    இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துகிறது.

    நாராயணன் என்பதை நாரம்+ அயணன் என பிரிக்கலாம்.

    நாரம் என்றால் தீர்த்தம். அயணன் என்றால் படுக்கை உடையவன்.

    பாற்கடலாகிய தீர்த்தத்தில் பாம்பணையில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்குப் பொருள்.

    நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர்.

    நாராயண நாராயண என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார்.

    இவர் தோன்றுவதற்கு முன், இந்த உலகில் தண்ணீர் என்பதே குறைவாக இருந்ததாம்.

    அவரது பிறப்புக்கு பின்தான் தண்ணீர் அதிகரித்தது.

    இதன் காரணமாக அவர் நாரதர் என்ற பெயர் பெற்றார் என்பர்.

    நாரதர் போல நாமும் நாராயணன் பெயரை அதிகம் உச்சரித்தால் வெள்ளமாக அருள் மழை பெற முடியும்.

    அதுவும் புரட்டாசியில் உச்சரித்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

    • கடவுளை விட அவருடைய திருநாமத்திற்கு அரிய சக்தி உண்டு.
    • திரவுபதியின் துன்பத்தைப் போக்கியது கோவிந்தா என்னும் நாமம்.

    புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும்.

    இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும்.

    இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம்.

    ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள்.

    அதாவதுஉலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம்.

    கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.

    கடவுளை விட அவருடைய திருநாமத்திற்கு அரிய சக்தி உண்டு.

    திரவுபதியின் துன்பத்தைப் போக்கியது கோவிந்தா என்னும் நாமம்.

    முதலையிடம் சிக்கிய கஜேந்திர யானையின் துன்பம் தீர்த்தது ஆதிமூலம் என்ற திருநாமம்.

    கலியுகத்தில், இவ்வாறான நாமஜெபம் மூலமாக கடவுளின் திருவடியை எளிதாக அடைய முடியும்.

    கட்டித்தங்கம் போல கடவுள், ஆபரணத்தங்கம் போல அவரின் திருநாமம் என்று இதனைச் சொல்வதுண்டு.

    ஆபரணத்தங்கமான கடவுளின் திருநாமத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி, யாரும் எளிதாகச் சேமிக்கலாம்.

    • இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
    • இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும்.

    சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்த்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து,

    எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபட வேண்டும்.

    துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சன்னிதானாமடைந்து சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும்.

    அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம்.

    இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.

    சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5-&ல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச்சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர்.

    இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாம்.

    இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும்.

    ஏனையோர் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின்

    சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும்.

    • படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார்.
    • பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது.

    பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில்.

    இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார்.

    இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர்.

    ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.

    சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது.

    போனாலும் பூஜை முறையும் தெரியாது.

    தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.

    ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது.

    பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை.

    பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார்.

    படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார்.

    பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது.

    எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.

    அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார்.

    ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார்.

    பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது.

    பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார்.

    அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார்.

    அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார்.

    அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார்.

    பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.

    புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார்.

    அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது.

    இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.

    • புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
    • சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.

    புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது.

    எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.

    ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.

    அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.

    இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.

    புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.

    அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

    இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.

    • புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு.
    • இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான்.

    ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.

    புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு.

    எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

    பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி.

    இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான்.

    ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.

    புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான்.

    அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

    • ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரத நாட்கள்தான்.
    • திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள்.

    தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு.

    இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரத நாட்கள்தான்.

    சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான்.

    திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள்.

    அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

    • தை மாதம் மாட்டுப் பொங்கல், ஸ்ரீ தாயார் தீர்த்தவாரி நடைபெறும்.
    • சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    1. எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் தச அவதாரங்களில் மிக முக்கியமானது, தீமைகளை அழித்து நன்மையை வாழவைத்த ஸ்ரீ நரசிம்ம அவதாரமாகும்.

    இந்த நரசிம்ம அவதாரமே, இத்திருக் கோயிலின் மூல மூர்த்தியாக அமையப்பெற்றுள்ளது.

    2. பதினாறு திருக்கரங்களுடன் அமையப்பெற்ற ஸ்ரீ நரசிம்மர் தமிழ்நாட்டில் இத்தலம் தவிர வேறெங்கும் இல்லை என்பது மிகசிறப்பான ஒன்றாகும்.

    3. இரணியனின் மகன் பிரகலாதனுக்காக இரணியனின் கொடுமைகளை அழிக்க தூணிலிருந்து தோன்றிய அவதாரம் நரசிம்ம அவதாரமாகும்.

    இது சிங்கிரிகுடி நரசிம்மர் வரலாறு குறித்து மார்கண்டேய புராணத்துள் நரசிம்ம வன மாயுத்மியம் என்ற பகுதியில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

    4. இத்திருக்கோயிலில் அமையப்பெற்ற அனைத்து கல்வெட்டுகளுமே முற்றுபெறாத நிலையில் காணப்படுகிறது.

    இராஜ கோபுரவாயிலில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியுடைய ஒரு கல்வெட்டு செய்யுள் வடிவில் அமைந்துள்ளது.

    மகா மண்டபத்தின் தெற்கு சுவரில் கி.பி. 12 ம் நூற்றாண்டின் எழுத்தமைதியுடைய கல்வெட்டு ஒன்று உள்ளது.

    5. நீண்ட சதுரமான மாடவீதிகளை கொண்ட சிங்கிரிகுடி எனும் ஊரில் நடுநாயகமாக அமையப் பெற்றுள்ளது இத்திருக்கோயில்.

    6. இத்திருக்கோயில் மேற்குதிசை நோக்கி அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருக்கோயிலாகும்.

    7. ஐந்து நிலைகளை கொண்ட கம்பீரமான இராஜ கோபுரமும் வைணவ சிந்தாத்தப்படியான 24 தூண்களை கொண்ட வசந்த மண்டபமும் அமைந்துள்ளது.

    8. வைணவத் திருக்கோயிலான இத்திருக்கோயில் இராஜ கோபுரத்தை அடுத்து பிள்ளையார் திருகோயிலும் அமையப்பெற்றது. வேறெங்கும் காண இயலாத தனிச்சிறப்பாகும்.

    9. இத்திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்மர், திருவகீந்திரபுரத்து தேவ நாதனே என திருமங்கை ஆழ்வாரது பாசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

    10. இத்தலத்தில் 1. ஸ்ரீ நரசிம்மர் சன்னதி, 2. ஸ்ரீ கனகவல்லி தாயார் சன்னதி, 3. ஸ்ரீ ஆண்டாள் சன்னதி, 4. ஸ்ரீ ராமர் சன்னதி, 5. ஆழ்வார்கள் சன்னதி, 6. ஸ்ரீ விநாயகர், 7. ஸ்ரீ துர்க்கா சன்னதி ஆகியவை முக்கிய சன்னதிகளாகும்.

    11, சன்னதி திறந்திருக்கும் நேரங்கள்:

    காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை

    மாலை 4.30 மணி முதல் 9.00 மணி வரை

    12. பூஜை காலங்கள்:

    காலை 9.00 மணி காலைசந்தி

    பகல் 12.00 மணி உச்சிக்காலம்

    மாலை 6.00 மணி நித்தியாணு

    மாலை 6.30 மணி சாயரட்சை

    இரவு 8.30 மணி அர்த்தசாமம்

    13. இத்தலத்து தாயார் பெயர் ஸ்ரீ கனகவல்லித் தாயார்

    14. விமானத்தின் பெயர் ஸ்ரீ பாவன விமானம்

    15. ஜமத்க்கனி தீர்த்தம், இந்திர தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் சிங்கிரிகுடியில் உள்ளன.

    16. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

    17. தை மாதம் மாட்டுப் பொங்கல், ஸ்ரீ தாயார் தீர்த்தவாரி நடைபெறும்.

    18. சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    19. புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்தும் திருப்பாதிரிப்புலியுர் ரயில் நிலையத்திலிருந்து சமதொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

    20. இத்தலம் கடலூர், புதுச்சேரியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

    • அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார்.
    • இந்த திருக்கோவிலில் பஞ்சராதிர ஆகமப்படி இரண்டு காலபூஜைகள் நடக்கின்றன.

    முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் பூவரசன்குப்பம் தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார்.

    அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார்.

    உடனே நரசிம்மர், "நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்" என்றார்.

    அதற்கு லட்சுமி, "கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக்கூடாது. எனவேதான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்" என்றார்.

    அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள்.

    பிரகாரத்தினுள் இராமானுஜர், நாகசன்னதியும் இருக்கிறது.

    இந்த லட்சுமி நரசிம்மபெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும்.

    பதவி உயர்வு வந்து சேரும் மற்றும் எதிரிகள் எல்லாம் இல்லாமல் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்.

    இந்த திருக்கோவிலில் பஞ்சராதிர ஆகமப்படி இரண்டு காலபூஜைகள் நடக்கின்றன.

    இதில் மற்றுமொரு சிறப்பு சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ரகலச திருமஞ்சனம் எனும் இந்த விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாளை வேண்டினால் கடன் தொல்லை தீரும், பொருள்கள் குவியும், இங்கே உற்சவர் வரதராஜ பெருமாள் இவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் காட்சி தருகிறார்.

    தினமும் இங்கே அன்னதானம் நடைபெறுகிறது.

    சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் மற்றும் பூஜைகள் உண்டு.

    • ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.
    • வேண்டுதல் நிறைவேற நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

    கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் நரசிம்மர் உக்கிரமாக அருள் பாலிக்கிறார்.

    ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.

    "நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை' என்னும் வாக்கிற்கு ஏற்ப, சரணடைந்த உடனேயே அருள்பாலிப்பவர் நரசிம்மர்.

    ஐந்து நிலை, ஏழு கலசங்களுடன் மேற்கு பார்த்த ராஜகோபுரமும், மிகப்பெரிய கொடி மரமும் உள்ளது.

    வைகானஸ ஆகமப்படி இத்தலத்தில் பூஜை நடக்கிறது.

    மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

    வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க் கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

    பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள் பாலிக்கிறார்.

    இரணியனை மேற்கு பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்ததைக் குறிக்கும் வகையில், மேற்கு பார்த்த நிலையில் உள்ளார்.

    ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது.

    இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள்.

    மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் தலம் இது.

    உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

    ×