search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தி"

    • அந்த சக்தி அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது.
    • அந்த அதிர்வு உங்கள் உடல், மனம், ஆரோக்கியத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும்

    வில்வத்தில் அதிர்வை உணரலாம்

    சிவாலயங்களில் உள்ள லிங்கத்தில் இருந்து, இந்த பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள சக்தி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

    அந்த சக்தி அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது.

    இதனால்தான் பழமை சிறப்புமிக்க ஆலயங்களுக்குள் நாம் செல்லும் போது அதிர்வை உணர முடியும்.

    சிவன் உறைந்துள்ள லிங்கம் மீது நாம் வில்வ இலைகளைப்போட்டு பூஜை செய்யும்போது,

    லிங்கத்தில் இருந்து வெளியாகும் அதிர்வு வில்வ இலைகள் மீது பதியும்.

    இதையடுத்து அந்த அதிர்வுகளை வில்வ இலைகள் முழுமையாக ஈர்த்து தக்க வைத்துக் கொள்ளும்.

    அந்த ஆற்றல் வில்வ இலைகளுக்கு இருக்கிறது.

    லிங்கமூர்த்தி மீது வைத்து எடுக்கப்படும் வில்வ இலைகளை, நீங்கள் அர்ச்சகரிடம் இருந்து கையில் வாங்கியதுமே, அந்த அதிர்வை உணர்வீர்கள்.

    அந்த அதிர்வு உங்கள் உடல், மனம், ஆரோக்கியத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் மகிமை கொண்டது.

    இதனால்தான் வில்வ இலையை புனிதமாக கருதுகிறார்கள்.

    அடுத்தத் தடவை சிவனை வழிபட்டு முடிந்ததும், மறக்காமல் வில்வ இலையை கேட்டுப் பெறுங்கள்.

    • வில்வ இலை பெருமைகளை சிவபுராணம் விரிவாக சொல்லி உள்ளது.
    • மற்ற மலர்களையோ இலைகளையோ அதைப் போல் பயன்படுத்தக் கூடாது.

    உலர்ந்து போனாலும் பூஜைக்கு பயன்படுத்தும் வில்வம்

    வில்வ இலை மிகவும் உயர்வானது.

    வில்வ இலை பெருமைகளை சிவபுராணம் விரிவாக சொல்லி உள்ளது.

    வில்வமரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.

    ஒரு வில்வ மலரானது ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையானது என்று சொல்லி இருக்கிறார்கள்.

    ஒரு வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் அஸ்வமேத யாகம் செய்த பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் உலகில் உள்ள அத்தனை சிவாலயங்களைத் தரிசித்த பலனும் கிடைக்கும்.

    அதைத் தவிர வில்வத்துக்கு மட்டுமே நிர்மால்ய தோஷம் கிடையாது.

    அதைப் பறித்து எத்தனை நாட்கள் ஆனாலும் உலர்ந்து போனாலும் கூட பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

    மற்ற மலர்களையோ இலைகளையோ அதைப் போல் பயன்படுத்தக் கூடாது.

    ஆனால் வில்வ இலையை எத்தனை தடவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

    இது வில்வ இலைக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பாகும்.

    • சிவலிங்கத்தை பூஜை செய்வதற்கு உரிய ஆதார நியமங்கள் முறைகளைக் கூறுவதே சிவாகமம்.
    • பசு, பதி, பாசம் ஆகிய முப்பொருட்களைக் கூறுவதே ஆகமம் என்று சைவ மறையவர் பொருள் கொள்வர்.

    சிவாகமப் பொருள் அறிவோம்

    சிவலிங்கத்தை பூஜை செய்வதற்கு உரிய ஆதார நியமங்கள் முறைகளைக் கூறுவதே சிவாகமம்.

    இருபத்தெட்டு வகைகளாக உலகிற்கு அளித்தவர்கள் ஐந்து முனிவர்களான கவுசிகர், காசிபர், பரத்வாஜர், கவுதமர் ஆகியோர் இவர்கள் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களான,

    ஈசானம் தத்புருஷம், கோரம், வாமதேவம், சத்யா ஜாதம் என்ற ஒவ்வொரு திருமுகங்கள் வழியாகக் கேட்டறிந்து,

    காமிகம் முதல் வாதுளம் வரை ப்ரணவர், சுதாக்யர், சுதீர்த்தர், காரணர், சுசிவர், ஈசன்குக்குமர், காலர், அம்பி, தேசிகர் ஆகியோர் மூலம் பரவியது.

    ஆகமம் என்பதற்கு சிவபெருமானை பூஜை செய்கிற விதிகள் சிவபோதனை நூல்கள் எனினும் சைவர்கள் இதை ஆ-சிவஞானம் க-மோட்சம், ம-மலநாசம் என்றும் கூறுகின்றனர்.

    மேலும் பசு, பதி, பாசம் ஆகிய முப் பொருட்களைக் கூறுவதே ஆகமம் என்று சைவ மறையவர் பொருள் கொள்வர்.

    சிவாகமத்தை விவரிக்கும் ஆகம விதி நூல்களில் ஒன்றான 28வது வாதுன ஆகமத்தில் சொல்லப்பட்ட உண்மையான பொருள் இதுவே.

    ஆகமம் என்ற சொற்கோர்வையின் பொருள்

    ஆ&ஆகதம் சிவபத்ராஸ்ச & சிவபெருமானின் வாக்கிலிருந்து வந்தது.

    க&கதம்து கிரிஜா சுகதென & கிரிஜா என்ற பார்வதி தேவிக்கு உபதேசிக்கப்பட்டது.

    ம&மதஞ்ச வாசுதேவஸ்ச & வாசுதேவன் என்ற மகா விஷ்ணு இது தன்னுடைய மதம் என்று ஏற்றுக் கொண்டது.

    தஸ்மாத் ஆக & ஈரித:& இம்மூன்று முதல் எழுத்துக்களும்உணர்த்தும் பொருளே சிவாகமம் ஆகிறது.

    28 ஆகமங்களில் முதல் 10 சிவபேதம் என்றும் மற்ற 18&ம் ருத்ரபேதம் என்றும் வகைப்படுத்தப்பட்டு அவற்றில் சிவாகம ரகசியங்கள் அடங்கி உள்ளன.

    28 வகை ஆகமங்களாவன:

    காமிகம், யோகஜம், சிந்தயம், காரணம் அஜிதம், தீப்தம், சகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதகம், விஜயம், தைவ நிஸ்வாசம், ஸ்வயம்புவம், அத்நலம், வீரம், ரவுரவம், மகுடம், விமலம் சந்திரக்ஞானம், பிம்பம், ப்ரோத்ஹீதம், லலிகம், சித்தம், சந்தானம் சர்வோக்தம், பாரமேஸ்வரம், கிரணம், வாதுளம்.

    • அம்பர் என்றால் ஆகாயவெளி, நாதர் என்றால் இறைவன்.
    • அம்பர்நாத் என்ற இடத்தில் பழங்கால சிவன் கோவில் ஒன்று உள்ளது.

    சிவலிங்கம் இல்லாத சிவன் கோவில்

    மகாராஷ்டிர மாநிலத்தில் முக்கிய பெருநகரான மும்பைக்கு புறநகராக விளங்கும் அம்பர்நாத் என்ற இடத்தில் பழங்கால சிவன் கோவில் ஒன்று உள்ளது. தலத்தின் பெயரும் அம்பர்நாத்

    அம்பர் என்றால் ஆகாயவெளி, நாதர் என்றால் இறைவன்.

    இங்கே மூலஸ்தானத்தில் சிவலிங்கமோ, நடராசர் சிலையோ காணப்படவில்லை.

    ஈசன் அணியும் புலித்தோல் போலத் தரையை அமைந்திருக்கிறார்கள்.

    கோவிலைச் சுற்றிலும் மாமரங்கள், நான்கு வாயில்களில் மேற்கு வாயிலில் மட்டும் நந்தி தேவர் உள்ளார்.

    இதன் வழியாக உள்ளே செல்லும் பக்தர்களுக்கு அர்ச்சகர் மஞ்சள் கயிறைக் கட்டி விடுகிறார்.

    சுற்றிலும் சாம்பிராணி ஊதுபத்தி வாசனை வருகிறது.

    கருவறை என்று சொல்லப்படும் இடத்தில் சிறிய பள்ளம் காணப்படுகிறது.

    இந்த பள்ளத்தை தான் சிவபெருமான் என்று கூறுகின்றனர்.

    கருவறை சற்று தாழ்வான பகுதியில் உள்ளது. பள்ளத்திற்கு பூஜைகள் எதுவுமே கிடையாது.

    அருகில் உள்ள வெட்ட வெளிமேடையில் சிவ பக்தர்கள் பாடிக் கொண்டே ஆலயத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

    மகாராஷ்டிராவில் கெங்கன் என்ற பகுதியை ஆட்சி செய்த சில்காரா அரச பரம்பரையில் வந்த சித்தராஜன் கடம்பவன அரசர்களைப்போர் செய்து வெற்றி பெற்றான்.

    அந்த வெற்றிக்கு காணிக்கையாக இந்த ஆலயத்தை கி.பி. 1060&ல் அமைத்ததாக கல்வெட்டு கூறுகிறது.

    காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கிற இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா கோலாகமாக நடக்கும்.

    மும்பை வாசிகள் அனைவரும் இங்கே கூடுவார்கள். அம்பர்நாத் ரெயிலடியிலிருந்து மிக அருகில் உள்ளது.

    மும்பை செல்வோர் வணங்கி வர வேண்டிய அதிசய கல்வெட்டுக் கோவில் இது.

    • பிலிப்பைன்ஸ் நகர மக்கள் சிவபெருமானை சிவப்பன் என்று வணங்கி வருகின்றனர்.
    • பாலித்தீவுகள், இலங்கை, இந்தோனேசியா எங்கிலும் சைவ வழிபாட்டை காண முடிகிறது.

    உலகெங்கும் ஈஸ்வர தத்துவம்

    விளையாட்டாய் சிவலிங்கத்தின் மீது ஒரு வில்வ தனத்தை போட்டால் கூட அருள் தந்து விடுவார் ஈசன் என்ற அவரது பெருமைப்பற்றி விளக்கினார் வடமொழிக் கவியாம் நீலகண்ட தீட்சிதர்.

    வரலாற்று அறிஞரான சர்ஜான் மார்ஷல் தனது நூலில் சிந்து சமவெளி எங்கிலும் சிவக்குறிப்புகள் உள்ளதாகவும் தற்போதுள்ள மத வழிபாட்டுக் குறிப்புகளே அச்சமயத்திலும் கடை பிடிக்கப்பட்டன என்கிறார்.

    "எணான்" என்னும் கடவுள் எண் குணம் கொண்ட சிவன் தான் என்று உறுதிபடக் கூறுவார் ஈராஸ் பாதிரியார்.

    அமெரிக்காவில் கொலராடோ ஆற்றுக்கரையில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவலாயம் இருந்ததாக தொல்லியர்கள் சொல்கின்றனர்.

    ஆசியாவில் சிவாஸ் என்ற நகரில் சிவ வழிபாடும் இருந்து வந்ததை அறிய முடிகிறது.

    பிலிப்பைன்ஸ் நகர மக்கள் சிவபெருமானை சிவப்பன் என்று வணங்கி வருகின்றனர்.

    ஜப்பானியர்களது புராதனமான கடவுள் "சிவோ" என்று அவர்களின் ஏடுகளில் தகவல் உள்ளது.

    பாபிலோனியர்களது செப்பேடுகளில் சிவன் என்ற வார்த்தை ஒரு மாதத்தினுடைய பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அக்கேடியாவின் மக்கள் சிவன் ஒரு நட்சத்திரம் என்று குறிப்பிடுகின்றனர்.

    பின்லாந்து மக்கள் இந்த உலகத்தின் காவல் தெய்வம் சிவனே என்கின்றனர்.

    தொல்லியல் மற்றும் புதைபொருள் ஆராய்ச்சியின் மூலம் கொரியாவில் தெருவுக்கு ஒரு சிவலிங்கம் இருந்துள்ளதை அறியலாம்.

    பாலித்தீவுகள், இலங்கை, இந்தோனேசியா எங்கிலும் சைவ வழிபாட்டை காண முடிகிறது.

    எகிப்து ஆற்றங்கரையில் ஆயிரம் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    திபெத்தில் நாகரீகத்தில் சைவ வழிபாடு கி.பி. 5&ம் நூற்றாண்டிலேயே வேரூன்றியதை மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை திருபாவை, திரியம்பாவை, விழா, நடத்தியதால் அறிய முடிகிறது.

    சாகர் வம்சத்து அரசன் மோகன் என்பவன் தன் நாட்டு நாணயங்களில் நந்தி தேவர் சின்னங்களைப் பொறித்ததாக செய்தி உண்டு.

    சுவேதாஸ்வர உபநிடதம். சுக்கில யஜீர் வேதமும் சிவ பூஜை சிறப்பை தெளிவாகக் கூறுகின்றன.

    கி.பி. 11&ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆட்சி செய்து வந்த கண்டராதித்த சோழனின் மனைவி தன் கணவரையே அலங்கரித்து பரமேஸ்வரனாக வழிபட்டதாக பழயாறை & கல்வெட்டும் செய்தியில் இருக்கிறது.

    சயாம் நாட்டு மன்னரின் முடிசூட்டு விழா நிகழ்ச்சிகளில் பாலி எழுத்துகளில் எழுதிய திருவெம்பாவை படிக்கப்பட்டதை அறிகிறோம்.

    இவ்வாறு சிவலிங்கம் வழிபாடு உலகெங்கிலும் பரவி ஈஸ்வர தத்துவம் மக்களைக் காக்கும் என்று சொல்லி உள்ளதை பல்வேறு உலக ஏடுகளில் காணலாம்.

    சிவராத்திரியில் சூரியஓளி & சிவகங்கை மாவட்டம் பாரிமாமருதுபட்டியில் உள்ள வரியா மருந்தீசர் ஆலயத்தில் சிவராத்திரிக்கு மறுநாள் காலை மட்டும் இறைவன் மீது சூரிய ஒளி படுகிறது.

    • சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவகாலம் என அழைக்கப்படுகிறது.
    • சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும்.

    லிங்கோத்பவர் கால வழிபாடு

    திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி.

    அப்படி சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம் என்று அழைக்கப்படுகிறது.

    (சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும்)

    அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் எந்த சிவன் கோவிலாக இருந்தாலும் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார்.

    சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும். சவுக்யமாக வாழ ஒரு வழி கிடைக்கும்.

    • தாரா அல்லது தாரா பூஜை என்பது பெரும்பாலும் சிவனுக்கு நடக்கும் ஒரு வழிபாடு.
    • பன்னிரு சிவாலயங்களிலும் கிருததாரை நடத்தப்பட்டு இருக்கிறது.

    சிவனுக்கு உரிய தாரா பூஜை

    மேற்குக் கடற்கரை ஓரத்தில் உள்ள எல்லா சிவாலயங்களிலும் நடைபெறுகிற ஒரு சடங்கு தாரா பூஜை.

    தாரா அல்லது தாரா பூஜை என்பது பெரும்பாலும் சிவனுக்கு நடக்கும் ஒரு வழிபாடு.

    வட்ட வடிவம் கொண்ட செப்புப் பாத்திரத்தின் நடுவில் ஒரு சிறிய துவாரம் இருக்கும்.

    அதன் வழியாக ஒரு தர்ப்பைப் புல்லை செருகி நீர், பால் அல்லது நெய்யை சீரான சிறு துளிகளாக இறைவனது தலையில் விழுமாறு வைத்திருப்பர்.

    வட்டப் பாத்திரத்தை உயரமான ஒரு தாங்கலில் நிறுத்தியிருப்பர்.

    இவ்வழிபாட்டிற்கு கிருத தாரை என்று பெயர்.

    நெய் மூலம் தாரை நடத்தினால் அதற்கு வடமொழியில் கிருததாரை என்றும், பால் மூலம் தாரை நடத்தினால் ஷீரதாரை என்றும், தண்ணீர் மூலம் தாரை நடத்தினால் ஜலதாரை என்றும் பெயர்.

    பன்னிரு சிவாலயங்களிலும் அன்றைய திருவிதாங்கூர் அரசர்களால் கிருததாரை நடத்தப்பட்டு இருக்கிறது.

    அதற்குரிய நெய்யின் அளவு திருவிதாங்கூர் அறநிலையத்துறை அறிக்கையில் உள்ளது.

    ஒவ்வொரு சிவாலயங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் கிருததாரை நடைபெறும்.

    பன்னிரண்டாவது வருடம் எல்லா சிவாலயங்களிலும் மொத்தமாக நடைபெறும் கிருததாரைக்கு கூட்ட கிருததாரை என்று பெயர்

    • நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை.
    • 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன.

    300 டன் எடையுடன் அசைந்தாடி வரும் ஆழித்தேர்

    'திருவாரூர்த் தேரழகு' என்றும் 'திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான்' என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியலாம்.

    'ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே' என்று திருநாவுக்கரசர் சொல்கிறார்.

    அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு.

    இதன்மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம்.

    மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும்.

    தமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும்.

    இதனால் இதனை 'ஆழித்தேர்' என்று அழைக்கின்றனர்.

    'ஆழி' என்பது சக்கரமாகும்.

    மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    1748இல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக மேயடி ஆவணம் கூறுகிறது.

    1765 ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

    1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர்.

    பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது.

    இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது.

    1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது.

    அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும்.

    விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும்.

    இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும்.

    இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன.

    திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள், மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர்.

    10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும்.

    நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை.

    வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும்.

    இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகர்ந்து விடுகிறது.

    • ‘திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்’ என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது.
    • தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    64 சக்தி பீடங்களில் திருவாரூர் முக்கியமான ஊர்

    இக்கோவிலில் ஞானசக்தியாகவும் (கமலாம்பிகை), கிரியா சக்தியாகவும் (நீலோத்பலாம்பாள்), இச்சாசக்தியாகவும் (கொண்டி) வடிவு கொண்டு அருள் புரிகிறாள்.

    இக்கோவிலில் உள்ள சித்தீஸ்வரம், மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் தருமபுர ஆதீன நிறுவனர் உபதேசம் பெற்றதாக கருதப்படுகிறது.

    17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் பல நூறு கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    இவரும் இவருக்குப் பின்னர் முதல் சரபோஜியும் ஆண்டபோது திருவாரூரில் மன்னரின் பிரதிநிதியாக சாமந்தனார் ஒருவர் பணிபுரிந்தார்.

    அவருடைய மந்திரியாய் பணிபுரிந்தவர் சிங்காதனம்.

    இவர் சிறந்த ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களில் கோவிலின் மண்டபத்தில் இன்றும் உள்ளது.

    அதன் வாயிலாக 17 ஆம் நூற்றாண்டில் ஆரூர் திருக்கோவில் எப்படித் திகழ்ந்துள்ளது என்றும் ஆரூர் மக்களின் பண்பாடு, அவர்களின் இயல், இசை, கூத்துக்கள் பற்றி விளக்கமாக நாம் காண முடிகிறது.

    'திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்' என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது. இதைவிட இவ்வூர்ச் சிறப்பு பற்றி வேறு சொல்ல வேண்டுமா?

    • மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் காணப்படுகிறது.
    • இவ்வாலயம் கோவில்களின் கூடாரமாக விளங்குகிறது.

    திருவாரூர் கோவிலின் சிறப்புகள்

    இவ்வாலயம் கோவில்களின் கூடாரமாக விளங்குகிறது.

    9 ராஜகோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 100-க்கும் மேற்பட்ட சன்னதிகள் ஆகியவற்றுடன் இத்திருக்கோவில் பிரம்மாண்டமாகப் பரந்து விரிந்து சிறப்பாக அமைந்துள்ளது.

    கண்டீசர் இருக்குமிடத்தில் எமன் இருப்பதும் நின்ற நிலையில் நந்தி அமைந்திருப்பதும் இக்கோவிலின் பிற சிறப்புகளாகும்.

    இக்கோவிலிலுள்ள தியாகராசருடைய 'அசபா நடனம்' இவ்வூர்த் திருவிழாக்களில் சிறப்பாக நடைபெறுகிறது.

    மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் கீழைக் கோபுர வாயிலருகே காணப்படுகிறது.

    சுந்தரரின் மனைவியரான பரவையார் பிறந்த ஊர் இதுவே.

    பரவை நாச்சியாருக்கென தியாகராசர் கோவில் தெற்குக் கோபுரத்தின் தென்புறத்தில் தனி ஆலயம் உள்ளது.

    தண்டபாணிக் கோவில், இராஜதுர்கை கோவில், மாணிக்க நாச்சியார் கோவில், திருவாரூர்ப் பரவையுண் மண்டலி முதலியன இவ்வூரில் காணத்தக்கவை.

    • 330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன.
    • 63 நாயன்மார்களில் இருபத்து மூவருக்குத் தொடர்புடைய தலமாகும்.

    திருவாரூர் கோவில்-புலவர்களால் பாடப்பெற்ற தலம்

    திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்றது திருவாரூர்.

    330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன.

    இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளிலும் போற்றப்பட்டுள்ளது.

    அருணகிரிநாதர், தெலுங்கிசை மும்மூர்த்திகள், கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர்கள், அந்தகக்கண் வீரராகவ முதலியார்,

    மராட்டிய மன்னர் சகாஜி, வள்ளலார் முதலியோராலும், தமிழ், தெலுங்கு, மராட்டி, சமஸ்கிருத இலக்கியங்களிலும் இவ்வூரைப்பற்றி பாடப்பட்டுள்ளன.

    63 நாயன்மார்களில் இருபத்து மூவருக்குத் தொடர்புடைய தலமாகும்.

    இக்கோவிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபம், கல்தூண்களை மட்டுமே உடையது. விழாக்களின்போது அவற்றின் மீது பந்தல் அமைத்துக் கொள்வர்.

    இம்மண்டபத்தை சேக்கிழார் பாடியுள்ளார்.

    இக்கோவிலிலுள்ள தேவாசிரிய மண்டபத்தில்தான் சுந்தரருடைய திருத்தொண்டத் தொகையை இயற்றப்பட்டதாக கூறுவர்

    • ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.

    தியாகராஜர் கோவில்-ஆலய திருப்பணிகள்

    முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907) காலக் கல்வெட்டு முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய மன்னர் சரபோஜி காலம் வரையிலான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

    முற்கால சோழர்கள் ஆட்சியில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்தே வலிவு பெற்றிருக்கிறது.

    அருட்திரு தியாகராஜசாமி கருவறை விமானத்துக்கு தங்கத்தகடு போர்த்திய முதலாம் இராஜேந்திரன் குடமுழுக்கும் செய்வித்ததாக இக்கோவிலின் கல்வெட்டு கூறுகிறது.

    இக்கோவிலின் ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதென்று திருபுவனம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

    இரண்டாம் இராஜாதிராஜன் பெரிய கோபுரத்தையும் சபாபதி மண்டபத்தையும் கட்டினான்.

    இரண்டாம் இராஜேந்திரன் வீதிவிடங்கர் எழுந்தருளியுள்ள கர்ப்ப கிரகத்தையும், வன்மீகநாதர் கருவறையையும் பொன் வேய்ந்தான் என்பதும்,

    திருமுறை ஆசிரியர்களின் திருநாட்களைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும்,

    திருவிளக்குப் பணிக்காகவும் பூசை முதலியவற்றுக்காகவும் சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.

    ×