search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தி"

    • கோவிலின் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோயில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கிறது.
    • திருவாரூரில் மூலவரை வன்மீகநாதர் என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர்.

    முப்பெருந்தேவியின் அம்சமாக விளங்கும் திருவாரூர் கமலாம்பிகை!

    திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலை சுற்றிப் பார்க்க வேண்டுமானால், முழுமையாக ஒருநாள் ஆகும் அவ்வளவு பெரிய கோவில்.

    பெரும்பாலான கோயில்களின் சுற்றுப்பிரகாரத்தில் சிறிய சன்னதிகள்தான் இருக்கும்.

    ஆனால், திருவாரூர் கோயிலின் உள்ளே இருக்கும் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோயில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கிறது.

    இத்தலத்தில் உள்ள பக்தர்கள் ராகு கால துர்க்கையை வழிபட்டு பதவி உயர்வு பணிமாற்றம் உள்ளிட்ட பல காரியங்கள் வெற்றியடையப் பெறுகிறார்கள்.

    இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும் நீலோத்பலாம்பாளை வழிபட்டால் அர்த்தஜாமத்தில் நைவேத்தியம் செய்து பால் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கிறது.

    பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவதும் நிகழ்கிறது. ருணவிமோசனப் பெருமானை வழிபட்டால் கடன் தொல்லை, உடற்பிணிகள் ஆகியன விட்டு விலகும்.

    மேலும் பிரதான மூர்த்தியான தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி மேன்மை, வேலை வாய்பபு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவை நிறைவேறுகிறது.

    மூலவர் வன்மீகி நாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும். அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.

    திருவாரூரில் மூலவரை வன்மீகநாதர் என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர்.

    இவர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி கமலாம்பிகையும் சந்திரனை நெற்றியில் சூடியிருக்கிறாள். க-கலைமகள், ம-மலைமகள், ல-அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக விளங்குகிறாள்.

    வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடது கரத்தை இடையில் வைத்தும், கால்களை யோகாசன நிலையில் அமைத்தும் ராணி போல் காட்சி தருகிறாள்.

    சிவன் கோயில்களில் தேவாரம் பாடியதும், "திருச்சிற்றம்பலம்' எனக் கூறி முடிப்பார்கள்.

    சிதம்பரம் நடராஜர் கோயிலே முதல் கோவில் என்ற அடிப்படையில், அங்கு நடராஜர் நடனமாடும் சிற்றம்பலத்தை இப்படி சொல்வதுண்டு.

    ஆனால், சிதம்பரம் கோவிலுக்கும் முந்தைய கோயில் திருவாரூர் எனக் கருதப்படுவதால், இந்தக் கோவிலில் மட்டும் தேவாரம் பாடி முடித்ததும், "திருச்சிற்றம்பலம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை.

    தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும்.

    இதனால் தான் "திருவாரூர் தேரழகு' என்பார்கள்.

    சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார்.

    திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால், எமனுக்கு வேலை இல்லாமல் போனது.

    எனவே இங்கு எமனே, சண்டிகேஸ்வரராக இருந்து இறைவனை வேண்டி தன் வேலையை காப்பாற்றிக் கொண்டார். எமபயம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.

    திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு.

    சிதம்பர ரகசியம் போல, தியாகராஜ ரகசியம் இந்த கோவிலின் தனிச்சிறப்பு. தியாகராஜருக்கு பின்னுள்ள மூலஸ்தானத்தில் அந்த ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது.

    லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக, இத்தலத்து நாயகி கமலாம்பிகை விளங்குகிறாள். எனவே இங்குள்ள தீர்த்தம் "கமலாலயம்' எனப்படுகிறது.

    பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம். குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதி உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

    பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.

    இதை "நித்திய பிரதோஷம்' என்பார்கள். இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர் களும் தரிசிப்பதாக ஐதீகம்.

    எனவே, இந்தக் கோவிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும்.

    • இந்த பாடலை தினமும் பக்தியுடன் பாடி வந்தால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
    • அதிவீரராம பாண்டியர் என்பவரால் இந்த பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டது.

    கடன் தொல்லை தீர அகத்தியர் பாடல்

    செல்வம்பெருகவும், கடன் தொல்லை தீரவும் உதவும் வகையில் பாடல் ஒன்றை அகத்திய முனிவர் எழுதி இருக்கிறார்.

    இந்த பாடலை தினமும் பக்தியுடன் பாடி வந்தால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

    இதை தனது பாடலிலேயே அகத்தியர் குறிப்பிட்டுள்ளார். கி.பி. 1564 முதல் 1604ம் ஆண்டு வரை தென்பாண்டி நாட்டை ஆண்ட அதிவீரராம பாண்டியர் என்பவரால் இந்த பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

    சிறப்புமிக்க அந்தப்பாடல் வருமாறு:

    மூவுலகும் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த

    பூவை உறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித்

    தேவர் உலகினும் விளங்கும் புகழ்கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும்

    பாவை இருதாள் தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சுகின்றான்.

    கொழுதியிசை அளிமுரலும் தாமரையென் பொகுட்டிலுறை கொள்கைபோல மழையுறழுந் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே!

    முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே! கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங்

    கழிபெருங்காதலில் தொழுவோர் வினைதீர அருள் கொழிக்குங் கமலக்கண்ணாய்!

    கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய

    விமலைபசுங் கழை குழைக்கும் வேனிலான் தனையீன்ற விந்தை தூய

    அழுதகும்ப மலர்க் கரத்தாய் பாற்கடலுள் அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்

    திமிரகன்றிட வொளிருஞ் செஞ்சுடரே என வணக்கம் செய்வான் மன்னோ

    மடற்கமல நறும்பொகுட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன்

    கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாங் காவல் பூண்டான் யடைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும் துடைத்தனன் நின்பெருங்கீர்த்தி எம்மனோரால எடுத்துச் சொல்லற் பாற்றோ

    மல்லல் நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும்

    கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சியோடும்

    வெல் படையில் பகை துரந்து வெஞ்சமரில் வாகை புனை வீரர் தாமும்

    அல்லிமலர் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள் நோக்கம் அடைந்துளாரே!

    செங்கமலப் பொலந்தாதில் திகழ்தொளிரும் எழில் மேனித் திருவே வேலை அங்கண்உல கிருள் துலக்கும் அலர்கதிராய் வெண் மதியாய் அமரர்க்கூட்டும் பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங் கானில் யருப்பில் மண்ணில் எங்குளை நீ அவணன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்பதம்மா!

    • குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும்.
    • இந்தோ சீனாவிலும் திருமகளின் வழிபாடு நிலவுகிறது.

    இரு யானைகளுடைய லட்சுமி

    யானைகள் இரு புறமும் கலச நீராட்டும் லட்சுமியே எங்கும் சாதாரணமாகத் தென்படும் உருவம்.

    முதன் முதல் இந்த கஜலட்சுமியின் வடிவிலேயே சிற்பியின் கனவு எழுந்தது.

    ஸ்ரீசுக்தத்தின் வருணனையே இதற்கு அடிப்படையாகும்.

    வேத காலத்திலேயே வேரூன்றிப்போன இந்தக் கற்பனையை கல்லில் எங்கும் காணலாம்.

    லட்சுமி வழிபாடும் பூஜையும்

    பில்லர்கள் எனும் தொல்குடியினரின் தெய்வம் லட்சுமியே.

    தென்னாட்டில் மாலர் என்ற வகுப்பினர் ஆறு கலயங்களை அடுக்கி அவற்றைத் திருமகளாகப் பாவித்து கும்பிடுகின்றனர்.

    குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும்.

    ஆனால் நம் ரீதியில் அன்று லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.

    சுக்ரநீதி சாரத்தில் வீணை ஏந்திய தியான ஸ்லோகம் வருகிறது.

    மகாராஷ்டிரத்தில் உழவர்கள் லட்சுமியைத் தொழுகின்றனர்.

    பயிர் வளத்தைக் காட்டும் தேவதை அவள். ஒரு மரத்தின் கீழ் ஐந்து கற்களை நிறுத்தி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கோதுமை மாப்படையல் சாத்துவர்.

    மாலைப்பொழுது இளங்கதிர்களைக் கொய்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள்.

    அத்துடன் துணியில் மறைத்து ஒரு விளக்கினையும் ஏந்தி வருவர். அதுவே அவர்களுடைய லட்சுமி.

    ராஜபுதனத்தில் லட்சுமியை அன்ன பூரணியாக உபசரிக்கின்றனர்.

    தாணியம் அளக்கும் "காரி" என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்து தாமரைப் பூக்களால் அலங்கரிப்பார்கள்.

    இந்தோ சீனாவிலும் திருமகளின் வழிபாடு நிலவுகிறது.

    அவள் தலையில் முத்துக் கிரீடமும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பாள்.

    மேற்புறக் கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். நாகக்குடை பூண்டிருப்பாள்.

    கல்லறைகள் மீது திருமகள் உருவைப் பொறிப்பது அந் நாட்டு வழக்கம்.

    தெலுங்கரும், தமிழகத்தில் ஸ்மார்த்த மரபினரும் வரலட்சுமி விரதத்தைக்கொண்டாடுவார்கள்.

    கோஜாகர பூர்ணிமை விரதம் வங்காளிகளிடையே நிலவும் லட்சுமி பூஜை.

    • இவளை வணங்குபவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற லட்சுமி அடையமாட்டாள்.
    • மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள்

    மகாலட்சுமியின் பெருமை

    மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள். தங்கம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள்.

    சந்திரன் போன்று இருப்பவள் இவளுடைய திருவருளால்தான் பொன், பசுக்கள் குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறையப் பெற முடியும். ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள்.

    மந்தகாச முகமுடையவள். தங்க பிராகாரங்களைக் கொண்டது இவள் பவனம், கருணையுடையவள்.

    வஸ்திரம், ஆபரணம், அழகு இவற்றால் மிகவும் பிரகாசிப்பவள்.

    அனைத்தும் தன்னிடம் நிரம்பியிருப்பதால் திருப்தியுடையவள் பக்தர்களையும் திருப்திப்படுத்துபவள்.

    தாமரைமலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள் மிக்க உதார குணமுடையவள்.

    இவள் "ஈம்" என்ற பீஜாட்சரத்தை உடையவள் இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள்.

    இவளை வணங்குபவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற லட்சுமி அடையமாட்டாள்.

    தரித்திரத்தையும் குறைவையும் இவள் அகற்றும் சக்தி படைத்தவள்.

    மகாலட்சுமி சூரியன் போன்றும் பிரகாசிப்பாள் இவளுடைய தவத்திற்காகவே வில்வமரம் தோன்றியது.

    இவளை உபாசனை செய்ய குபேரனும் அவன் கஜானா அதிபதியான மணிபத்ரனும், சிந்தாமணி ரத்னத்துடன் கீர்த்தி என்பவளும் பக்தன் வீடு தேடி வந்தடைவர்.

    இவள் வருவதற்கு வழியாகின்றது சுகந்தம். இவளே செழிப்பைத் தருபவள் கோமியத்தில் வாசம் செய்பவள்.

    சர்வ தேவதைகளுக்கும் இவளே ஈஸ்வரி. ஆசையை நிறைவேற்றி, வாக்குக்கு சத்தியத்தை அளித்து, ரூபமளித்து, உண்ணும் பொருள்களுக்கு ருசியையும் அளிப்பவள்.

    மகாலட்சுமியின் திருக்குமாரர் கர்தமர் சிக்லீதர் என்பவரும் இவள் அன்புக்குமாரரே.

    இவள் கையில் பிரம்பு வைத்திருப்பாள்.

    செங்கோல் செலுத்தும் ராஜலட்சுமி இவள். இந்த பெருமைகளை யெல்லாம் பெற்ற ஸ்ரீமகாலட்சுமி நம்மைவிட்டு அகலாதிருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்க வேண்டும்.

    • வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.
    • ஒரு சங்கின் சுருள்பகுதி அதன் வாய்பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரிசங்கு.

    செல்வம் தரும் வலம்புரி சங்கு

    கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல் வகை புழுக்கள் தனக்கு பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு.

    சிறியதாக குறுகிய அளவானவை பெண் சங்குகள். சற்றுபருத்த திடசங்குகள் ஆண் சங்குகள்.

    சங்குகளின்மேல் உள்ள வரிகளை (கோடுகள்) வைத்து வலம்புரிச்சங்கு, இடம்புரிச்சங்கு என்று கூறுவார்கள்.

    ஒரு சங்கின் சுருள்பகுதி அதனுடைய வாய்பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது வலம்புரி சங்கு எனப்படும்.

    ஒரு சங்கின் சுருள்பகுதி அதன் வாய்பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரி சங்கு.

    வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு அகியவற்றில் வலம் புரிச்சங்குதான் அபூர்வமானதும், சிறப்பானதும் ஆகும்.

    இந்த வலம்புரி சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. எனவே இதற்கு அரிய தெய்வீக சக்தி உண்டு.

    தூய்மையான வெண்ணிறத்துடன் நீண்டு மூன்றில் ஒருபங்கு நீளத்தில் வாலும், தலைப்பாகத்தில் ஏழு சுற்றும் அமைந்து சங்கின் சுற்றளவு அடிமுடி நீளத்திற்கு சமமாக இருப்பது சிறப்பு நீளம் அதிகமாக இருந்தால் மிகச் சிறப்பு.

    ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இடது கையில் உள்ளது வலம்புரி சங்கு. இந்தச்சங்கை காதில் வைத்துக்கேட்டால் "ஓம்" என்ற சப்தம் கேட்கும்.

    வலம்புரிச்சங்கை வீட்டில், வியாபார இடங்களில் சுத்தமாக வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் மற்றும்பலவித நன்மைகள் கிடைக்கும்.

    மாமிசம் சாப்பிட்ட அன்றும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச்சங்கைத்தொடக்கூடாது.

    சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளி தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைக்கக்கூடாது.

    செல்வத்திற்கு அதி தெய்வமான மகாலட்சுமி பிறந்த ஆடிமாதம் பூர நட்சத்திரலும், இந்திரன் லட்சுமியை வணங்குகிற புரட்டாசி பவுர்ணமியிலும், ஆனி மாதம் சுக்லபட்சம் கூடிய அஷ்டமியிலும், சித்ரா பவுர்ணமியிலும்

    வலம்புரிச்சங்கில் பசும்பால் வைத்து மலர்களால் சங்கினையும், லட்சுமியையும் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அதிரசம், லட்டு ஆகியவைகளை பசு நெய்யில் செய்துபால்பாயசம் செய்துபசு நெய் ஊற்றி விளக்கேற்றி இரவு 10.00 மணியிலிருந்து 1.00 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும்.

    இப்படி செய்தால் எல்லாவித செல்வங்களும் வந்து சேரும். இது தவிர செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சங்கிற்கு பூஜை செய்யலாம்.

    ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய்,பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை விட்டு வாசற்படியில் தெளிக்கவும்.

    இப்படி 90 நாள் செய்தால் திருஷ்டி, போட்டி பொறாமை நீங்கும்.

    ஆண், பெண் ஆகியோருக்கு இருக்கும் திருமண தோஷம், செவ்வாய் தோஷம் நீங்க சங்கில்பசும்பால் விட்டு 27 செவ்வாய்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.

    குழந்தைகளுக்கு இதில்பசும்பால் ஊற்றி வைத்துப்பாலாடையாகப் புகட்ட நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

    வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.

    இச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய்து அதை அருந்தினால் வியாதிகள் குணமடையும்.

    • பத்மபுராணம் கூறுகிறது விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று
    • வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி,பச்சை நிறமுடைய பரீதி தேவி

    விஷ்ணுபரிவார சக்திகளில் ஸ்ரீ மஹாலட்சுமி

    பத்மபுராணம் கூறுகிறது விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று புதிதாக இருக்கிறதல்லவா?

    அதில் இரு பரிவார சக்திகள் சற்று வித்தியாசமாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    தகதகக்கும் தங்க நிறம் உடைய ஸ்ரீ தேவி, வெள்ளை நிறமுடைய பூமிதேவி.

    வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி,பச்சை நிறமுடைய பரீதி தேவி,

    சிவப்பு நிறமுடைய கீர்த்தி தேவி, நிறமற்று ஸ்படிகம் போல ஊடுருவும் கண்ணாடித் தன்மையுள்ள சாந்தி தேவி,

    மஞ்சள் நிறமுடைய துஷ்டி தேவி,பச்சை நிறமுடைய புஷ்டி தேவி,

    என்பவர்களே அந்த விஷ்ணுசக்திகள்.

    இவர்கள் எண்மரும் நான்கு திருக்கரங்கள் கொண்டு அவற்றில் மேல் இரு திருக்க்கரங்களில் இரு தாமரை மலர்களும்,

    கீழே வலது கரம் அபயகாஸ்தமாகவும் இடது கரம் வரத காஸ்தமாகவும் அபிநயம் புரியும்படி பரிவார சக்திகளாக அமைந்திருப்பார்கள்.

    • மகா கணபதி ஹோமம் - தடையின்றி செயல்கள் நடைபெறவும், லட்சுமி கடாச்சம் பெறவும்.
    • பெளர்ணமியில் பால், தேன் நெய், பழத்தை தோய்த்து ஹோமம் செய்ய அரசனாவான்.

    ஹோம பலன்கள்!

    உத்திராடம், உத்திரட்டாதி, உத்திரம் இந்த நட்சத்திரங்களில் ஸ்ரீமகாலட்சுமியை ஆவாகானம் செய்து ஆயிரம் நந்தியாவட்டை மலர்களால் ஹோமம் செய்து ஐஸ்வர்யம் நிலையாய் இருக்கும.

    பெளர்ணமியில் பால், தேன் நெய், பழத்தை தோய்த்து ஹோமம் செய்ய அரசனாவான்.

    பஞ்சமி திதியிலும், வெள்ளிக்கிழமையிலும் வாசனை புஷ்பத்தால் ஹோமம் செய்யஒரு வருடத்திற்குள் அனைத்து சம்பத்துக்களையும் அடைந்து செல்வந்தனாவான்.

    மகா கணபதி ஹோமம் - தடையின்றி செயல்கள் நடைபெறவும், லட்சுமி கடாச்சம் பெறவும்.

    சந்தான கணபதி ஹோமம் - நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட புத்திர பாக்கியம் கிட்டும்.

    வித்யா கணபதி ஹோமம் - கல்விக்காக

    மோகன கணபதி ஹோமம் - திருமணத்திற்காக

    ஸ்வர்ண கணபதி ஹோமம் - வியாபார லாபத்திற்காக

    நவகிரக ஹோமம் - நவகிரகங்களினால் நன்மை ஏற்பட

    லெட்சுமி குபேர மகாலட்சுமி ஹோமம் - ஏழையும் செல்வந்தனாவான்

    துர்க்கா ஹோமம் - எதிரிகளின் தொல்லை அகல

    சுதர்சன ஹோமம் - கடன் தொல்லை நீங்க,பில்லி சூன்யம் அகல

    ஆயுஷ் ஹோமம் - ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்

    மிருத்துந்தய ஹோமம் - ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்

    தன்வந்திரி ஹோமம் - நோய் நிவாரணம்

    ஸ்வயம்வரா ஹோமம் - திருமணதடை அகல, விரைவில் கைகூட

    சந்தான கோபால கிருஷ்ணஹோமம் - குழைந்தை பேறு கிடைக்க

    மேதா தட்ஷிணாமூர்த்தி ஹோமம் - மேற்கல்வி, தெளிந்த சிந்தனை கிடைக்கும்.

    • சென்னை வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.
    • வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.

    வடபழனி முருகன் கோவில்!

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.

    செவ்வாய் தோஷம் உடையவர்களும், செவ்வாய்க் கிரகத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இதனை வழிபட மிகச்சிறப்பான பலனைத்தரும்.

    செவ்வாய் தோஷம் நீங்கிட வடக்குவாசி என்று அழைக்கப்படும் ஸ்ரீ துர்க்கை அம்மன் தெற்கு நோக்கி இருக்கும் சங்கரன் கோவிலில் வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாக அமையும்.

    மேலும் செவ்வாய் பகவானின் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் பழனி, சுவாமிமலை, நீங்கலாக மற்ற இடங்களில் உள்ள முருகப்பெருமாளை வழிபடுவது சிறப்பாகும்.

    செவ்வாய், கடகம், மகரம், மீனம் இவற்றில் அமர்ந்து தோஷம் எற்படுத்தினால் திருச்செந்தூர் முருகனை வழிபடுவது சிறப்பு.

    பொதுவாக செவ்வாய் பகவானால் திருமண தோஷம் அடைந்தவர்கள் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபடுவதே சிறப்பைத்தரும்.

    தனிச் சன்னதிகள்

    இக் கோவிலில் பல தெய்வங்களுக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. வரசித்தி விநாயகர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னதிகள் இங்கு உள்ளன.

    இக்கோவிலின் உட்பிரகாரத்தில் மூலவர் பழநி முருகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    இங்கு முருகன் காலில் பாதரட்சைகளுடன் காட்சியளிக்கிறார். நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய்க்கென்று ஒரு தனிச் சன்னதி இருக்கிறது.

    மேலும் இங்கு தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன.

    இக்கோவில், திருமணங்களுக்கும் மத சொற்பொழிவுகளுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு விசாலமான மண்டபத்தைக் கொண்டுள்ளது.

    இது சென்னையில் உள்ள மக்கள் அடிக்கடி வரும் முருகன் ஆலயங்களில் ஒன்றாக இருக்கிறது.

    இந்த கோவிலின் முன்புற இராஜ கோபுரத்தில், கந்த புராணக் காட்சிகள் வண்ணமயமாக விளக்கப்பட்டுள்ளன.

    இக்கோவிலின் முன்புறம் திருக்குளம் உள்ளது. இங்கு தைப்பூசம் மற்றும் விழாக் காலங்களில் 'தெப்போற்சவம்' நடைபெறுகிறது.

    இதன் கிழக்கு கோபுரம் 40.8.மீ உயரம் கொண்டது. இதில் 108 பரதநாட்டிய நடன அசைவுகள் காணப்படுகின்றன.

    இக்கோவிலின் தல விருட்சமாக அத்தி மரம் உள்ளது.

    • செவ்வாய் பகவானுக்கு மங்களன் என்ற பெயர் உண்டு.
    • முஸ்லீம் முதலிய வேற்று மதத்தவர்களும் இந்தப்பரிகாரத்தை செய்கின்றனர்.

    சிறுகுடி மங்களேஸ்வரர் கோவில்!

    திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் பூந்தோட்டத்துக்கு முன்பாக உள்ள நாச்சியார் கோவில் செல்லும் பாதையில் சென்று,

    கடகம்பாடி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து வலப்புறமாக செல்லும் பாதையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் திருச்சிறுகுடியை அடையலாம்.

    அம்பிகையைக் கைப்பிடியளவு மணலால் பிடித்து வைத்து, மங்கள தீர்த்தம் உண்டாக்கி இறைவனை வழிபட்ட தலம்.

    இதுவே சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று.

    செவ்வாய் பகவானுக்கு மங்களன் என்ற பெயர் உண்டு.

    அதனால்தான் செவ்வாய்க் கிழமையை மங்கள வாரம் என்பார்கள்.

    இத்திருத்தலம் செவ்வாய் பகவானால் வழிபடப்பட்டதால், இத்தலத்து விநாயகர், மங்கள விநாயகர் என்றும்,

    இறைவன், மங்கள நாதர் என்றும், அம்பாள், மங்கள நாயகி என்றும், தீர்த்தம், மங்கள தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

    செவ்வாய் தோஷமுள்ளவர்கள், செவ்வாய்க்கிழமை காலை, மாலை இருநேரமும் மங்கள தீர்த்தத்தில் நீராடி, மங்கள விநாயகர், மங்கள நாயகி, மங்கள நாதர் ஆகியோரை வழிபட்டு திருநீறு பெற்றுக் செல்ல வேண்டும்.

    முஸ்லீம் முதலிய வேற்று மதத்தவர்களும் இந்தப்பரிகாரத்தை செய்து திருநீறு பெற்று செல்வது இத்திருத்தலத்தில் உள்ள ஆச்சரியப்படத்தக்க அதிசயமாகும்.

    மாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இங்கு பிரசித் தம், விசேஷ வழிபாடுகள் உண்டு.

    • ஒரு துளி அமிர்தம் கடம்பவன காட்டில் வீழ்ந்து சுயம்பு லிங்கமாக மாறியது.
    • பிற்காலத்தில் கடம்பவனம் கடம்பூர் என வழங்கலாயிற்று.


    மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்!

    புராண வரலாறு

    தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமுத கலசம் பெற்றனர். முழு முதற்கடவுளான விநாயகரை வழிபடாமல் அமுதுண்ண அமர்கின்றனர்.

    அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி விநாயகர் அமுதகலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்துவரும் வழியில் ஒரு துளி அமிர்தம் கடம்பவன காட்டில் வீழ்ந்து சுயம்பு லிங்கமாக மாறியது.

    அவரே இத்தல அமிர்தகடேசுவரர்.

    பிற்காலத்தில் கடம்பவனம் கடம்பூர் என வழங்கலாயிற்று. தல மரமும் கடம்ப மரமாக ஆனது.

    இத்திருக்கோயிலை இந்திரனின் தாய் தினம்தோறும் வந்து வழிபட்டாள்.

    தன் தாயின் கடமையை எளிதாக்க எண்ணி இந்திரன் இத்தல இறைவனையும், பிற தெய்வங்களையும் அழகிய தேரில் வைத்து எடுத்து செல்ல முற்பட்டான.

    தலவினாயகரின் அனுமதி பெறாமல் காரியம் செய்ய முற்பட்டதால் விநாயகர் அவன் ஆணவத்தினை அடக்க விசுவரூபம் எடுத்து அவன் தேரினை காலால் அழுத்த, தேர் கல்லாய் சமைந்தது.

    பிழை உணர்ந்த இந்திரன் பாப விமோசனம் கோருகிறான்.

    ஓர் நாழிகையில் கோடி லிங்கம் பிரதிட்டை செய்ய ஆணையிடுகிறார், செய்ய இயலாமல் போகவே ருத்திர கோடி ஜபம் செய்து ஒரு லிங்கம் பிரதிட்டை செய்து பிழைநிவர்த்தி பெறுகிறான்.

    ருத்ரகோடி ஜபம் செய்து பிரதிட்டை செய்த அக்கோயில் இத்தலத்தின் கிழக்கே ஒரு கி.மி. தூரத்தில் ருத்ரகோடீச்வரர் ஆலயம் என்ற பெயரில் விளங்குகிறது.

    அப்பர் தேவாரத்தில் "கடம்பூர் இளங்கோயில் தன்னில் கயிலாய நாதனை காணலாமே" என போற்றுகிறார்.

    நீண்ட காலமாய் சிதிலமடைந்திருந்த இக்கோயிலை தமிழக தொல்பொருள் துறை மூலம் புதுப்பிக்கப்பட்டு விமான கட்டுமானம் இன்றி காட்சி தருகிறது.

    இது கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் அமைந்துள்ளது.

    செவ்வாய்ப்பகவான் வழிபட்டதோடு அவரது அதி தேவதையாகிய முருகப்பெருமான் இங்கு வழிபட்டு வில் பெற்ற சிறப்புத்தலமும் ஆகும்.

    எனவே இத்திருத்தலம் செவ்வாய்த் தோஷ பரிகாரத்துக்கு சிறப்பான ஒரு தலமாகும்.


    • இத்தலத்தில் முருகனை செவ்வாய் பகவன் வழிபட்டார்.
    • முதலில் சண்முகா நதி, சரவணப்பொய்கையில் நீராட வேண்டும்.

    முருகனின் ஆறுபடை வீடுகளில் பழனி ஒன்றாகும். இத்தலத்தில் முருகனை செவ்வாய் பகவன் வழிபட்டார்.

    பழனி முருகனை வழிபட செல்பவர்கள் முதலில் சண்முகா நதி, சரவணப்பொய்கையில் நீராட வேண்டும்.

    பிறகு மலை அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட வேண்டும்.

    பிறகு 450 அடி உயரத்தில் உள்ள மலையில் ஏறி போகரால் செய்து அமைக்கப்பட்ட நவபாஷான முருகனை தரிசிக்க வேண்டும்.

    செவ்வாய் தோஷத்தால் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், இத்தலம் சென்று பரிகாரம் செய்யக்கூடாது.

    அவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சிறுகுடி, மேலக் கடம்பூர் போன்ற தலங்களுக்கு சென்றே பரிகாரம் வழிபாடு செய்யவேண்டும்.

    சாதாரண செவ்வாய் தோஷ பரிகாரத்துக்கே பழனி முருகனையும் சுவாமிமலை முருகனையும் தரிசிக்க வேண்டும்.

    திருமண தோஷத்திற்கு மட்டும் செல்ல கூடாது இதனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.



    • திருமணத்தடை நீங்க-திருமணஞ்சேரி
    • மேல் படிப்பில் வெற்றிபெற-திருப்பதி மூகாம்பிகை அம்மன், வடிவுடை அம்மன்.

    பரிகார திருக்கோவில்கள்

    திருமணத்தடை நீங்க:

    திருச்செந்தூர், திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருப்பதி, மாயவரம், மேதா தட்சிணா மூர்த்தி.

    குழந்தை பாக்கியத்திற்கு:

    ஆலங்குடி, சென்னை திருவுடை அம்மன், இருக்கன்குடி மாரியம்மன், தென்குடித் திட்டை குரு பகவான்.

    மேல் படிப்பில் வெற்றிபெற:

    திருப்பதி மூகாம்பிகை அம்மன், திருவொற்றியூர் வடிவுடை அம்மன்.

    தொழில் செழிக்க, வியாபாரம்பெருக:

    ஆலங்குடி, திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி, பட்டமங்கலம் குரு தட்சிணாமூர்த்தி.

    வழக்கில் ஜெயிக்க, செய்வினை ஒழிய:

    அனுமந்தபுரம் வீரபத்ர சுவாமி, வெக்காளி அம்மன், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி, பண்ணாரி அம்மன்.

    ஆன்மிகத்தில் தெளிவு வர:

    திருவண்ணாமலை, திருவாலங் காடு, பிள்ளையார்பட்டி, மதுரை மீனாட்சி திருவலிதாயம் தட்சிணாமூர்த்தி.

    கடன் பிரச்சனை நீங்க:

    மாங்காடு காமாட்சி, மதுரை பாண்டி கோவில், சுசீந்திரம் தாணுலிங்கேஸ்வரர், திருவனந்தபுரம் ஆற்றுகரை அம்மன்.

    புதிய தொழில் கிடைக்க, வருமானம்பெருக:

    திருப்பதி, சென்னை காளிகாம்பாள், கீழ ஈரால் காமாட்சி அம்மன், நெல்லை ஆழ்வார்திருநகரி வாமன அவதார திருக்கோவில்.

    ×