search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தி"

    • பூமியிலேயே மிகப்பெரிய சுயம்பு லிங்க மூர்த்தியாக திருவண்ணாமலை கூறப்படுகிறது.
    • மலையின் மேல் உள்ள ஒவ்வொரு கல்லும் ஒரு சுயம்புலிங்கமே!

    ஆதி சிவன் தன் திருமேனியையே மலையாகக்கொண்ட இத்தலம் தற்போது கல்மலையாகக் காட்சியளிக்கின்றது.

    ஆனால் அதனுள் பொதிந்து கிடக்கும் ஆன்மீக பொக்கிஷங்களோ ஏராளம் ஏராளம்.

    பூமியிலேயே மிகப்பெரிய சுயம்பு லிங்க மூர்த்தியாக திருவண்ணாமலை கூறப்படுகிறது.

    மலையின் மேல் உள்ள ஒவ்வொரு கல்லும் ஒரு சுயம்புலிங்கமே!

    எனவேதான் திருவண்ணாமலை தலத்தில் உள்ள சிறு மண்ணையோ, கல்லையோ எவரும் எங்கும் எடுத்துச் செல்லக்கூடாது என்பார்கள்.

    "அடிக்கொரு லிங்கம், அடித்துகள் பட்ட இடமெல்லாம் கோடி கோடி லிங்கங்கள்" என்று ஸ்ரீஅகஸ்திய கிரந்தம் வர்ணிப்பதன் ஆன்மீக ரகசியம் இதுவே!

    • திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது.
    • செவ்வாய், புதன் - தக்காளி, கீரை சாதம்

    திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது.

    திருவண்ணாமலையில் யார் ஒருவர் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களோ அவர்களது கர்ம வினைகள் நீங்கும்.

    அதிலும் எந்த தினத்தில் எந்த வகை சாதத்தை தானம் செய்ய வேண்டும் என்று ஒரு விதி உள்ளது.

    ஞாயிறு - எலுமிச்சை சாதம்.

    திங்கள் - தேங்காய் சாதம்

    செவ்வாய், புதன் - தக்காளி, கீரை சாதம்

    வியாழன், வெள்ளி - பொங்கல் சாதம்

    சனி - புளியோதரை

    இந்த ஐதீகப்படி பார்த்தால் வரும் கார்த்திகை தினத்தன்று வெள்ளிக்கிழமை என்பதால் பொங்கல் வகைகளை தானம் செய்யலாம்.



    • கிரிவலம் வரும்போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம்.
    • அவரவர் நட்சத்திரம், ராசிக்கு உரிய லிங்கத்தை வழிபட்டால் நலம் உண்டாகும்.

    கிரிவலம் வரும்போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம்.

    இவை ஒவ்வொன்றும், எட்டுத் திசைகளின் காவல் தெய்வங்கள், வெவ்வேறு ராசியின் அதிபதிகள்,

    அவரவர் நட்சத்திரம், ராசிக்கு உரிய லிங்கத்தை வழிபட்டால் நலம் உண்டாகும்.

    • ரிஷபம், துலாம் - இந்திர லிங்கம்

    • சிம்மம்- அக்னி லிங்கம்

    • விருச்சிகம் - எம லிங்கம்

    • மேஷம்- நிருதி லிங்கம்

    • மகரம், கும்பம் - வருண லிங்கம்

    • கடகம்- வாயு லிங்கம்

    • தனுசு, மீனம் - குபேர லிங்கம்

    • மிதுனம், கன்னி- ஈசான்ய லிங்கம்


    • இறைவன்,தேவியை ஆட்கொண்டு தம் இடப்பாகத்தை தேவிக்கு அருளியதாக புராணம் கூறுகிறது.
    • மலைச்சரிவின் ஒரு விளிம்பில், ரிஷப வாகனத்தின் தலைப்பகுதி மட்டும் தெரியும்.

    இறைவனின் இடப்பாகத்தைப் பெற பார்வதிதேவி திருவண்ணாமலை கோவிலில் தவம் இயற்றி அப்பேற்றைப் பெற்றார்.

    தேவியின் தவ வலிமை கண்டு இரங்கிய இறைவன் "மலை சுற்றும் வழியில் ரிஷப வாகனத்தில் வந்து ஆட்கொள்வேன்" என்றார்.

    அதன்படி தேவி மலைவலம் வரும்போது நிருதி திசையின் திருப்பத்தில், ரிஷப வாகனத்தில் வந்த இறைவன்,

    தேவியை ஆட்கொண்டு தம் இடப்பாகத்தை தேவிக்கு அருளியதாக புராணம் கூறுகிறது.

    நிருதி லிங்கத்தை அடையும் இடத்திலிருந்து தெற்கிலிருந்து மேற்கு முகமாகத் திரும்பும் வளைவில்,

    மலை வலம் வருவோர் நின்று மலையைப் பார்த்தால் மலைச்சரிவின் ஒரு விளிம்பில்,

    ரிஷப வாகனத்தின் தலைப்பகுதி மட்டும் தெரியும்.

    செங்கம் செல்லும் பாதையில் இருந்து பார்த்தாலும் இவ்வரிய காட்சியைக் காணலாம்.

    பதிகங்கள் பிறந்த தலம்

    திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய சமயப் பெரியார்கள் அண்ணாமலையானைப் பற்றி பாடி, பதிகங்களையும் இயற்றியுள்ளனர்.

    முக்கியமாய் மாணிக்கவாசக சுவாமிகள் பாடிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி இத்தலத்தில் சிறந்தது.

    இதுவுமன்றி, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம் கந்தரனுபூதி, திருவகுப்பு முதலிய முருகப் பெருமான் திருவடிப்புகழ் நூல்கள் இங்கு தான் இயற்றப்பட்டன.

    • மலை சுற்றும் பாதையில் இரண்டாகத் தெரியும். அது அர்த்த நாரீஸ்வர தத்துவம்.
    • மலையின் மேற்றிசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். அது திரிமூர்த்தி தத்துவம்.

    திருவண்ணாமலை தலத்தில் எட்டு திசையில் இருந்து பார்க்கும் போதும் மலை எட்டுவித அமைப்பாய் தெரியும்.

    மற்ற இடங்களில் மலை மேல் கடவுள். இங்கு மலையே கடவுள்.

    இங்கு மலை வடிவில் சுயம்பு என்பதால், தீபத் திருநாளன்றி வேறெந்த நாளிலும் மக்கள் மலை ஏறுகிறதில்லை.

    இத்தனை பெரிய சுவாமிக்கு எப்படி அபிஷேக ஆராதனை நடத்துவது?

    சாமான்ய உள்ளங்களில் மருட்சி ஏற்படும். எனவே தான் ஈசன் மலை அடிவாரத்தில் ஒரு சிறிய சுயம்பு லிங்கமாய் அமர்ந்து கொண்டார்.

    இதுதான் இன்றைய அண்ணாமலையார் கோவில்.

    கீழ்த்திசையில் இருந்து நாம் மலையைப் பார்க்கின்ற போது ஒற்றையாய் தெரியும். அது ஏகலிங்க தத்துவம்.

    மலை சுற்றும் பாதையில் இரண்டாகத் தெரியும். அது அர்த்த நாரீஸ்வர தத்துவம்.

    மலையின் மேற்றிசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். அது திரிமூர்த்தி தத்துவம்.

    மலையை சுற்றி முடிக்கின்ற கட்டத்தில் ஐந்து முகங்களாகக் காணப்படும். இது ஈஸ்வரனின் பஞ்சமுக தத்துவம்.

    இப்படி அநேக தத்துவங்களை தன்னுள் அடக்கி அமைதியாய் கொலுவீற்றிருக்கிறது அண்ணாமலை.

    • அருணாசலத்தில் மலையே லிங்கமாக உள்ளது.
    • அருணாசலத்தின் கீழ்ப்புறம் ஒரு மலையில் இந்திரன் இருந்து இறைவனைத் துதிக்கிறான்.

    திருவண்ணாமலையை முக்தி நகரம் என்றும், தட்சிண கயிலாயம் என்றும் போற்றுகிறார்கள்.

    அது விஷ்ணுவும், பிரம்மனும் பூஜித்த தலமாகும்.

    அருணாசலம், இன்று, நேற்று தோன்றியதல்ல.

    ஏழுலகமும், ஆகாயமும் என்று உண்டாயினவோ அன்றே உண்டானது.

    அசுர லிங்கம், தைவ லிங்கம், மானிட லிங்கம், சுயம்பு லிங்கம் என்று தலங்கள் தோறும் எத்தனையோ லிங்கங்கள் இருக்கும்.

    ஆனால், அருணாசலத்தில் மலையே லிங்கமாக உள்ளது.

    முன்னொரு காலத்தில் சிவனே கிரியானான்.

    அருணாசலத்தின் கீழ்ப்புறம் ஒரு மலையில் தேவர் கோனாகிய இந்திரன் இருந்து இறைவனைத் துதிக்கிறான்.

    தென்புறக் குன்றில் இமயன் இருந்து வணங்குவான்.

    மேற்புறத்தில் வருணன் கைகூப்பிப் பணிகிறான்.

    வடதிசைக் குன்றில் குபேரன் இருந்து தோத்திரம் செய்கிறான்.

    மற்ற நான்கு திக்குகளில் இருக்கின்ற மலைகளில் தங்கி வாயு, அக்கினி, ஈசான்ய, நிருதிகள் வணங்குவர்.

    இவற்றைச் சுற்றி உள்ள மற்ற மலைகளில் தேவர்களும், சித்தர்களும், அஷ்ட வசுக்களும் இருந்து இறைவனைப் போற்றுகின்றனர்.

    வேள்வி, தியானம், யோகம் என்று எத்தனை புரிந்தாலும் அண்ணாமலையானை எண்ணாவிடில் முக்தி என்பது சாத்தியம் இல்லை.

    இத்தகைய பெரும் சிறப்புகளை கொண்ட இதனை, "எத்தலத்துக்கும் மூலம் அருணாசலம்" என்று உரைத்தார் நந்தி தேவர்.

    • அக்னி கோவிலுக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை.
    • இந்த கோவிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்க்கிழமை விசேஷ வழிபாடு நடக்கும்.

    மலைவலம் வர சிறந்த நாள் பவுர்ணமி, சிவராத்திரி கிரிவலம் மிகச்சிறப்பு என்று முன்பே பார்த்தோம்.

    இதைவிட அதி சூட்சுமமான "வியா தீபாத யோக நாள்" அன்று மலை வலம் வந்தால் நினைத்த காரியம் சித்தி அடையும் என்று கூறுகின்றனர்.

    இந்த நாளை பாம்பு பஞ்சாங்கம் மற்றும் அர்ச்சகர் பஞ்சாங்கங்களில் மட்டுமே மதிப்பிடுவதாகவும் கூறுகின்றனர்.

    அருணாசலேஸ்வரருக்கு சிறந்த நாள்

    சிவன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கட்கிழமையாக இருக்கும்.

    ஆனால் திருவண்ணாமலை அக்னி மலை. இதனால் தான் அருணாசலம் என்ற பெயரும் உண்டு.

    அருணம் என்றால் சிவப்பு என்று பொருள். இந்த கோவில் அக்னி கோவில்.

    அக்னி கோவிலுக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை. அக்னிக்குரிய காரகன் அங்காரகன்.

    ஆகவே இந்த கோவிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று விசேஷ வழிபாடு நடக்கும்.

    அதுபோலவே செவ்வாய்க்கிழமை அன்று வழிபடுவோர் பிறவி பிணியில் இருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது.

    • தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது.
    • நீரை தவிர வேறு எதையும் உட்கொள்ளகூடாது எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.

    தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது.

    கிரிவலம் வரும் பொழுது மிகவும் மெதுவாக நடக்க வேண்டும்.

    இறை சிந்தனையோ, நாம ஜபமோ இருந்தால் நல்லது.

    கர்ப்பிணி பெண் போல நடக்க வேண்டும் என்பார்கள்.

    எப்பொழுதும் தன் வயிற்றில் இருக்கும் சிசுவின் மேல் கவனம் இருப்பது போல மந்திரத்தில் கவனமும், சீரான நடையும் இருக்க வேண்டும்.

    நீரை தவிர வேறு எதையும் உட்கொள்ளகூடாது எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.

    மலையை ஒட்டி ஒரு காட்டு வழிச்சாலை இன்றும் உண்டு.

    தகுந்த வழிகாட்டியுடன் சென்றால் அந்த பாதை எது என புலப்படும் இது உள்வழிப்பாதை.

    இது போல மலையின் மேல் பகுதியில் ஒரு கிரிவலப்பாதை உண்டு.

    ஒரு சிவலிங்கத்தை கவனித்தீர்கள் என்றால் மேல் பகுதியிலிருந்து கீழ்பகுதி வரை மூன்று வட்டப்பகுதிகள் இருக்கும்.

    லிங்கப்பாதை என்ற இந்த தன்மையைத்தான் இந்த மூன்று கிரிவலப்பாதையும் குறிக்கிறது.

    ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் 15 லட்சம் பேர் கிரிவலம் வருகிறார்கள்.

    பவுர்ணமிக்கு அடுத்த நாள் கிரிவலப்பாதையை பார்த்தால் அவர்களின் பக்தி புரியும்.

    முன் காலத்தில் விளக்கு வசதி இல்லை.

    அதனால் காட்டுப்பாதையாக இருந்தால் பவுளர்ணமி அன்று மட்டும் வலம் வந்தார்கள்.

    தற்காலத்தில் நவீன மின்வசதிகள் உண்டு அதனால் எல்லா நாட்களிலும் வலம் வரலாம்.


    • புனித தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு.
    • ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார்.

    புனித தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு.

    பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது.

    கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா இனம் புரியாத உயர் நிலைக்கு அழைத்து செல்லப்படுகிறது.

    அவ்வாறு கிரிவலத்தின் மேன்மையை உணர வேண்டுமானால் கிரிவலம் வருவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்வது அவசியம்.

    அருணாச்சல மஹாத்மியத்தில் கிரிவலம் பற்றி ஒரு கதை உண்டு.

    ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார்.

    அந்த காலத்தில் அது வனப்பிரதேசமாக இருந்தது.

    ஒரு காட்டுப் பூனையை கண்டு அதை வேட்டையாட துரத்தினார்.

    பூனையும் தன்னைக் காத்துக் கொள்ள ஓடத்துவங்கியது.

    துரத்திய ராஜாவும், துரத்தப்பட்ட பூனையும் தங்களை அறியாமல் மலையை வலம் வந்தனர்.

    ஒரு முறை சுற்றி முடிந்ததும் ராஜா திடீரென கீழே விழுந்தார்.

    காரணம் மலையை சுற்றி வந்ததால் ராஜாவின் குதிரையும், காட்டுபூனையும் மோட்சம் அடைந்து மேலோகம் சென்றதாம்.

    ஆனால் ராஜா செல்லவில்லை. காரணம், ராஜா வேறு சிந்தனையில் சுற்றினாராம்.,

    பூனை தன்னை காக்க வேண்டும் என இறைவனை வேண்டியும், குதிரை பூனையை வேட்டையாட மன எண்ணம் இல்லாமலும் சுற்றியது என்பதால் மோட்சம் அடைந்ததாக சொல்லுகிறார்கள்.

    • துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தூபதீபம் காட்ட வேண்டும்.
    • மாலையிலும் மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் புனித நாளாகக் கருதப்படுகிறது.

    அன்று வழிபாடு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

    காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு நீராடி நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும்.

    சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம்.

    பூஜை அறையில் வெங்கடாஜல பதியின் உருவப்படம் அல்லது உருவச்சிலையை வைத்து முன்னே அமர வேண்டும்.

    விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை வணங்க வேண்டும்.

    துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தூபதீபம் காட்ட வேண்டும்.

    பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும்.

    வெங்கடாஜலபதியின் மகிமை பற்றிய நூல்களைப் படித்து "ஓம் நமோ நாராயணா'' என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

    இதே போல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும்.

    அன்று மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும்.

    மாவினாலேயே விளக்கு போல செய்து அதில் நெய்விட்டு தீபம் ஏற்றி வெங்கடேசப் பெருமானை வழிபடுவது காலம், காலமாக நடந்து வருகிறது.

    வெங்கடேசப் பெருமானின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.

    மாவிளக்கு ஏற்றி வைத்த பிறகு அந்த விளக்கு தணியும் போது கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும்.

    • சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.
    • மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.

    திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.

    இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம்.

    இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவப்படத்தை வைத்தும் கும்பிடலாம்.

    புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.

    சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.

    துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

    மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து,

    மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.

    பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    • புரட்டாசி மாதத்தில் தான் கன்னியில் சூரியன் வந்து அமர்கிறார்.
    • புதனுக்கு வெகு நட்பு கிரகமாக சனி பகவான் உள்ளார்.

    பெருமாளுடைய அம்சம் என்று சொல்லக்கூடிய கிரகம் புதன்.

    அந்த புதனுடைய வீடு கன்னி.

    இந்தக் கன்னியில்தான் புதன் ஆட்சியும் அடைகிறார், உச்சமும் அடைகிறார்.

    ஒரு கிரகம் ஒரே வீட்டில் ஆட்சியடைவதும், உச்சமடைவதும் மிகவும் அரிதான ஒரு விஷயம்.

    அந்தப் பெருமை கன்னிக்கு உண்டு.

    பெருமாளுடைய அம்சமாக கருதக்கூடிய புதனுடைய வீடு கன்னி.

    புரட்டாசி மாதத்தில் தான் கன்னியில் சூரியன் வந்து அமர்கிறார்.

    ஆகவே தான் இந்த மாதத்தில் திருமாலுக்கு வேண்டிய பஜனைகள், பிரம்மோற்சவங்கள் என்று அனைத்தும் நடைபெறுகிறது.

    எனவே, புதனின் அம்சமாக பெருமாள் இருப்பதால் புரட்டாசி மாதத்தை பெருமாளுக்கான மாதமாகக் குறிப்பிடுகிறார்கள்.

    புதனுக்கு வெகு நட்பு கிரகமாக சனி பகவான் உள்ளார்.

    அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய சனிக்கிழமைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

    ×