search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தி"

    • புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குல தெய்வ அருள் கிடைக்கும்.
    • இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

    புரட்டாசி சனிக்கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது, ''திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம்.

    அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம்!

    மகாலட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா உமக்கு நமஸ்காரம்!''

    என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும்.

    இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குல தெய்வ அருள் கிடைக்கும்.

    புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.

    கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

    • இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.
    • புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவ பெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன.

    புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவ பெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம்

    ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும்.

    புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும்.

    இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.

    இவை மட்டுமின்றி முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மகாளயபட்சமும் புரட்டாசி மாதம்தான் வருகிறது.

    மகாளயபட்ச நாட்களில் முன்னோருக்கு உரிய தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் ஆசியை முழுமையாக பெற முடியும்.

    • ஏழுமலையானை தரிசிப்பது பேருந்து வசதி இல்லாத அந்த காலத்திலேயே இருந்தது.
    • புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது.

    புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக திருப்பதிக்கு சென்று

    ஏழுமலையானை தரிசிப்பது பேருந்து வசதி இல்லாத அந்த காலத்திலேயே இருந்தது.

    சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் தொடர்வது தான் வேங்கடவனின் மகிமைக்கு சான்று.

    குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் முதலில் திருப்பதி ஏழு மலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும்.

    அதனால் தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள்.

    புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது.

    புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது.

    எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    • சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
    • புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது.

    புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது.

    சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    இத்தகைய சிறப்புடைய புரட்டாசியில் பெருமாளை வழிபட்டால் ஏழுமலையானிடம் இருந்து அதிக அருளையும்,

    பலனையும் பெற முடியும் என்பது பக்தர்களிடம் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

    பக்தர்களின் படையெடுப்பு காரணமாக இந்த மாதம் முழுக்க திருப்பதிமலை எங்கும்

    "ஏடுகுண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா கோவிந்தா!" என்ற பக்தி கோஷம் திருப்பதி மலை முழுக்க எதிரொலிக்கும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் இது இரட்டிப்பாக இருக்கும்.

    புரட்டாசி சனிக்கிழமைக்கு இருக்கும் தனித்துவமும் மகத்துவமே இதற்கு காரணமாகும்.

    • சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
    • புரட்டாசி சனிக் கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.

    புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான்.

    அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

    புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது.

    எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.

    ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.

    அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி,

    பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.

    இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.

    புரட்டாசி சனிக் கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடு பலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

    • ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.
    • பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி.

    தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு.

    இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரத நாட்கள் தான்.

    சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான்.

    திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள்.

    அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி

    வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

    ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.

    புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு.

    எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

    பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி.

    இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில் தான்.

    ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.

    • இத்தீர்த்தவாரியில் பங்கேற்பது மகாமக ஸ்நானமாகும்.
    • இத்தகைய கிரக அமைப்புகள் நாளில் ரிஷப லக்னத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.

    மகாமக ஸ்நானம் செய்வதில் நான்கு நிலைகள் உண்டு.

    முதலாம் வகை:

    மகாமக தீர்த்தவாரி நடைபெறும் நேரத்தில் பங்கேற்பது முதல் வகையாகும்.

    சூரியன் கும்ப ராசியில் இருக்கும் போது அமையும் மாதம் மாசி மாதம்.

    குரு சிம்ம ராசியில் இருக்க வேண்டும்.

    அதற்கு நேர் ஏழாம் வீடான அதாவது சம சப்தம ஸ்தனமான கும்ப ராசியில் சூரியன் இருக்க வேண்டும்.

    சந்திரனும் மக நட்சத்திரமும் கூட வேண்டும்.

    அது பவுர்ணமி நாளாக இருக்க வேண்டும். அதுவே மகாமக நாளாகும்.

    இத்தகைய கிரக அமைப்புகள் நாளில் ரிஷப லக்னத்தில் (சுமார் 12 மணி அளவில்) மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.

    இத்தீர்த்தவாரியில் பங்கேற்பது மகாமக ஸ்நானமாகும்.

    இரண்டாம் வகை:

    மக நட்சத்திரத்துடன் கூடிய மகாமக நாளில் காலை, இரவு என்ற வேறுபாடின்றித் தீர்த்தமாடுதல் இரண்டாம் வகையாகும்.

    மூன்றாம் வகை:

    மகாமக நாள்அமைந்த மாசி மாதத்தில் உள்ள எல்லா நாட்களிலும் மகா மக தீர்த்தத்தில் நீராடுதல் மூன்றாம் வகை.

    இந்த நாட்களில் நீராடும்போது மகாமக ஸ்நான தான விதிகளை நன்றாகப் பின்பற்ற முடியும்.

    நான்காம் வகை:

    குருவுக்கு 'ஆண்டளப்பான்' என்று ஒரு பெயர் உண்டு.

    ஒரு ராசியில் ஒருவருடம் இருப்பார்.

    அதனை ஒட்டி அமைவது குரு வருடம்.

    நவக்கிரக குரு சிம்ம ராசியில் பிரவேசம் செய்து கன்னி ராசிக்கு செல்லும்வரை அமைந்த காலப்பகுதி மகாமக வருடம் ஆகும்.

    மகாமக ஸ்நான தான விதிமுறைகளை நமக்குச் சவுகரியமான நாளில் குடந்தைக்குச் சென்று

    விதிமுறைகளைப் பின்பற்றி புண்ணிய நீராடலாம்.

    எல்லா நாட்களும் புண்ணிய நாட்களே ஆகும்.

    அவரவர் தம் பிறந்த நட்சத்திரம் முதலான நாட்களில் மகாமகம் குளத்தில் நீராடுவது விசேஷப் பலன்களைத் தரக்கூடியதாகும்.

    • புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவார்கள்.
    • அன்று முதல் நவகன்னியர் மகாமக குளத்தில் குளிப்பதாக ஐதீகம்.

    கும்பகோணம் காசி விசுவநாதர் கோவிலில் தெற்கு நோக்கிக் கோவில் கொண்ட நிலையில் நவகன்னியகள் உள்ளனர்.

    இவர்களை வழிபடுவதும் அர்ச்சிப்பதும் மகாமக யாத்திரையில் மிக முக்கியமாக செய்ய வேண்டிய காரியமாகும்.

    ஒன்பது நதிகளும், ஒன்பது கன்னியராகக் காசி விசுவநாதர் கோவிலில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

    மகாமக வருஷம் குருவின் சிம்மராசிப் பிரவேசத்தில் தொடங்குகிறது.

    அன்று முதல் நவகன்னியர் மகாமக குளத்தில் குளிப்பதாக ஐதீகம்.

    எனவே அவ்வாண்டில் நவகன்னியருக்குத் தினந்தோறும் தைலக் காப்பு செய்வார்கள்.

    இந்தத் தைலக் காப்புக்கு எண்ணெய் கொடுப்பது புண்ணியம் தரும் செயலாகும்.

    வார நாட்களில் செவ்வாய்க் கிழமைகளில் நவகன்னியரை வழிபடுவது விசேஷமாகப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

    மகாமகம் தீர்த்தத்தில் குளிப்பவர் அனைவரும் நவகன்னியர்களை போற்றி வணங்குதல் வேண்டும்.

    தம் பொருளாதார நிலைக்கேற்ப எண்ணையும், மஞ்சளும், சந்தனமும், குங்குமமும், மணம் பொருந்திய மலர்களும் கொண்டு இவர்களைப் பூஜை செய்ய வேண்டும்.

    பால் சாதம் நிவேதிக்க வேண்டும். தட்சிணையுடன் கூடிய தாம்பூலம் தருதல் வேண்டும்.

    வீட்டுக்குச் சென்ற பின்னால் ஒன்பது கன்னியரை நினைத்து ஒன்பது சுமங்கலிகளுக்கு உங்கள் சக்திக்கு ஏற்பத் தாம்பூலம் தந்து வணங்க வேண்டும்.

    நான்கு செவ்வாய்க் கிழமைகளில் தொடர்ந்து நவகன்னியரை வழிபட்டால்,

    * புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவார்கள்.

    * பருவம் எய்தாதவர்கள் பருவம் எய்தி நல்ல கணவனைப் பெற்று நீடுழி வாழ்வார்கள்.

    * கணவனோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் கணவனோடு மனம் ஒத்து வாழ்வார்கள்.

    * பெண்கள் வியாதிகளிலிருந்து நீங்குவார்கள்.

    என்ற பயன்களைச் சொல்கிறது கும்பகோண மகாத்மியம்.

    அருந்ததி, அனசுயை, சாயை, தமயந்தி, சசி, ருக்குமணி ஆகியோர் நவகன்னியரை வழிபட்டுப் பேறு பெற்றவர்கள் என்கிறது திருக்குடந்தைப் புராணம்.

    கணவனை இழந்த பெண்கள் நவகன்னியரைப் போற்றிப் பரவினால் அடுத்த ஜென்மத்தில் செல்வ வளமும்,

    நல்ல கணவனும் வாய்க்கப் பெற்று நிலைத்த இன்பத்தைப் பெறுவார்கள்.

    இப்படி பல பல பலன்கள் தரும் நவகன்னியருக்கு மகாமக ஆண்டில் இயன்ற நாட்களில் தைலாபிஷேகம் செய்வது ஒரு புண்ணிய செயலாகும்.

    • புஷ்கர கங்கையோ, பிரம்மனைவிட்டு பிரிய விரும்பவில்லை.
    • முப்பத்து முக்கோடி தேவர்களும் குறிப்பிட்ட நதிகளில் தோன்றுவதாக ஐதீகம்.

    தன்னை நோக்கி தவம் செய்த நவக்கிரக குருவுக்கு அருள் செய்ய நினைத்த பிரம்மன்,

    தன் கமண்டலத்திலிருந்து வந்த புஷ்கர கங்கையைப் பார்த்து, "நீ குருவுடன் சென்றுவிடு" என்று கட்டளையிட்டார்.

    புஷ்கர கங்கையோ, பிரம்மனைவிட்டு பிரிய விரும்பவில்லை.

    அதோடு குருவுடன் செல்ல கங்கைக்கு விருப்பமும் இல்லை.

    இதையடுத்து பிரம்மன், கங்கை, குரு ஆகிய மூவருக்கும் இடையில் ஒரு உடன்பாடு உறுதியானது.

    குரு ஒரு ராசியில் ஒரு வருடம் இருப்பார்.

    ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு நதியில் புஷ்கர கங்கை தோன்றி

    குருவுக்கு காட்சி தர வேண்டும் என்ற உடன்படிக்கை ஏற்பட்டது.

    அதற்கு புஷ்கர கங்கை ஒப்புக்கொண்டது.

    இந்த ஏற்பாட்டின்படி,

    குரு மேஷ ராசியில் இருக்கும் சித்திரை மாதத்தில் கங்கையிலும்,

    குரு ரிஷப ராசியில் இருக்கும் வைகாசி மாதத்தில் நர்மதையிலும்,

    குரு மிதுன ராசியில் இருக்கும் ஆனி மாதத்தில் சரஸ்வதியிலும்,

    குரு கடக ராசியில் இருக்கும் ஆடி மாதத்தில் யமுனையிலும்,

    குரு சிம்ம ராசியில் இருக்கும் ஆவணி மாதத்தில் கோதாவரியிலும்,

    குரு கன்னி ராசியில் இருக்கும் புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணாவிலும்,

    குரு துலாம் ராசியில் இருக்கும் ஐப்பசி மாதத்தில் காவிரியிலும்,

    குரு விருச்சிக ராசியில் இருக்கும் கார்த்திகை மாதத்தில் தாமிரபரணியிலும்,

    குரு தனுசு ராசியில் இருக்கும் மார்கழி மாதத்தில் சிந்துவிலும்,

    குரு மகர ராசியில் இருக்கும் தை மாதத்தில் துங்கபத்ராவிலும்,

    குரு கும்ப ராசியில் இருக்கும் மாசி மாதத்தில் பிரம்மபுத்ராவிலும்,

    குரு மீன ராசியில் இருக்கும் பங்குனி மாதத்தில் பிரநீதாவிலும்,

    புனித நீராடலுக்கு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நாட்களில் சிவன், விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் குறிப்பிட்ட நதிகளில் தோன்றுவதாக ஐதீகம்.

    • குல தெய்வத்துக்குரிய பூஜைகளை வழக்கப்படி செய்ய வேண்டும்.
    • இது தீர்த்த யாத்திரை என்பதால் தம்பதியர் சகிதமாக செல்வது நல்லது.

    தீர்த்தமாடுவது என்றதும் தண்ணீரில் மூழ்கி எழுந்து வருவதுதானே என்று நினைத்து விடக்கூடாது.

    புனித நீராடலுக்கு என்றே சில விதிகள் உள்ளன. இது பற்றி ஆதிகும்பேஸ்வரர் ஆலய குருக்கள் கூறியதாவது:-

    கும்பகோணத்துக்கு புறப்படும் முன்பு ஒவ்வொருவரும் தம் வீட்டில் வழிபாடு செய்தல் வேண்டும்.

    குல தெய்வத்துக்குரிய பூஜைகளை வழக்கப்படி செய்ய வேண்டும்.

    இதையடுத்து வீடு முழுவதும் புனித நீரை தெளிக்க வேண்டும்.

    முடிந்தவர்கள் ஏழைகளுக்கு அன்னதானம், உடைதானம் செய்ய வேண்டும்.

    அதன்பிறகே கும்பகோணத்துக்கு புறப்பட வேண்டும்.

    இது தீர்த்த யாத்திரை என்பதால் தம்பதியர் சகிதமாக செல்வது நல்லது.

    வீட்டில் இருந்து கும்பகோணம் எல்லை அடையும் வரை மகாமகம் தொடர்பான இறை சிந்தனையில் இருக்க வேண்டும்.

    வேறு பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செலுத்தக் கூடாது.

    பக்திபாடல்களை கேட்டபடி பயணிப்பது சிறந்தது.

    கும்பகோணத்துக்குள் நுழையும் முன்பு அஷ்டாதச தலங்கள் எனப்படும் 18 கோவில்களில் வழிபாடு செய்ய வேண்டும்.

    அந்த 18 ஆலயங்கள் உள்ள ஊர்கள் வருமாறு:-

    1. திருவிடை மருதூர்,

    2. திரிபுவனம்,

    3. அம்மாசத்திரம்,

    4. திருநாகேஸ்வரம்,

    5. அய்யாவடி,

    6. சிவபுரம்,

    7. சாக்கோட்டை,

    8. மருதாநல்லூர்,

    9. பட்டீஸ்வரம்,

    10. திரிசக்திபுரம்,

    11. தாராசுரம்,

    12. திருவலஞ்சுழி,

    13. சுவாமிமலை,

    14. திருஇன்னம்பூர்,

    15. திருப்புறம் பயம்,

    16. கொட்டையூர்,

    17. கருப்பூர்,

    18. பாணாதுறை.

    • நதிகளை அவர்கள் வெறும் தண்ணீர் ஓடும் இடமாக பார்க்கவில்லை.
    • தெய்வத்துக்கு இணையாக பார்த்தனர்.

    நதிகளுக்கும், நீர்நிலைகளுக்கும் நம் முன்னோர்கள் மிகுந்த மரியாதை கொடுத்தனர்.

    நதிகளை அவர்கள் வெறும் தண்ணீர் ஓடும் இடமாக பார்க்கவில்லை.

    தெய்வத்துக்கு இணையாக பார்த்தனர்.

    நதிகளை மையமாக வைத்தே எல்லா விழாக்களையும் அமைத்தனர்.

    ''நீரின்றி அமையாது உலகு'' என்பதற்கு ஏற்ப செயல்பட்டனர்.

    அதன் ஒரு பகுதியாகத்தான் புண்ணிய நதிகளில் நீராடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

    அமாவாசை, பவுர்ணமி தினங்களில் நதிகள், நீர்நிலைகளில் நீராடுவது மிகுந்த பலன் தரும் என்று நம்பினார்கள்.

    அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகம் போன்ற விழாக்களில் தீர்த்தமாடினால் மூன்று பிறவிகளின் பாவம் அகன்று விடும் என்பது ஐதீகம்.

    அதனால்தான் குடந்தையில் நீராட குலம் தழைக்கும் என்றனர்.

    சிறப்பு வாய்ந்த குடந்தை மகாமகம் குளத்தில் நீராடினால் அந்த பலனை பெற முடியும்.

    12 தல ஈசன்கள் மகாமகம் குளத்துக்கு வந்து தீர்த்தமாடுவார்கள்.

    மகாமகம் தினத்தன்று

    ஆதிகும்பேஸ்வரர்,

    காசி விசுவநாதர்,

    அபி முகேஸ்வரர்,

    கவுதமேஸ்வரர்,

    ஏகாம் பரேஸ்வரர்,

    நாகேஸ்வரர்,

    சோமேஸ்வரர்,

    ஆதிகம்பட்ட விசுவநாதர்,

    கோடீஸ்வரர்,

    காளஹஸ்தீஸ்வரர்,

    பாணபுரீஸ்வரர்,

    அமிர்தகவசநாதர்

    ஆகிய 12 தல ஈசன்கள் மகாமகம் குளத்துக்கு வந்து தீர்த்தமாடுவார்கள்.

    நவக்கிரக தலங்கள்

    கும்ப கோணத்தில் உள்ள சிவாலயங்களில் 8 ஆலயங்கள் நவக்கிரகங்களுக்குரிய தலங்களாக உள்ளன.

    அந்த தலங்கள் விவரம் வருமாறு:

    சூரியன் - நாகேஸ்வரர் கோவில்

    சந்திரன் - ஆதிகும்பேஸ்வரர் கோவில்

    செவ்வாய் - பாணபுரீஸ்வரர் கோவில்

    புதன் - கவுதமேஸ்வரர் ஆலயம்

    வியாழன் - சோமேஸ்வரர் ஆலயம்

    சுக்கிரன் - காசி, விசுவநாதர் ஆலயம்

    சனி - அபிமுகேஸ்வரர் கோவில்

    ராகு, கேது - காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்

    ×