search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்துமீறல்"

    • தன்னிடம் அவர் அத்துமீறுவதை அறிந்த சிறுமி கத்திக் கூச்சல் போட்டுள்ளார்
    • அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் குட்டு வெளிப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹரோதி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கேட்போருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்த கொலை சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த கிராமத்தில் 8 வயது சிறுமி தனியாக இருக்கும்போது பாலியல் வன்புணர்வு செய்யும் நோக்கத்தில் குடிபோதையில் இருந்த உறவுக்கார இளைஞர் அருகே நெருங்கியுள்ளார்.

    தன்னிடம் அவர் அத்துமீறுவதை அறிந்த சிறுமி கத்திக் கூச்சல் போட்டுள்ளார். இதனால் மாட்டிகொள்வோமோ என்ற பயத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து கரும்புக் காட்டில் உடலை மறைத்து வைத்துள்ளார். சிறுமி திடீரென காணாமல் போனதால் அனைவரும் தேடி வந்த நிலையில் கரும்புக்காட்டில் இலைகளால் மறைக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக குழந்ததையின் தந்தை அதே கிராமத்தில் வசித்து வரும் உறவுக்கார இளைஞன் மீது சந்தேகம் தெரிவித்து போலீசிடம் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் குட்டு வெளிப்பட்டுள்ளது. எனவே அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

    • வான் போக்குவரத்து அதிகாரிகளை பரபரப்பு நிலைக்கு ஆளாக்கியது.
    • ரஷிய போர் விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ரஷிய ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று ஸ்வீடன் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த சம்பவம் அந்நாட்டு வான் போக்குவரத்து அதிகாரிகளை திடீர் பதற்றம் மற்றும் பரபரப்பு நிலைக்கு ஆளாக்கியது.

    கடந்த வெள்ளிக் கிழமை அரங்கேறிய இந்த சம்பவத்தின் போது ரஷிய போர் விமானங்கள் ஸ்வீடன் நாட்டின் கிழக்கில் உள்ள பால்டிக் தீவான கோட்லாந்தின் வான்பரப்பில் பறந்து சென்றுள்ளன. இதை அறிந்த ஸ்வீடன் ஆயுதப்படை சார்பில், ரஷிய போர் விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

     


    எனினும், ரஷிய விமானிகள் ஸ்வீடனுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்வீடன் சார்பில் இரண்டு போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. பிறகு ரஷிய விமானங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளன. ஸ்வீடன் வான்வெளியில் ரஷியா நீண்ட நேரம் அத்துமீறியதாக ஸ்வீடன் ராணுவம் குற்றம்சாட்டியது.

    "ரஷியாவின் செயல்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இவை பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான மரியாதையை குறைக்கும் வகையில் உள்ளது," என ஸ்வீடன் விமான படை தளபதி ஜோனஸ் விக்மேன் தெரிவித்தார். 

    • மூதாட்டி மகன் மற்றும் மருமகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
    • போலீசார் புகாரின் பேரில் மூதாட்டி மீது பாய்ந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி.

    இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதனையடுத்து மூதாட்டி அவரது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் மூதாட்டிக்கு அவரது மருமகளுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மூதாட்டி மகன் மற்றும் மருமகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு மூதாட்டி வீட்டின் கதவை பூட்டி விட்டு படுத்து தூங்கினார். நள்ளிரவு 1.40 மணியளவில் வாலிபர் ஒருவர் மது போதையில் மூதாட்டி வீட்டின் கதவை திறந்து அத்துமீறி நுழைந்தார்.

    பின்னர் அவர் மூதாட்டியின் மீது பாய்ந்தார். இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் வாலிபர் தப்பி ஓடி இருட்டில் மறைந்து விட்டார்.

    இதுகுறித்து மூதாட்டி கோட்டூர் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் வீட்டில் படுத்து தூங்கிய மூதாட்டி மீது பாய்ந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • போதையில் இளம்பெண்ணிடம் போலீஸ்காரர் அத்துமீறி நடந்துள்ளார்.
    • போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அந்த காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் கோர்பச்சேவ். இவர் இதற்கு முன்பு பணியாற்றிய இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் தேவ கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

    நேற்று மதுபோதையில் சீருடை அணிந்து காவலர் பணிக்கு சென்றுள்ளார். இரவு 8 மணியளவில் பஸ் நிலையம் அருகே அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு இளம் பெண் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் காவலர் பின் தொடர்ந்து சென்றார். ஒத்தக்கடை ஆற்றுப்பாலம் அருகே இருள் சூழ்ந்த பகுதியில் சென்ற போது திடீரென காவலர் அந்தப் பெண்ணை வழிமறித்துள்ளார். ஏன் ஹெல்மெட் போட வில்லை? என போதையில் உளறியபடி அந்த பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றுள்ளார்.

    அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் காவலரை சிறைபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் பிடியிலிருந்த காவலரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அந்த காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • பெண்கள் முன்பு ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்றார்
    • பக்கத்தில் வந்தால் குத்தி கொலை செய்வதாக மிரட்டினார்

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 37). கூலி தொ ழிலாளி.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் கையில் கத்தியுடன் வீட்டிற்கு நடந்து செ ன்றார். அப்போது வின்சென்ட் அங்கு நின்று கொண்டு இருந்த பெண்கள் முன்பு ஆடை களை கழற்றி நிர்வாண நிலையில் முகம் சுளிக்கும்படி நடந்து கொண்டார். இதனை பார்த்த அங்கு இருந்தவர் தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி யாராவது பக்கத்தில் வந்தால் குத்தி கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் ஆத்திரத்தில் அங்கு அங்கு இருந்த தெரு பைப்பை உடைத்து விட்டு தப்பிச் சென்றார்.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கை யில் கத்தியுடன் பெண்கள் முன்பு நிர்வா ணமாக நின்ற வின்சென்டை கைது செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கொச்சி அருகே உள்ள பிறவம் ஏரிக்கால் அருவியில் தற்போது அதிகளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.
    • ராமமங்கலம் போலீசார், பெண்களிடம் அத்துமீறிய 2 போலீஸ் அதிகாரிகளையும் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஏராளமான அருவிகள், கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் உள்ளன. அங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கொச்சி அருகே உள்ள பிறவம் ஏரிக்கால் அருவியில் தற்போது அதிகளவில் தண்ணீர் விழுந்து வருகிறது. இதனால் அந்த அருவிக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். சம்பவத்தன்று அந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மூவாட்டுப்புழா போலீஸ் நிலைய அதிகாரிகள் 2 பேர், அருவியில் குளித்த பெண்களிடம் அநாகரிகமாக நடந்துள்ளனர். மேலும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரிகளின் இந்த அத்துமீறல் குறித்து ராமமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து அங்கு சென்ற ராமமங்கலம் போலீசார், பெண்களிடம் அத்துமீறிய 2 போலீஸ் அதிகாரிகளையும் கைது செய்தனர். அருவியில் குளித்த பெண்களிடம் போலீசார் அத்துமீறிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அணையில் அத்துமீறி, சுற்றுலாப்பயணிகள் குளிப்பது அதிகரித்துள்ளது.
    • அணையின் முகப்பிலுள்ள பாலத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில், மீன்பிடிக்கின்றனர்

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் அத்துமீறி, சுற்றுலாப்பயணிகள் குளிப்பது அதிகரித்துள்ளது.

    நீர் தேக்கத்தில் குளிப்பதற்கு, பொதுப்பணித்துறையினர் தடைவிதித்து, எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளனர். அணையில் முதலைகள் நடமாட்டமும் உள்ளது. இந்த விபரீதம் தெரியாமல், சுற்றுலாப்பயணிகள் அணையில் அத்துமீறுகின்றனர். படகு சவாரிக்காக அமைக்கப்பட்ட படித்துறையை ஒட்டி, ஆழமான பகுதியில் குளித்து வருகின்றனர். அதே போல் அணையின் முகப்பிலுள்ள பாலத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில், மீன்பிடிக்கின்றனர்.எச்சரிக்கை பலகை அருகிலேயே அத்துமீறி இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன.

    பொதுப்பணித்துறையினர் கண்காணித்து, அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • வீடியோ மூலம் விசாரணை நடத்திய போலீசார் பெண்ணை துன்புறுத்தியதாக சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
    • கைதானவர்கள் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக துணைபோலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் சைன் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய இளம்பெண் ஒருவரை இளைஞர்கள் குழு துன்புறுத்துவது போன்று வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அதில், ஜப்பானிய இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பிடித்து அவர் மீது வண்ணப்பொடிகளை தூவுவதுடன் அந்த பெண் மீது முட்டையை உடைப்பது போன்றும், தண்ணீரை பீய்ச்சி அடித்து அத்துமீறுவது போன்றும், அந்த நபர்களின் பிடியில் இருந்து இளம்பெண் தப்பிக்க முயல்வது போன்றும், அந்த பெண்ணை ஒருவர் கன்னத்தில் அறைவது போன்றும் காட்சிகள் இருந்தன.

    இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

    இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் தனது டுவிட்டர் பக்கத்தில், உடனடியாக டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பஹர்கஞ்ச் என்ற இடத்தில் ஜப்பானிய இளம்பெண் மீது இந்த துன்புறுத்தல் நடந்தது கண்டறியப்பட்டது.

    தொடர்ந்து வீடியோ மூலம் விசாரணை நடத்திய போலீசார் பெண்ணை துன்புறுத்தியதாக சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக துணைபோலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் சைன் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சம்பவம் தொடர்பாக எந்த ஒரு வெளிநாட்டவரிடம் இருந்தும் புகார்கள் வரவில்லை. அதே நேரம் சம்பந்தப்பட்ட பெண் குறித்த விபரங்களை அறிய உதவுமாறு ஜப்பானிய தூதரகத்திற்கு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட பெண் ஜப்பானிய சுற்றுலா பயணி என்றும், டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் தங்கியிருந்த அவர் தற்போது வங்கதேசத்திற்கு சென்று விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • அத்துமீறி தவறாக நடக்க முயன்றார்.
    • கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை ரஹ்மத் நகரை சேர்ந்த கருப்பணன் மகன் சதீஷ் (வயது26).

    இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றார். இதனால் அந்த பெண் சத்தம் போட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி சாதி பெயரை கூறி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினார்.

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சதீசை கைது செய்தனர்.

    • பெண் ஊழியரை தகாத முறையில் அந்த பயணி தொட்டதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    • ஊழியரிடம் தவறாக நடந்துகொண்ட பயணி, அவருடன் வந்திருந்த மற்றொரு பயணி இருவரும் இறக்கி விடப்பட்டனர்

    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்துகொண்டதால் அவர் கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று ஐதராபாத்துக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏறிய அந்த ஆண் பயணி, விமான பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பயணிக்கும் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பெண் ஊழியர் உடனடியாக பாதுகாப்பு படை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து, பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்ட பயணி மற்றும் அவருடன் வந்திருந்த மற்றொரு பயணி இருவரையும் கீழே இறக்கி விசாரணை நடத்தினர்.

    பெண் ஊழியரை தகாத முறையில் அந்த பயணி தொட்டதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் விமானத்தில் வரையறுக்கப்பட்ட பகுதியால் இந்த சம்பவம் ஏற்பட்டதாக சக பயணிகள். பின்னர் அந்த

    பயணி எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டார். இருப்பிலும் மேலும் பிரச்சனை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அவர் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.

    ஆண் பயணி ஒருவர் பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை அடுத்து, விமான ஊழியர்களும் பயணிகளும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ (ஏஎன்ஐ) வெளியாகி உள்ளது.

    • பொதுமக்கள் பத்திர பதிவு அலுவலகத்தை நாடி வருகின்றனர்.
    • பொதுமக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது . மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினந்தோறும் பத்திரப்பதிவு செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் ஆவண பதிவிற்காக வந்து செல்கின்றனர். ஆவண பதிவு என்பது அரசு துறையில் மிக முக்கியமாக பங்கை வகிக்கிறது வீடு, வணிகநிறுவனம், விவசாய நிலம், பூர்வீக சொத்து, பதிவுத் திருமணம் என அனைத்தையும் பத்திர பதிவு செய்ய வேண்டி இருப்பதால் பொதுமக்கள் பத்திர பதிவு அலுவலகத்தை நாடி வருகின்றனர்.

    இவர்களுக்கு பத்திரப்பதிவு செய்ய உதவியாக சார்பதிவாளர் அலுவலகத்தில் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்கள் உள்ளனர்,

    ஆனால் மாரண்டஅள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள், ஆவண எழுத்தர் என்று சொல்லி பொதுமக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வருகின்றனர்.

    கிராம பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் இடைத்தரகர்களின் பிடியில் சிக்கிக் கொண்டு பல லட்சம் ரூபாய் தினந்தோறும் இழந்து வருவதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாப்டூர் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 62 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மரம், செடிகளை தீ வைத்து அழித்ததாக தெரிகிறது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சாப்டூர் வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி யாகும். இங்கு சிறுத்தை, கரடி, மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் புலிகளும் இந்த பகுதியில் இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது. எனவே சாப்டூர் வனப்பகுதி பாது காக்கப்பட்ட வனப்பகுதி யாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் இந்த வன பகுதியில் உள்ள கேணி, வாழைத்தோப்பு, சின்ன கோட்டை, மலையாறு, பெருமாள் கோவில் மொட்டை உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரி எச்சரித்து இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் மொட்டை பகுதியிலிருந்து புகை வெளியேறியது. எனவே வனப்பகுதியில் தீ பரவி இருக்கலாம் என கருதி சாப்டூர், வத்திராயிருப்பு பகுதியில் இருந்து வனத்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    அப்போது அந்தப் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி நுழைந்து இருப்பது தெரியவந்தது. அவர்கள் அந்த வழியாக சதுரகிரி செல்ல முற்பட்ட தும், இதற்காக 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த மரம், செடி, புல்களுக்கு தீ வைத்து அழித்ததாகவும் தெரிகிறது.

    இதையடுத்து வனப்பகுதியில் அத்திமீறி நுழைந்ததாக 62 பேரை போலீசார் கைது செய்து பேரையூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

    ×