search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச முதியோர் தின விழா"

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 13,45,297 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
    • இதில் 80 முதல் 99 வரையுள்ள வயதில் 27,161 வாக்காளர்களும், 100 வயதை கடந்த 168 வாக்காளர்களும் என மொத்தம் 27,329 மூத்த வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, 80 வயதை கடந்த மூத்த வாக்காளர்களுக்கு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலை, கலெக்டர் கவிதா ராமு வழங்கி பெருமைப்படுத்தினார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 13,45,297 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளார்கள். இதில் 80 முதல் 99 வரையுள்ள வயதில் 27,161 வாக்காளர்களும், 100 வயதை கடந்த 168 வாக்காளர்களும் என மொத்தம் 27,329 மூத்த வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

    தேர்தல் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், தேர்தல்களை சுதந்திரமான, நியாயமான, அனைவரையும் உள்ளடக்கியதான, அணுகக்கூடிய மற்றும் பங்கேற்கத்தக்க வகையில் அதனை நேர்மையாக நடத்துவதற்கு பொறுப்புள்ள மூத்த வாக்காளர்களால்தான் நமது நாடு ஜனநாயக நாடாக இவ்வுலகில் செழித்து ஒளிர்கிறது.

    அனைத்து மூத்த குடிமக்களும் உங்களது தேர்தல் பங்கேற்பினைத் தொடர்வதன் மூலம் இந்திய ஜனநாயகத்தில் இளம் தலைமுறையினரின் நேர்மையான பங்கேற்பு, இந்திய ஜனநாயகத்தில் இளம் தலைமுறையினரின் நேர்மறையான பங்களிப்பிற்கு முன்மாதிரியாக திகழ்வதில் பெருமிதம் கொள்கிறோம்.

    மூத்த குடிமக்கள் அவர்களது ஜனநாயக கடமைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதிக அளவிலான தேர்தல் பங்கேற்பினை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொருவருக்கும் படிவம் 12பி-ஐ நிரப்பி அவரவர் வீட்டிலிருந்து வாக்காளிக்கும் வசதியினை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது.

    எனவே மூத்த வாக்காளர்களாகிய நீங்கள் ஜனநாயக செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கேற்று நமது நாட்டின் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), சொர்ணராஜ் (அறந்தாங்கி), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


    ×