search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல்விளக்க கூட்டம்"

    • காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிக்கு 7 பேருக்கு நெகிழி கூடைகள் முழு மானிய விலையில் வழங்கப்பட்டது.
    • நெகிழி கூடைகளை பயன்படுத்தி காய்கறிகளை தரம்பிரித்து தரமான பொருட்களுக்கு அதிக விலையை பெறலாம் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    தருமபுரி, 

    தருமபுரி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் அக்கமனஅள்ளி கிராமத்தில் வேளாண் விளை பொருட்களை தரம் பிரிக்கும் நெகிழிக் கூடை களுக்கான செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    இந்த செயல் விளக்கத்தில் தக்காளி, கத்தரி ஆகிய காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிக்கு 7 பேருக்கு நெகிழி கூடைகள் முழு மானிய விலையில் வழங்கப்பட்டது.

    நெகிழி கூடைகளை பயன்படுத்தி காய்கறிகளை தரம்பிரித்து தரமான பொருட்களுக்கு அதிக விலையை பெறலாம் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் இந்த செயல் விளக்கத்தில் உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ், மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் காயத்ரி, வனிதா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×