என் மலர்
நீங்கள் தேடியது "வைக்கோல்"
- கருங்குழியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் டிராக்டரில் எடுத்து க்கொண்டு சென்றார்.
- விரைந்து வந்து தீ மேலும் மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.
கடலூர்:
வடலூர் அருகே உள்ள கருங்குழியைச் சேர்ந்தவர் பாபு (வயது50) விவசாயி. இவர் நைனார் குப்பம் பகுதியில் உள்ள சொந்தநிலத்தில் நெல் அறுவடை செய்த பின்பு அதன் வைக்கோலை கருங்குழியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் டிராக்டரில் எடுத்து க்கொண்டு சென்றார். அப்போது சாலையை கடந்த போது அந்த வழியே மின்இணைப்புக்கு செல்லும் மின்சார வயரில் உரசி தீப்பொறி ஏற்பட்டது. இதில் டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் கட்டு எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் சத்தம் போட்டு டிராக்டர் நிறுத்தினர். இதுகுறித்து குறிஞ்சி ப்பாடிதீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் உடனே விரைந்து வந்து தீ மேலும் மேலும் தீ பரவாமல் தடுத்தனர், இது பற்றி வடலூர் போலீஸ் விசாரணை மேற்கொ ண்டனர்.
- காவேரிப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள், நெல் சாகுபடி செய்திருந்தனர்.
- இங்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக எந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம், இடைப்பாடி சுற்றியுள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், காசிகாடு, வளையசெட்டியூர், காட்டுவளவு, மூலப்பாறை, நெடுங்குளம், கோனேரிப்பட்டி, செட்டிப்பட்டி, தேவூர், மயிலம்பட்டி, குள்ளம்பட்டி, மூலப்பாதை, காவேரிப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள், நெல் சாகுபடி செய்திருந்தனர். இங்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக எந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டது. அறுவடை பணிகள் நிறைவடைந்த நிலையில், வைக்கோலை கால்நடை தீவனத்திற்காகவும், காளான் வளர்ப்பிற்காக விற்பனை செய்யும் பணியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சில வியாபாரிகள் விவசாயிகளிடம் மொத்தமாக வைக்கோலை வாங்கி வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
இப்பகுதியில் எந்திரம் மூலம் உருளையாக காட்டப்பட்ட, ஒரு கட்டு வைக்கோல் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- அறுவடையான வைக்கோல்கள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
- தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
சுவாமிமலை:
கும்பகோணம், பாப நாசம், திருவிடைமருதூர் பகுதிகளில் தற்பொழுது சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அறுவடையான வைக்கோல்கள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப ப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கும்பகோணம் அருகே திருப்புரம்பியம் என்ற இடத்தில் இருந்து நேற்று இரவு 165 வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல்லுக்கு கைலாசம் என்பவர் லாரியை ஓட்டி சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரி கொந்தகை அருகே சாலையில் உள்ள மின் கம்பியில் உரசி உள்ளது .இதில் வைக்கோலும், லாரியும் எரிந்து முற்றி லும் சேதமானது.
அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. தீ விபத்து தொடர்பாக தகவல் கிடைத்ததும் கும்பகோணத்தில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
சேதத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.
- வைக்கோலை சூருட்டி கட்டு கட்டாக கட்டி லாரி மூலம் எடுத்து செல்கின்றனர்.
- விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை கிடைக்கிறது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம், மெலட்டூர், திருக்கருகாவூர் அதனை சுற்றுள்ள பகுதியில் சம்பா தாளடி பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை தற்போது அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்து வருகின்றனர்.
அறுவடை செய்த வயல்களில் கிடந்த வைக்கோல்களை அரியலூர், பெரம்பலூர், மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வெளியூர் வியாபாரிகள் வந்து வைக்கோல்களை மொத்தமாக விலைபேசி மிஷின் வைச்சு வைக்கோலை சூருட்டி கட்டு கட்டாக கட்டி லாரிமூலம் எடுத்து செல்கின்றனர்.
வைக்கோல்கள் மூலம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரைக்கும் கிடைக்கிறது என்பதால் விவசாயிகள் வைக்கோல்களை சேதமின்றி அறுவடை செய்து வயல்களில் வைக்கோல்களை பாதுகாத்து வருகின்றனர்.
- வைக்கோல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
- சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம்
பி.வாகைகுளத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 27). இவரது மனைவி அனிதா. அதே பகுதியைச் சேர்ந்தவர் அனிதாவின் பெரியப்பா கணேசன். இவர்களிடையே சொத்து பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அனிதா வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பு நேற்று நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தது.
இதில் அருகில் இருந்த ஓட்டு வீடும் சேதமானது. சொத்து பிரச்சனையை மனதில் வைத்து தனது பெரியப்பா கணேசன் வைகோலுக்கு தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக சிந்துபட்டி போலீஸ் நிலையத்தில் அனிதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேலூர் அருகே கோவில் திருவிழாவில் உடலில் வைக்கோல் பிரி சுற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
- சிறுவர்கள் உடலில் வேஷம் பூண்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.
மேலூர்
மேலூர் அருகே உள்ள மங்களாம்பட்டி கிராமத்தில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக ஆண்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றி பூதம் போல வந்தனர். சிறுவர்கள் உடலில் வேஷம் பூண்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.
முன்னதாக ஊர் பெரிய கோவிலில் இருந்து மந்தையம்மன் கோவிலுக்கு ஆட்டம், பாட்டத்துடன் வந்தனர். அங்கு பெண்கள் உரலில் பச்சரிசி மாவு இடித்து அதனுடன் சர்க்கரை கலந்து அம்மனுக்கு படையலிட்டனர்.
பின்னர் அங்கிருந்த பக்தர்களுக்கு சமமாக வழங்கப்பட்டது. இதுபோன்று விழா கொண்டாடுவதால் மழை பெய்து விவசாயம் செழித்து, மக்கள் நோய்நொடியின்றி வாழலாம் என்பது இந்த பகுதி மக்களின் ஐதீகமாக உள்ளது.
- வைக்கோல் விற்பனை மும்முரம் அடைந்துள்ளது.
- கட்டுகள் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை ஆகிறது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெரியாறு கால்வாய் நீரை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டதை முன்னிட்டு சோழவந்தான் மற்றும் திருவலவாய நல்லூர், திருவேடகம், ஊத்துக்குளி, மேலக்கால், நாராயணபுரம், ராயபுரம், ரிஷபம், கருப்பட்டி, இரும்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயம் தீவிரமாக நடைபெற்றது.
இருபோக சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் தற்போது அறுவடை பணிகள் முடிந்துள்ளன. இதையடுத்து வயல்களில் உள்ள வைக்கோல்களை நவீன எந்திரம் மூலம் பிரிக்கும் பணி நடந்தது. 30 கிலோ எடையுள்ள கட்டுக ளாக கட்டப்பட்டு வைக்கோல் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த வைக்கோல் கட்டுகள் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை ஆவதால் விவசாயிகள் தற்போது தங்களது நிலங்களில் வைக்கோலை பிரித்து விற்பனை செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
- சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசம்.
- தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சீர்காழி:
சீர்காழி கடலோர கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதன் காரணமாக நெப்பத்தூர் கிராமத்தில் லலிதா என்பவரது பழைய ஓட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமானது மேலும் ஓட்டு கட்டிடத்தில் உள்ள கோடுகள் சேதம் ஆகி உள்ளது.
தகவல் அறிந்த சீர்காழி மற்றும் மேலையூர் பகுதிகளில் இருந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அனைத்தனர்.
இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 5 ஏக்கர் வயலில் அறுவடை செய்த வைக்கோல் கட்டுகளை தனது வீட்டு அருகில் வைத்திருந்தார்.
- வைக்கோல் கட்டுகள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள பெருகவாழ்ந்தான் வேளாண் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயி.
இவர் தனது 5 ஏக்கர் வயலில் அறுவடை செய்த வைக்கோல் கட்டுகளை தனது வீட்டு அருகில் வைத்திருந்தார்.
நேற்று காலை இந்த வைக்கோல் கட்டுகள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இது குறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திடீரென வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது.
- சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கும்பகோணம்:
திருப்பனந்தாள் அடுத்த அணைக்கரை மதுசா லையில் வசிப்பவர் பாஸ்கர் (வயது 40) விவசாயி. இவர் தனது வீட்டின் வளர்க்கும் மாடுகள், கன்றுகளுக்காக வயலில் அறுவடை செய்த வைக்கோலை சுமார் 100 கட்டுக்கும் மேலாக அடுக்கி வைத்து போராக அமைத்து வைத்திருந்தார்.
இந்நிலையில் திடீரென வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருவி டைமருதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வின்சென்ட் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அப்பகுதியில் குப்பை களை கொளுத்தி யதால் காற்றில் தீ பரவியதில் வைக்கோல் போர் எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரூ.20 ஆயிரம் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
- ஏழைகாத்தம்மன் கோவில் திருவிழா ஆண்கள் உடலில் வைக்கோல் சுற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
- 7 குழந்தைகளை அம்மனாக சித்தரித்து அதேபோல் நடந்து கோவிலுக்கு கூட்டிச் சென்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர். இதனை வெள்ளலூர் நாடு என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படுவர். இங்கு பிரசித்தி பெற்ற ஏழைகாத்தம்மன் கோவில் உள்ளது.
வெள்ளலூரை தலைமை இடமாகக் கொண்டு 60 கிராமங்கள் உள்ளன. இப் பகுதி மக்களுக்கு ஏழைகாத்த அம்மன் காவல் தெய்வமாய் விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத திருவிழா நடைபெறும்.
அதே போல் இந்த ஆண்டு திருவிழா வெள்ள லூர் கோவில் திருவிழா நடந்தது. முன்னதாக நேர்த்திக்கடன் செலுத்தும் நூற்றுக்கணக்கான ஆண்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றி முகத்தில் முகமூடி அணிந்து பெரிய ஏழை காத்தம்மன் கோவிலுக்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து 7 குழந்தைகளை அம்மனாக சித்தரித்து அதேபோல் நடந்து கோவிலுக்கு கூட்டிச் சென்றனர். நடுத்தர வயதுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சேலையை மட்டும் அணிந்து மதுக்களையம் தூக்கியும், திருமண வயதுடைய பெண்கள் சாமி சிலைகளை தூக்கி ஊர்வலம் சென்றனர். இத்திருவிழா இப்பகுதி மக்கள் நலமாக வாழவும், விவசாயம் செழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
தக்கலை அருகே மேல பள்ளம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (வயது 42). வைக்கோல் வியாபாரி.
இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான டெம்போவில் வைக்கோல் பாரம் ஏற்றினார். பின்னர் அந்த டெம்போவை புலியூர் குறிச்சி அருகே சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றிருந்தார்.அதிகாலையில் அவரது டெம்போவில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்த பொது மக்கள் ஜெகன் ராஜுக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வைக்கோல் போரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் டெம்போ எரிந்து நாசமானது.
இது குறித்து ஜெகன் ராஜ் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வைக்கோல் பாரத்திற்கு யாராவது தீ வைத்தார்களா அல்லது மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? என்பது குறித்து விசாரணை நடத் தப்பட்டு வருகிறது.