search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிஜிஎல் தேர்வு"

    • இந்த ஆண்டுக்கான சிஜிஎல் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
    • அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை என கனிமொழி தெரிவித்துள்ளார்

    சென்னை:

    மத்திய அரசு துறைகளில் உயர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பணியாளர் தேர்வாணையத்தால் சி.ஜி.எல் (CGL) தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த தேர்வு ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு மொழிகளில் மட்டுமே தேர்வு நடைபெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு கனிமொழி எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

    பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை. இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.

    ×