என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெயில் ரத்து"
- மதுரை-விழுப்புரம் விரைவு ரெயில் (16868) டிசம்பர் 5 முதல் 10-ந்தேதி வரையும், வருகிற 12 முதல் 15-ந்தேதி வரையும் என மொத்தம் 10 நாட்களுக்கு மதுரை-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
- ராமேஸ்வரம்-மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (06654) இன்று முதல் 31-ந்தேதி வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 12 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை:
ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மாதத்தில் ரெயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் மதுரை-செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06663) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06664) ஆகியவை டிசம்பர் 6 மற்றும் 7-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதுரை-விழுப்புரம் விரைவு ரெயில் (16868) டிசம்பர் 5 முதல் 10-ந்தேதி வரையும், வருகிற 12 முதல் 15-ந்தேதி வரையும் என மொத்தம் 10 நாட்களுக்கு மதுரை-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் ராமேஸ்வரம்-மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (06654) இன்று முதல் 31-ந்தேதி வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 12 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மதுரை- செங்கோட்டை ரெயில் மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
- மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
மதுரை ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளனூர் -புதுக்கோட்ட, மானாமதுரை-மேல கொன்னகுளம், திண்டுக்கல் -அம்பாத்துரை, ராஜபாளையம்- சங்கரன்கோவில் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக திருச்சி-மானாமதுரை பயணிகள் ரெயில் இரு மார்க்கங்களிலும் இன்று (8-ந் தேதி) முதல் வருகிற 15-ந் தேதி வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிவகங்கை-மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திண்டுக்கல்-அம்பாத்துரை பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவை-நாகர்கோவில் ரெயில் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். சென்னை-குருவாயூர் விரைவு ரெயில் மதுரை கோட்டத்தில் செவ்வாய், சனிக்கிழமைகளில் 70 நிமிடம் தாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும்.
இந்த 3 நாட்களுக்கும் வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி பாசஞ்சர் இணைப்பு ரெயிலாக செயல்படாது. ராஜபாளை யம்-சங்கரன் கோவில் பிரிவில் ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் காரணமாக மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரெயில், செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் மதுரை பயணிகள் ரெயில் ஆகியவை இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
கொடை ரோடு ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை -விழுப்புரம் ரெயில், இன்று முதல் 15-ந் தேதி வரை மதுரை-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்