search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனை ஏற்ற பயிற்சி"

    • பனையாண்மை தோட்டத்தில் கருவியைக் கொண்டு பனையேற்ற பயிற்சி நடைபெற்றது.
    • காலத்திற்கேற்ற மாற்றமும் தேவையுமாயிருக்கிறது என்று பனை ஆய்வாளர் பேசினார்.

    கடையம்:

    கடையம் அணைக்கட்டு சாலையில் உள்ள பனையாண்மை தோட்டத்தில் கருவியைக் கொண்டு பனையேற்ற பயிற்சி நடைபெற்றது. பனையேற்ற பயிற்சியை தொடங்கி வைத்து சுற்றுசூழல் மற்றும் பனை ஆய்வாளர் பாமோ பேசியதாவது:-

    உலகமயமாகளாலும், புது நாகரீக கவர்ச்சியினாலும் மக்களிடையே பனை பொருட்கள் பயன்பாடு குறைந்துபோனது. நிறைய பனைவீரர்கள் பனையேறி பனை பொருட்களை உருவாக்கும் சூழலில் பனையின் சூழல், சமூக, பொருள்சார் மதிப்பு கூடும். அதனால் பனைகள் அழிப்பு தானாகவே குறையும். பனை சார் தொழிலும் வாழ்வியலுமான பனையேற்றம் எனும் நலிவூற்று வரும் கலையானது அழியாமல் பாதுகாக்கப்பட இளைஞர்கள் பனையேற்றத்தை கற்றுக்கொள்வது இன்றைய தேவையாகும். இன்றைய சூழலில் மரபு வழி பனையேற்றம் பழகி தினமும் 10 சிறந்த பனைகளை ஏறி பனம்பால் இறக்கினால் ஒருவர் வலிமையான ஆறடுக்கு உடலையும், குடும்பத்துக்கு தேவையான பொருள் வளத்தையும் உருவாக்கிட முடியும் . ஆனால் பனையேற்றம் கடினமாக இருப்பதால் பனையேற்றத்தை எளிதாக்கிட இன்று கருவிகளை பயன்படுத்துவது காலத்திற்கேற்ற மாற்றமும் தேவையுமாயிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பனைவீரர் கிங்சுலியும், பனை ஆய்வாளர் பாமோவும் கருவியைக் கொண்டு பனையேறும் முறையை செய்து காட்டி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் உடற்கல்வி ஆசிரியர் அலெக்ஸ், சிலம்ப பயிற்சியாளர் முத்தரசன், வயர்மன் சுந்தர், கல்லூரி மாணவர்கள் பவித்ரன், பூபதி, பிரவீன், பள்ளி மாணவர்கள் நாவினி, ஹரிணி, ஜெப்வின், பொன்ராம், ஜெனி, விஷ்ணு மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் அந்தோணிராஜ் நன்றி கூறினார்.

    ×