என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரீத்தாபுரம்"
- பயனற்ற இந்த தொட்டியின் மேல் பகுதியில் முழுவதுமாக காங்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.
- இந்த தொட்டியின் மைதானத்தில் அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவது வழக்கம்.
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சி 4-வது வார்டு பத்தறை காலனியில் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலை யில் கடந்த சில வருடங் களுக்கு முன்பு தொட்டி பழுதடைந்தது.
இதையடுத்து இந்த தொட்டியில் நீர் ஏற்றம் நிறுத்தப்பட்டது. இந்த குடிநீர் தொட்டிக்கு பதில் அருகில் வேறு குடிநீர் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பயனற்ற இந்த தொட்டியின் மேல் பகுதியில் முழுவதுமாக காங்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.
இந்த தொட்டியின் மைதா னத்தில் அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவது வழக்கம்.இதனால் ஆபத்தான இந்த தொட்டியை இடித்து அகற்ற முன்னாள் கவுன்சிலர் ரவி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார். மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற ரீத்தாபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சுருளிவேல் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆபத்தான குடிநீர் தொட்டியை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். அப்பகுதி சிறுவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.