என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமூக சேவகர்கள்"
- முப்பெரும் விழா உடுமலை வெங்கடேஸ்வரா ஹாலில் நடைபெற்றது.
- நாசாவின் சான்றுகளும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
மடத்துக்குளம் :
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் ,உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், தேஜஸ் ரோட்டரி சங்கம் இணைந்து 2022 -23ஆம் கல்வியாண்டில் நல்லாசிரியர் விருது பெற்ற உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கும், சமூக சேவகர்களுக்கும் விருது வழங்கும் விழா, சர்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு நாசாவின் சான்றிதழ் வழங்கும் விழா, சர்வதேச விண்வெளி வார விழா வினாடி வினா போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவானது உடுமலை வெங்கடேஸ்வரா ஹாலில் நடைபெற்றது.
கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் வரவேற்று பேசினார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி தலைமை வகித்தார். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க நிர்வாகி எஸ். எம். டிராவல்ஸ் உரிமையாளர் நாகராஜ் , அபக்ஸ் சங்கத்தின் நிர்வாகி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் சத்யம் பாபு,உடுமலை அமிர்தனேயன், விஜயகுமார், தமிழ் ஆசிரியர் சின்னராசு, தமிழக தமிழாசிரியர் கழக மதிப்பியல் தலைவர் வஞ்சிமுத்து, விவேகானந்தா வித்யாலயம் பள்ளி தாளாளர் மூர்த்தி ஆகியோர் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களான சரவணகுமார்,நர்மதா ஐயப்பன், கலாமணி ஆகியோருக்கும் உடுமலை கல்வி மாவட்டத்தை பசுமையாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க பல்வேறு வழிகளில் உதவிய தற்போதைய திருப்பூர் மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி ஆகியோருக்கு பசுமை நாயகன் விருதும், பெத்தேல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் தாளாளர் ஜெயக்குமாரி,லிட்டில் ஏஞ்சல்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகி ராஜேஸ்வரி ஆகியோருக்கு சமூக சேவகி விருதும், உடுமலை ராயல்ஸ் அரிமா சங்க தலைவர் யோகானந்த் ஆகியோருக்கு சேவை செம்மல் விருதும், இரண்டாம் கிளை நூலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலகர் கணேசனுக்கு நல் நூலகர் விருதும், எண்ணம் போல் அறக்கட்டளையின் நிர்வாகி இமானுவேல் நெல்சனுக்கு சமூக சேவகர் விருதும் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணன் கலந்துகொண்டு, இது போன்ற விருதுகள் நம்மை மேன்மேலும் உற்சாகப்படுத்தி புதுமையான பணிகளை சிறப்பாக செய்வதற்கு உறுதுணையாகும், விருது பெற்ற ஒவ்வொருவரும் தங்கள் பணியினை மேன்மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று சிறப்புரை யாற்றினார். திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் சமூக சேவகர்களுக்கும் வாழ்த்துக்களை கூறி தங்கள் பணியை மென்மேலும் சிறப்பாக செய்ய உற்சாகப்படுத்தி பேசினார்.
தொடர்ந்து சர்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வில் நாசா உடன் இணைந்து கலிலியோ அறிவியல் கழகம் வழிகாட்டுதலின் பேரில் மிகச் சிறப்பாக ஆய்வு செய்த கோவை எஸ்என்எம்வி., கலைமற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் ,ஜிவிஜி கல்லூரி மாணவிகளுக்கும் நாசாவின் சான்றுகளும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சர்வதேச விண்வெளி வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது. நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழக நிர்வாகிகள் சதீஷ்குமார், சசிகுமார் உட்பட அனைவரும் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்