search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 லட்சம் பேர்"

    • ஈரோடு மாவட்டத்தில் 10 தாலுகாவில் தற்போது 46 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
    • இதுவரை மொத்தம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 677 நபர்கள் 108 சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

    ஈரோடு:

    தமிழக அரசு கடந்த 2008-ம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு முழுவதும் அணைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி வருகின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 10 தாலுகாவில் தற்போது 46 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

    இதில் மலைப்பகுதியில் மட்டும் 9 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆம்பு லன்ஸ் தேவை தொடர்பாக அழைப்பு பெறப்பட்டதில் இருந்து 8 முதல் 14 நிமிடங்களில் நகர்புறம் மற்றும் கிராமபுற ங்ககளுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

    இந்த நேரத்தை மேலும் குறைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் கூறியதாவது:

    108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்றது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 677 நபர்கள் 108 சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதிலும் குறிப்பாக 84 ஆயிரத்து 105 கருவுற்ற தாய்மார்கள் மற்றும் 1 லட்சத்து 992 பேர் சாலை விபத்திற்காக உபயோகித்துள்ளனர்.

    இதில் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பினி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டு 709 குழந்தைகள் ஆம்புலன்சில் பிறந்துள்ளன.

    இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்ப தற்காக வெண்டிலேட்டர் ஈ.சி.ஜி மானிட்டர் போன்ற அதிநவீன கருவிகள் ஈரோடு மற்றும் பெருந்துறை மருத்துவ கல்லுரி ஆம்புல ன்ஸ்களில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

    பிறந்த 28 நாட்களுக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தை கள் ஆம்புலன்ஸ் ஈரோடு மற்றும் கோபிசெட்டி பாளையம் மருத்துவ மனையில் இன்குபேட்டர் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகளுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சராசரியாக மாதந்தோறும் 40-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழ ந்தைகள் காப்பாற்றபட்டு வருகின்றனர்.

    108 சேவையை இன்னும் செம்மைபடுத்த வேண்டும் என்பதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருவுற்ற தாய்மார்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. கர்ப்பிணி பெண்கள் இலவசமாக இச் சேவையை 24 மணி நேரமமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ஹாட்ஸ்பாட் எனும் அதிக விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து வாகன விபத்துக்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×