search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி கொலை"

    • சரண்ராஜ் வீட்டின் அறைக்கு ஜீவிதாவை இழுத்து சென்று அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜீவிதா (வயது 18). இவர் பர்கூர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தார்.

    இவரது தாய் மாமன் கந்திலி கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புகைப்படம் எடுக்கும் வேலை செய்து வந்த சரண்ராஜ் (34) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதில் ஜீவிதா சரண்ராஜிடம் கடந்த சில மாதங்களாக பேசவில்லை என கூறப்படுகிறது.

    நேற்று மதியம் வீட்டில் இருந்த ஜீவிதாவை, சரண்ராஜ் பணந்தோப்பு பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது ஜீவிதாவுக்கும், சரண்ராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரமடைந்த சரண்ராஜ் வீட்டின் அறைக்கு ஜீவிதாவை இழுத்து சென்று அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். மேலும் யாருக்கும் தெரியாமல் வீட்டை பூட்டி விட்டு சரண்ராஜ் சாவியை வீட்டருகே குளியலறையில் வீசிவிட்டு அங்கிருந்து தலைமறைவானார். வெகுநேரமாகியும் வீட்டிலிருந்து சென்ற மகள் வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் ஜீவிதாவை பல இடங்களில் சென்று தேடியும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் உறவினர்கள் சரண்ராஜிக்கு சொந்தமான வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் ஜீவிதா பிணமாக கிடந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து, அளித்த தகவலின் பேரில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஜீவிதா உடலுக்கு சரண்ராஜ் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து சரண்ராஜை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சரண்ராஜ் வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள டீ கடை முன்பு இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் வெளக்கல் நத்தம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    போலீசார் வருவதை கண்டதும் சரண்ராஜ் தன் கையில் வைத்திருந்த விஷத்தை குடித்தார்.

    போலீசார் அவரை கைது செய்து, சிகிச்சைக்காக நாட்டம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சரண்ராஜ் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதனை ஆய்வு செய்தனர்.

    சரண்ராஜ் தனது செல்போனில், ஜீவிதாவும், நானும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். அவரை திருமணம் செய்து கொள்ளலாம் வா என கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

    எங்களால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இதனால் நான் ஜீவிதாவை கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்தேன். மனதளவில் நாங்கள் ஏற்கனவே கணவன்-மனைவியாக மாறிவிட்டோம். சாவும் நேரத்தில் கூட நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.

    நான் இறந்த பிறகு எங்களது உடல்களை ஒரே இடத்தில் புதைக்க வேண்டும் என பேசி வீடியோவும் பதிவு செய்திருந்தார்.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ரேணுகா வீடு திரும்பவில்லை.
    • ரேணுகாவை யோகேஸ்வரன் கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளார்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சென்னாவரம் பாரதியார் நகரை சேர்ந்தவர் மாரி. இவருடைய மகள் ரேணுகா (வயது 14). வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் நீலமேகம் என்பவரது மகன் யோகேஸ்வரன் ( 21). மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரேணுகா யோகேஸ்வரன் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ரேணுகா வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து வந்தவாசி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

    செல்போன் மூலம் துப்பு துலக்கியதில் கடைசியாக ரேணுகா யோகேஸ்வரனிடம் பேசியது தெரியவந்தது. இதை தொடர்ந்து நேற்று இரவு யோகேஸ்வரனை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ரேணுகாவை கொலை செய்து விட்டதாக யோகேஷ்வரன் திடுக்கிடும் தகவல் அளித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் யோகேஸ்வரனை அழைத்து கொண்டு சென்னாவரம் கிராமத்திற்கு வந்தனர்.

    அங்குள்ள முள் புதரில் ரேணுகா பிணமாக கிடந்தார். போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து யோகேஸ்வரனை கைது செய்தனர்.

    ரேணுகாவை யோகேஸ்வரன் கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனிமையில் சென்ற மாணவியை யோகேஸ்வரன் மடக்கி பேசினார். அப்போது ஏற்பட்ட தகராறில் யோகேஸ்வரன் ரேணுகாவை தாக்கியுள்ளார் .மேலும் அவரது சுடிதார் துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சென்னை ஐகோர்ட்டில் சதீஷ் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
    • குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த போலீஸ் கமிஷனர் உத்தரவில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன.

    சென்னை:

    சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் மாணிக்கம்(47). கால் டாக்சி ஓட்டுனர். இவரது மனைவி ராமலட்சுமி(43) ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களுக்கு சத்யா (வயது 20) என்ற மகள் இருந்தார். இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவரது மகன் மகன் சதீஷ்(23), சென்னை விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் பணியாற்றி வந்தார். சதீசும், சத்யாவும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு சத்யா பெற்றொர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், சதீசுடன் பேசுவதை சத்யா நிறுத்தினார்.

    இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரெயில் நிலையம் நடைமேடையில் நின்றுக் கொண்டிருந்த சத்யாவிடம் பேச முயற்சித்தார். அவர் பேச மறுக்கவே, அங்கு வந்த மின்சார ரெயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டார். இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கி சத்யா உடல் துண்டு துண்டானது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர். பின்னர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தன்னை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் சதீஷ் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த போலீஸ் கமிஷனர் உத்தரவில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. கைது செய்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ளனர். ஆங்கிலத்தில் உள்ள ஆவணங்களை, தமிழில் மொழி பெயர்த்து வழங்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சதீசை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த போலீஸ் கமிஷனர் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    • உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    • இந்த வழக்கில் விடுதி காவலாளி மீது காவல்துறைக்கு சந்தேகம் எழுந்தது.

    மும்பை:

    மும்பையில் 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சார்னி சாலையில் உள்ள அரசு விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவியை காணவில்லை என நேற்று மாலை காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். விடுதியின் நான்காவது மாடியில் அவர் தங்கியிருந்த அறை வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, அந்த மாணவியின் கழுத்து துணியால் நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.

    மாணவியின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், இந்த வழக்கில் விடுதி காவலாளி மீது காவல்துறைக்கு சந்தேகம் எழுந்தது. அவரது நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க தொடங்கிய சமயத்தில், அவர் நேற்று காலையிலேயே சார்னி சாலை ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அவர் மாணவியை கொலை செய்தபின்னர், ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.

    • கைது செய்யப்பட்ட அகிலன், சுரேஷ்குமார் ஆகியோரை போலீசார் ரகசியமான இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
    • கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் 100 நாள் வேலையில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    அங்கிருந்த சுடுகாட்டின் அருகில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட போது ஒரு இளம்பெண்ணின் உடல் கிடைத்தது. இது தொடர்பான புகாரின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா தலைமையிலான கஞ்சனூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இது தொடர்பாக கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் இறந்து போன இளம்பெண் யார்? அவரை கொலை செய்து புதைத்த மர்மகும்பல் யார்? என்பது குறித்து விசாரித்து வந்தனர். செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவித்தனர். குறிப்பாக 25 வயதிலிருந்து 30 வயதிற்குள் காணாமல் போனவர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

    கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் வந்தது. இதில் அந்த பெண் 3 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும், அந்த பெண்ணிற்கு 17 முதல் 19 வயதிற்குள் இருக்கலாம் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கண்டமானடியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி பிரியதர்ஷினி (வயது 17) என்பது தெரியவந்தது. அவரை கொன்று புதைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில். பிரியதர்ஷினியை கொன்றது விக்கிரவாண்டியை அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் மகன் அகிலன் (23) என்பது தெரியவந்தது.

    அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் சென்னையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அகிலனை கைது செய்தனர். இவர் பேண்ட் வாத்திய குழுவில் டிரம்ஸ் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் பிரியதர்ஷினியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கு உடந்தையாக விக்கிரவாண்டியை அடுத்துள்ள கக்கனூர் கிராமம் கக்கன் வீதியில் வசிக்கும் ராஜாமணி மகன் சுரேஷ் குமார் (22) இருந்ததாக அகிலன் தெரிவித்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில் அகிலன் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அகிலன் உறவினர் வீடு விழுப்புரத்தை அடுத்த கப்பூரில் உள்ளது. அதே போல பிரியதர்ஷினி உறவினர் வீடும் கப்பூரில் உள்ளது.

    இவர்கள் இருவரும் அவரவர் உறவினர் வீட்டிற்கு வந்த போது பிரியதர்ஷினிக்கும், அகிலனுக்கும் காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அகிலன் அடிக்கடி கண்டமானடி கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பிரியதர்ஷினியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இத்தகவல் அறிந்த பிரியதர்ஷினியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனை பிரியதர்ஷினி கேட்காமல், தொடர்ந்து அகிலனுடன் பழகி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    மேலும், தான் 3 மாத கர்ப்பிணியானதையும், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படியும் அகிலனிடம் பிரியதர்ஷினி வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து சித்தேரிப்பட்டுக்கு வா, திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரியதர்ஷினியை அழைத்து வந்து கொன்றுள்ளது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட அகிலன், சுரேஷ்குமார் ஆகியோரை ரகசியமான இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். இக்கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கண்டமானடி, சித்தேரிப்பட்டு கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உறவினர் வீட்டிற்கு வந்தபோது பிரிதர்ஷினிக்கும், அகிலனுக்கும் காதல் ஏற்பட்டது
    • பிரிதர்ஷினி தொடர்ந்து அகிலனுடன் பழகி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் 100 நாள் வேலையில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    அங்கிருந்த சுடுகாட்டின் அருகில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டபோது ஒரு இளம்பெண்ணின் உடல் கிடைத்தது. இது தொடர்பான புகாரின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா தலைமையிலான கஞ்சனூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்யப்பட்டவர் விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கண்டமானடியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி பிரியதர்ஷினி (வயது 17) என்பது தெரியவந்தது. விசாரணையில் பிரியதர்ஷினியை கொன்றது விக்கிரவாண்டியை அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் மகன் அகிலன் (23) என்பது தெரிய வந்தது.

    அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் சென்னையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அகிலனை கைது செய்தனர். இவர் பேண்ட் வாத்திய குழுவில் டிரம்ஸ் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் பிரியதர்ஷினியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கு உடந்தையாக விக்கிரவாண்டியை அடுத்துள்ள கக்கனூர் கிராமம் கக்கன் வீதியில் வசிக்கும் ராஜாமணி மகன் சுரேஷ் குமார் (22) இருந்ததாக அகிலன் தெரிவித்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அகிலன் உறவினர் வீடு விழுப்புரத்தை அடுத்த கப்பூரில் உள்ளது. அதே போல பிரியதர்ஷினி உறவினர் வீடும் கப்பூரில் உள்ளது.

    இருவரும் அவரவர் உறவினர் வீட்டிற்கு வந்தபோது பிரிதர்ஷினிக்கும், அகிலனுக்கும் காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அகிலன் அடிக்கடி கண்டமானடி கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் பிரிதர்ஷினியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இத்தகவல் அறிந்த பிரியதர்ஷினியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனை பிரிதர்ஷினி கேட்காமல், தொடர்ந்து அகிலனுடன் பழகி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    மேலும், தான் 3 மாத கர்ப்பிணியானதையும், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படியும் அகிலனிடம் பிரியதர்ஷினி வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து சித்தேரிப்பட்டுக்கு வா, திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரியதர்ஷினியை அழைத்து வந்து கொன்று இருப்பது தெரிய வந்தது.

    • மாணவியை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
    • யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டர் மற்றும் கொலை சம்பவங்கள் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுடியும் முன்னாள் எம்பியுமான அத்திக் அகமதுவை செய்தியாளர்கள் கண் எதிரிலேயே 3 பேர் சுட்டுக்கொன்றனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று கல்லூரி மாணவி பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஜலான் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ரோஷினி அஹிர்வர் (வயது 21) என்ற அந்த மாணவி, தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பியபோது பைக்கில் வந்த 2 நபர்கள் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடினர். அவர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மற்றொருவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    மாணவி ரத்தவெள்ளத்தில் தரையில் கிடக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவண்ணம் உள்ளனர். யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம், 'அரசு சார்பு ஊடகத்தினரும், பாஜகவும் இந்த மரணத்தை கொண்டாடுவார்களா?' என கேள்வி எழுப்பி உள்ளது.

    • மாணவி ஸ்வேதாவின் செல்போன் எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் பிடிபட்ட வாலிபர் மாணவி ஸ்வேதாவுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவர் என்று தெரிய வந்தது.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாயக்கன்காடு கண்ணகி வீதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மஞ்சுளாதேவி. இவர்களுக்கு தினேஷ்குமார் என்ற மகனும், ஸ்வேதா (21) என்ற மகளும் உள்ளனர்.

    ஸ்வேதா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 28-ந்தேதி காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவி மாலை 5 மணிக்கு தனது தாயிடம் தான் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் வந்து விட்டதாக கூறி உள்ளார்.

    ஆனால் இரவு 7 மணி ஆகியும் ஸ்வேதா வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உறவினர் மற்றும் மாணவியின் தோழிகள் மற்றும் தெரிந்த இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவியை காணவில்லை.

    இதையடுத்து மாணவியின் தாய் மஞ்சுளாதேவி கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மாணவியை காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் தண்டுமாரியம்மன் கோவில் பகுதியில் ஒரு விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வருகிறார்.

    இந்த தோட்டத்தில் 75 அடி ஆழம் உள்ள ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தற்போது 60 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர்.

    அப்போது கிணற்றில் கிடந்த ஒரு வெள்ளை நிற உர மூட்டை சாக்கு பையில் இருந்து துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் இருந்த சாக்கு பையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது சாக்கு பையை பிரித்து பார்த்தபோது சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கழுத்து மற்றும் உடலில் ரத்த காயங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்டு கிணற்றில் சாக்கு மூட்டையில் வீசப்பட்ட பெண் மாயமான கல்லூரி மாணவி ஸ்வேதா என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்து கொலை செய்யப்பட்டது ஸ்வேதாதான் என்று உறுதி செய்தனர்.

    இதையடுத்து ஸ்வேதாவின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

    பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மாணவி கொலை குறித்து விசாரணை நடத்த பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    மாணவி ஸ்வேதா படித்து வந்த கல்லூரியில் இருந்து அவர் இறந்து கிடந்த கொங்கர்பாளையம் 20 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே மாணவியை தெரிந்த நபர்கள்தான் யாராவது அழைத்து வந்து இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்து பின்னர் யாருக்கும் தெரியாமல் இருக்க உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி இருக்கலாம் என்று தெரிய வ்ந்தது.

    மேலும் மாணவி ஸ்வேதாவின் செல்போன் எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கடைசியாக ஸ்வேதாவிடம் ஒரு வாலிபர் பேசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    விசாரணையில் பிடிபட்ட வாலிபர் மாணவி ஸ்வேதாவுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவர் என்று தெரிய வந்தது. மேலும் மாணவி கொலைக்கும் இவருக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொடூர கொலை குறித்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மாணவி கொலை குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. கொலை தொடர்பாக மாணவியுடன் கடைசியாக பேசிய ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் முடிவில் தான் மாணவி கொலையில் அவருக்கு தொடர்பு இருக்குமா? என்று தெரிய வரும். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

    பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பதஸ்வினி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த ஞானேஸ்வர் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்.
    • தன்னை யாராவது பிடிக்க வந்தால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தக்கில பாடு பகுதியை சேர்ந்தவர் பதஸ்வினி (வயது 20). இவர் விஜயவாடாவில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி பல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார்.

    குண்டூர் மாவட்டம் மாணிக்கொண்டாவை சேர்ந்தவர் ஞானேஸ்வர். சாப்ட்வேர் என்ஜினியரான இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்தார். அப்போது பதஸ்வினியுடம், ஞானேஸ்வருக்கு பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தனர்.

    பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் பதஸ்வினியின் பெற்றோருக்கு தெரியவந்தது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதஸ்வினி, ஞானேஸ்வருடன் பழகுவதை தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லூரி விடுதியில் இருந்து விடியூரில் உள்ள தனது பெண் நண்பர் வீட்டிற்கு வந்து இருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஞானேஸ்வர் நேற்று இரவு விடியூருக்கு சென்று பதஸ்வினியை சந்தித்து பெற்றோருக்கு தெரியாமல் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தினார். அதற்கு பதஸ்வினி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த ஞானேஸ்வர் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்.

    பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை எடுத்து பதஸ்வினியின் கழுத்தை அறுத்தார். இதனால் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. பதஸ்வினி வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது பதஸ்வினி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஞானேஸ்வரை பிடிக்க முயற்சி செய்தனர். தன்னை யாராவது பிடிக்க வந்தால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.

    இருப்பினும் ஞானேஸ்வரை பிடித்து கொண்டு பதஸ்வினியை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பதஸ்வினி பரிதாபமாக இருந்தார்.

    குண்டூர் போலீசார் ஞானேஸ்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு மறுத்த காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்

    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சதீசை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தப்பட்ட சதீசை 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அதன்பின் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து டி.எஸ்.பி.செல்வகுமார் தலைமையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள சதீசுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் சதீஷ் மீதான குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

    இதற்காக சிறையில் உள்ள சதீசை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோ கான்பரன்சிங் மூலமாக சதீஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.

    காவல்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம், சதீஷை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து சதீஷை சிறையில் இருந்து சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர். 

    • தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளிவிட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் நேற்று சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சதீஷ் என்ற இளைஞர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர்.

    மேலும், மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்தார்.

    • காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தில் போலீசார் விசாரணை.
    • தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளி விட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சதீஷ் என்ற இளைஞர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ×