search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "25 பேர் மீது வழக்கு"

    சித்தேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், தமிழ்ச்செ ல்வம், லோகேஷ் ஆகியோர் மணி மற்றும் பிரகாஷிடம் தண்டலைக்காரர்கள் ஏன் சித்தேரிப்பட்டிற்கு படிக்க வருகிறீர்கள்? என கூறியதாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் மணி (வயது 21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான அய்யம்பெருமாள் என்பவரது மகன் பிரகாஷ் என்பவருடன் தியாகதுருகம் அருகே சித்தேரிப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் தனது தம்பி (16) என்பவரை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே இருந்த சித்தேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், தமிழ்ச்செ ல்வம், லோகேஷ் ஆகியோர் மணி மற்றும் பிரகாஷிடம் தண்டலைக்காரர்கள் ஏன் சித்தேரிப்பட்டிற்கு படிக்க வருகிறீர்கள்? என கூறியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி, கைகளால் தாக்கிக் கொண்டனர்.

    இதுகுறித்து தண்டலை கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், தமிழ்செல்வம், லோகேஷ், பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், சரண் உள்ளிட்ட 12 பேர் மீதும், சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் தண்டலை கிராமத்தைச் சேர்ந்த மணி, பிரகாஷ், விக்னேஷ், தங்கபாலு, கண்ணன், கதிர் உள்ளிட்ட 13 பேர், ஆக மொத்தம் 25 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் 2 மைனர்கள் மற்றும் பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (18), சரண் (18), தண்டலை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (19), விக்னேஷ் (19), தங்கபாலு (20), கண்ணன் (18), கண்ணன் (43) ஆகிய 9 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    தொடர்ந்து அசம்பா விதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க சித்தேரிப்பட்டு கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×