என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "RECOVERY OF THE TEENAGER’S CORPSE"
- மீன்சுருட்டி அருகே உள்ள தென்னவநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்.
- வடவாற்றில் நேற்று மாலை ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள தென்னவநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40), தொழிலாளி. இவருடைய மனைவி வேம்பரசி (35). கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயக்குமார் தனது மனைவியிடம் வடவாற்றில் மீன் பிடித்து வருவதாக கூறி சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இது குறித்து வேம்பரசி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் வடவாற்றில் நேற்று மாலை ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பிணமாக மீட்பு இதையடுத்து, மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், இறந்து கிடந்தது ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.