search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுப்பாட்டு அறை"

    • சென்னை வான்வெளியை கடந்து செல்லும் விமானங்கள் உட்பட அனைத்து விமான சேவைகளையும் இந்த மையம் கண்காணிக்கும்.
    • விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகளை ஒருங்கிணைக்கும் மிகவும் முக்கியமான கட்டுப்பாட்டு அறை 4-வது தளத்தில் உள்ளது. இது அதிக பாதுகாப்புமிக்க இடம் ஆகும். சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்கள், விமான நிலையத்தில் தரையிறங்காமல் சென்னை வான்வெளியை கடந்து செல்லும் விமானங்கள் உட்பட அனைத்து விமான சேவைகளையும் இந்த மையம் கண்காணிக்கும்.

    இந்நிலையில் இந்த இந்த நிலையில் இங்குள்ள அறையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில், திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால், விமான கட்டுப்பாட்டு அறைக்கோ, விமான சேவைகளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை.

    மின்கசிவு காரணமாக அந்த அறையில் இருந்த பழைய பொருட்கள் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று முதலே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.
    • வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார் தெரிவிக்கலாம்.

    இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார் அறிவித்தார்.

    அதன்படி, வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முதலே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார்களை பொதுமக்கள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்கலாம்.

    1800 425 6669 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், 94453 94453 என்ற Whatsapp எண் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • யானைகள் உயிரிழப்பை தடுக்க அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது உயிரை பாதுகாக்கும் வகையில் 7 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக - கேரளா எல்லையான வாளையாரில் யானைகளின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் மதிவேந்தன் இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:

    * யானைகள் உயிரிழப்பை தடுக்க அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    * யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது உயிரை பாதுகாக்கும் வகையில் 7 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    * யானைகளை காக்க உலகிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்ட திட்டம் என்று அவர் கூறினார்.

    • கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ஏற்பாடு
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகரில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் தேவைகளை நிறைவு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், பக்தர்களிடம் பெறப்படும் புகார்கள் மற்றும் இதர தகவல்களை பெறுவதற்கு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 8072502744, 04175-2333444, 04175-233345 என்ற தொலைபேசி எண்களைக் கொண்ட கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • பெருமாள் கோவில் வீதி போன்ற முக்கிய வீதி வழியாக வந்து காந்தி சிலை அருகே ஊர்வலம் முடிவடைகிறது.
    • இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் நாளை ஆர். எஸ் .எஸ். ஊர்வலம் நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டி வனத்தில் ஆர். எஸ். எஸ். ஊர்வலம் திண்டி வனம் செஞ்சி ரோட்டில் ஆரம்பிக்கப்பட்டு திண்டி வனம் நேருவீதி, வேதங்கர் வீதி, ஆர். எஸ். பிள்ளை வீதி,பெருமாள் கோவில் வீதி போன்ற முக்கிய வீதி வழியாக வந்து காந்தி சிலை அருகே ஊர்வலம் முடிவடைகிறது. ஊர்வலம் வரும் பகுதி, நேரு வீதி, காந்தி சிலை, போன்ற 23 இடங்களில் தற்காலிகமாக கேமிராக்க ளை அமைத்து போலீசார் விடிய விடிய தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் தற்காலிக மாக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் தலைமையில் திண்டிவனம் முழுவதும் வாகன தணிக்கை யிலும் ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு வரு கின்றனர்.திண்டிவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு வதாக போலீசார் வட்டா ரத்தில் தெரிவித்தனர். மேலும்கிறிஸ்தவ தேவா லயம், மசூதி, திராவிட கழக அலுவலகம் ஆகிய இடங்க ளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.

    • வேலூர் சரக டி.ஐ.ஜி. திறந்து வைத்தார்
    • சோதனை‌ சாவடிகளை கண்காணிக்க அமைக்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகளில் உள்ள தாமரைப்பாக்கம் மற்றும் அவளூர் போலீஸ் நிலையம் உள்ளது.

    இந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கரன்பாளையம் சத்திரம் ஆகிய இரண்டு இடங்களில் புதிய சோதனை சாவடி கட்டிடங்கள் மற்றும் மொத்தமுள்ள 9 சோதனை சாவடிகளிலும் பொருத்தப்ப ட்டுள்ள 18 அதிநவீன கண்காணிப்பு கேமராக்க ளுக்கான கட்டுப்பாட்டு அறை திறப்பு நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமை தாங்கினார்.

    கண்காணிப்பு கேமராக்க ளுக்கான கட்டுப்பாட்டு அறையை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திறந்து வைத்து, கேமராக்களின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையி லிருந்து பார்வையிட்டார்.

    இதனை தொடர்ந்து கடந்த மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்ட ர்கள், சப்-இன்ஸ்பெக்ட ர்கள், போலீசாருக்கு பாராட்டு சான்றி தழ்களை வழங்கினார்.

    இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வ ரய்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசந்திரன் ஆகியோர் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஜூலை 24-ந் தேதி தொடங்க ப்பட்டு 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தி ற்கான விண்ணப்ப ப்பதிவு முகாம்கள் கடந்த ஜூலை 24-ந் தேதி தொடங்க ப்பட்டு 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 766 ரேஷன் கடைகளில் 4,34,663 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், முதற்கட்ட மாக 580 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 2,75,356 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜூலை 24 முதல் ஆகஸ்டு 4 வரை நடைபெற்ற முகாம்களில் 80 சதவீத விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், 2-ம் கட்டமாக கள்ளக்குறிச்சி வட்டத்தில் 41 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 36,166 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்களும், சின்னசேலம் வட்டத்தில் 39 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 31,478 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்களும், சங்கராபுரம் வட்டத்தில் 52 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 46,690 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ண ப்பங்களும், கல்வராயன்மலை வட்டத்தில் 11 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 6,901 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ண ப்பங்களும், உளுந்தூ ர்பேட்டை வட்டத்தில் 18 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 16,787 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்களும், திருக்கோவிலூர் வட்டத்தில் 25 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 21,285 ரேஷன் கார்டுதா ரர்களின் விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 186 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 1,59,307 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டம் தொடர்பான விவரங்கள், புகார்கள் இருந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இது தவிர, அனைத்து தாசில்தார் அலுவலக ங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்ப ட்டுள்ளன. எனவே அந்தந்த பகுதி பொதுமக்கள் அவர்களது தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
    • வாகனங்களையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட காவல் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதிலளிக்கும் மையத்தை தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு காணொளி காட்சியின் மூலமாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:-

    மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள சுங்க சாவடிகள் மற்றும் அதன் வழியாக செல்லும் வாகனங்களையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

    வேலூர் மாவட்டத்தில் 1200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்ற சம்பவங்களை விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • ஒடிசா ரெயில் விபத்து தொடர்பு கொள்ளாம்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒடிசா மாநில ரெயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளை மீட்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், ஒடிசா மாநில முதல்-அமைச்சரையும், அலுவல ர்களையும் தொடர்பு கொண்டு பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களில் யாரேனும் மேற்கண்ட விபத்து நடந்த ரெயில்களில் பயணம் செய்திருந்தால் அவர்களை மீட்க ஏதுவாக பயண விவரங்களை, உறவினர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள 04172- 271766 மற்றும் 271966 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெங்களூரு மட்டுமல்லாமல் பழைய மைசூர் பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
    • கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவின் பல மாவட்டங்களில் பருவமழை காலத்துக்கு முன்கூட்டியே மழை வெளுத்து வாங்கி வருகிறது. பெங்களூருவில் கடந்த ஒரு மாதக்காலமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக பேய் மழை கொட்டி வருகிறது. விடாமல் பெய்த மழையால் பெங்களூருவில் பல முக்கிய இடங்கள் நீரில் மூழ்கின. சாலைகள் எங்கும் மழை நீர் வெள்ளமாக ஓடுவதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல, பல சுரங்கப் பாதைகளும் மழை நீரில் முழுவதுமாக மூழ்கியதால் அங்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கே.ஆர். சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையை நிரம்பியிருந்த மழை நீரில் மூழ்கி இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது பெய்து வரும் மழையாலும் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது போன்ற சம்பவங்களில் சிலர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர்.

    பெங்களூரு மட்டுமல்லாமல் பழைய மைசூர் பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. மழையுடன் சேர்ந்து சூறைக்காற்றும் வீசுவதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சரிந்துள்ளன. பல இடங்களில் மின் கம்பங்களும் சேதம் அடைந்ததால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவாசிகள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். இன்றும் பெங்களூருவில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டியது. பெங்களூரு மட்டுமின்றி, பழைய மைசூரு பகுதியும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும் கிளைகள் உயர் அழுத்த மின்கம்பிகளில் மோதியதால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பெங்களூருவின் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சிலிக்கான் சிட்டி பகுதியில் 4 அடி ஆழ பள்ளம் உருவானது. இது கடந்த 15 நாட்களில் உருவாகும் மூன்றாவது பள்ளமாகும். இந்த பள்ளங்களால், நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நகரின் போக்குவரத்து பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளது. கன மழை காரணமாக கடந்த 3 மாதங்களில் 56 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த மழை பாதிப்பில் இருந்து பெங்களூரு மக்களை மீட்பதற்காக போர்க்கால நடவடிக்கைகளை தொடங்குமாறு நேற்று நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார். மேலும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்பதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் 60-க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு அறைகளை திறக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

    அதன்படி கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இந்த கட்டுப்பாட்டு அறைகளில் தொடக்கத்தில் 63 துணைப்பிரிவு அலகுகளை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஜூன் 1-ந் தேதிக்குள் அவை செயல்பாட்டுக்கு வரும்.

    • ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அறை எண்.313 மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
    • 1077, 0421 2971166 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக வரும் புகார் குறித்தும் அதை சரி செய்யவும், கலெக்டர் மற்றும் சென்னை ஊரக வளர்ச்சி ஊராட்சி ஆணையாளருக்கு உடனுக்குடன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதற்கு வசதியாக மாவட்ட அளவில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் அறை எண்.313 மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் குடிநீர் புகாருக்கான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அலுவலராக ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உள்ளார். அவரை 1077, 0421 2971166 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஒன்றிய அளவில் கட்டுப்பாட்டு அலுவலராக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அவினாசி ஒன்றியத்துக்கு 04296 273254 என்ற எண்ணிலும், தாராபுரம் ஒன்றியத்துக்கு 04258 220589 என்ற எண்ணிலும், குடிமங்கலம் ஒன்றியத்துக்கு 04252 246240 என்ற எண்ணிலும், காங்கயம் ஒன்றியத்துக்கு 04257 230635 என்ற எண்ணிலும், குண்டடம் ஒன்றியத்துக்கு 04258 263222 என்ற எண்ணிலும், மடத்துக்குளம் ஒன்றியத்துக்கு 04252 252235 என்ற எண்ணிலும், மூலனூர் ஒன்றியத்துக்கு 04202 227222 என்ற எண்ணிலும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் பல்லடம் ஒன்றியத்துக்கு 04255 253025 என்ற எண்ணிலும், பொங்கலூர் ஒன்றியத்துக்கு 0421 2316023 என்ற எண்ணிலும், திருப்பூர் ஒன்றியத்துக்கு 0421 2202001 என்ற எண்ணிலும், உடுமலை ஒன்றியத்துக்கு 04252 223607 என்ற எண்ணிலும், ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு 04294 260238 என்ற எண்ணிலும், வெள்ளகோவில் ஒன்றியத்துக்கு 04257 260570 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    கட்டுப்பாட்டு அறைக்கு குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக வரும் புகார்களை சம்பந்தப்பட்ட சார்நிலை அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவித்து, அந்த புகாரை சரி செய்து அதன் விவர அறிக்கையை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்கியவர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்குவித்தனர்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் வகையில் கட்டுப்பாட்டு அறையினை உடுமலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் திறந்து வைத்தார். இதில் போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

    மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கு உதவி புரிந்த சன் பீவல்ஸ்- சன் மோட்டார்ஸ் நிறுவன உரிமையாளர் கௌதம், சுகுணா நிறுவனத்தின் பொது மேலாளர் அருள் ஆனந்த் கிருஷ்ணன், மற்றும் எஸ் .எம். டிராவல்ஸ் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்கியவர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்குவித்தனர்.

    ×