search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை விமானம் நிலையம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
    • திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி.

    சென்னை விமான நிலையத்தில் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் பத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர். சென்னையில் இருந்து கொல்கத்தா, புவனேஸ்வர், பெங்களூரு, திருவனந்தபுரம், சிலிகுரி செல்ல இருந்த 5 புறப்பாடு விமானங்களும் ஐந்து இடங்களில் இருந்து சென்னை வர இருந்த வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது குறித்து சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான கவுண்டர்களில் பயணிகள் தகவல் கேட்டுள்ளனர். எனினும், விமான நிறுவனம் சார்பில் எந்தவித முறையான பதில் வழங்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    • கார் சுத்தம் செய்யும் கருவிக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்.
    • சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.

    உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், அபுதாபியிலிருந்து சென்னை வந்த விமானத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் வந்த ஆண் பயணி ஒருவர், கார் சுத்தம் செய்யும் கருவியின் மோட்டரில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தார்.

    அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 24 காரட்டில் 2.42 கிலோ எடையில் இருந்த அந்த தங்கம் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி தெரிவித்துள்ளார்.

    ×