search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் அட்டகாசம்"

    • கடந்த 5-ந்தேதி ரூட் தல விவகாரத்தில் பேருந்து மீது ஏறி மாணவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
    • போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.

    குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியிலிருந்து பேருந்து ஏறும் மாணவர்களில் யாராவது ஒருவர் தன்னை உயர்வாகக் காட்டிக் கொண்டு, மற்றவர்களை அடக்கியாள நினைத்தால் அவர் 'ரூட் தல' என்று கூறப்படுகிறார். குறிப்பிட்ட அந்த வழியில்ரூட்டு தல யார் என்பதில் தான் மாணவர்களிடையே போட்டி நிலவுகிறது.

    இந்த ரூட் தல விவகாரத்தில் மாணவர்கள் அவ்வப்போது இருதரப்பாக மோதிக் கொள்ளும் சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்தமோதலை தடுக்க போலீசார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், ரூட் தல விவகாரத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 5-ந்தேதி ரூட் தல விவகாரத்தில் பேருந்து மீது ஏறி மாணவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

    பிராட்வே- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பட்டாசு வெடித்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் உள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.

    • திருவிக நகர்-விவேகானந்தர் இல்லம் மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம் செய்தனர்.
    • பேருந்தின் மேற்கூரையில் இருந்து இறங்க கண்ணாடியை தட்டி, பேருந்தை நிறுத்தினர்.

    சென்னை:

    பேருந்தின் மேற்கூரையில் ஏறி கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வபோது போலீசார் அவர்களை பிடித்து எச்சரித்து அனுப்புவது வழக்கம்.

    இந்நிலையில் சென்னை சென்ட்ரல் நிலையம் அருகே திருவிக நகர்-விவேகானந்தர் இல்லம் மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் பேருந்தின் மேற்கூரையில் இருந்து இறங்க கண்ணாடியை தட்டி, பேருந்தை நிறுத்தினர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயி ல்வதற்கு திண்டிவனம் சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வருகின்றனர்.
    • மாணவர்கள் பஸ்சில் இடம் இருந்தாலும் உள்ளே செல்லாமல் படியில் தொங்கி கொண்டு செல்கிறார்கள்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சுற்றி உட்பட பல்வேறு பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிசெயல்பட்டு வருகிறது. அதுபோல திண்டிவனம் சுற்றியுள்ள கிராமங்களான சாரம், வெள்ளிமேடுபேட்டை, மேல்பேட்டை, ஆகிய பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயி ல்வதற்கு திண்டிவனம் சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வருகின்றனர்.

    இவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கு முறையான பஸ் வசதிகள் இல்லை. இது ஒருபுறமிருக்க, இருக்கும் பஸ்களில் மாணவர்கள் செய்யும் அட்டகாசத்தால் பஸ்களை இயக்குவதற்கு டிரைவர்கள் அஞ்சுகி ன்றனர் . மாணவர்கள் பஸ்சில் இடம் இருந்தாலும் உள்ளே செல்லாமல் படியில் தொங்கி கொண்டும், மேற்கூரையில் ஏறியும் பஸ்சை அடித்தும் செய்யும் அட்டகாசத்தால் பயணிகள் கடும் அவதிக்கு ள்ளாகி வருகின்றனர்.

    மாணவர் ஒருவர் ஓடும் பஸ்சை பிடித்துக்கொண்டு சாகசம் செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் சில ரோமியோக்கள் முன்னாள் மாணவர்களும், சமூக விரோதிகளும் பஸ்சில் ஏறி பள்ளி கல்லூரி மாணவிகளை கேலி கிண்டல் செய்வது வழக்கமாக உள்ளது.மேலும் அவர்களும் ஹீரோக்களாக தங்களை காண்பிப்பதற்காக பேருந்தில் ஏறி அட்ட காசத்தில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாற்றுகின்றனர்.

    ×