search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு பெண்மணி"

    • இரும்பு பெண்மணி, கண்மணி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என கலெக்டர் கூறினார்.
    • இந்த கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் வட்டம் கன்னிச்சேரிபுதூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் கர்ப்பிணி பெண்களின் இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் இரும்பு பெண்மணி என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும், 5 தாய்மார்களுக்கு தாய் சேய் நல பரிசு பெட்டகம் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களையும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலனை முக்கிய நோக்கமாக கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக இரும்பு பெண்மணி மற்றும் கண்மணி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி கர்ப்பிணி பெண்களின் இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் இரும்பு பெண்மணி என்ற சிறப்பு திட்டம் மூலம், இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்களான கருப்பு உலர் திராட்சை, உலர் அத்தி பழம், சிவப்பு அவல், புரதச்சத்து மற்றும் இரும்புச் சத்து பொருட்கள் அடங்கிய இந்த தொகுப்பு மாத ஒரு முறை 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம், உயரத்திற்கேற்ற எடை குறைபாடுடைய குழந்தைகள் மற்றும் வயதிற்கேற்ற எடை குறைபாடுடைய குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த உணவு தொகுப்பு வழங்கும் சிறப்புத் திட்டமான கண்மணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஊட்டசத்துக்கள் சத்துக்கள் நிறைந்த சிறப்பு உணவு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.அனைத்து கர்ப்பணி தாய்மார்களும், இந்த கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×