என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உண்டியல் பணம் கொள்ளை"
- கோவில் பிரதான சாலையில் இருப்பதால் காலையிலேயே ஏராளமான பக்தர்கள் வந்தனர்.
- கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி கடைவீதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
நேற்று இரவு வழக்கம்போல் பூசாரி பூஜை முடிந்து கோவில் நடை சாத்தி விட்டு கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று இரவு மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கோவில் கதவினை கடப்பாரையால் நெம்பி திறந்தனர். பின்னர் கடப்பாரையால் உண்டியல்களின் பூட்டுகளை உடைத்தனர். பின்னர் உண்டியல்களில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கோவில் பிரதான சாலையில் இருப்பதால் காலையிலேயே ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதனால் கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர், மேலும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திண்டிவனம் அருகே அம்மன் கோவில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- உண்டியலை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே மயிலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கர்ணாவூர் பகுதியில் பஞ்சனி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று மர்ம நபர்கள்கோவில் கேட்டில் இருந்த பூட்டை உடைத்தனர். பின்னர் உள்ளே இருந்த 2 உண்டியல்களை மர்ம நபர்கள் உடைத்து, அதிலிருந்த பணம் மற்றும் காணிக்கை பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.