என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அன்னூர் ஆட்டு சந்தை"
- ஆட்டுச்சந்தைக்கு வெள்ளாடு, குறும்பாடு, செம்மறியாடு , மலை ஆடு, நாட்டாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
- தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது.
அன்னூர்:
அன்னூரில் ஆட்டுசந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையானது சனிக்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம்.
இங்கு அன்னூர், திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வருகிறது.
அன்னூர் ஆட்டு சந்தைக்கு கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகமான வியாபாரிகள் வாங்க வருவார்கள்.
இன்று வழக்கம்போல் அன்னூர் ஆட்டுச்சந்தை கூடியது. ஆட்டுச்சந்தைக்கு வெள்ளாடு, குறும்பாடு, செம்மறியாடு , மலை ஆடு, நாட்டாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது.
மற்ற வாரத்தை விட இந்த வாரம் அதிகளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
வாரந்தோறும் இந்த ஆட்டுச்சந்தையில் 80 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும். இந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுதவிர இந்த சந்தையில் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான (கத்தி, கறி வெட்டும் மரக்கட்டை) போன்றவையும் அதிகமாக வந்துள்ளதால் ஆட்டை வாங்க வரும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான வியாபார பொருட்களையும் வாங்கி செல்கின்றனர்.
மேலும் அன்னூரில் கோழி சந்தை ஆனது பிரசித்தி பெற்றது. கோழி சந்தையிலும் கோழியின் வரத்து அதிக அளவு உள்ளது. இங்கு நாட்டுக்கோழி. சேவல், நாட்டுக்கோழி, கறிக்கோழி போன்றவையும் தீபாவளி முன்னிட்டு அதிகமான அளவு சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
ஆட்டு சந்தை காரணமாக அதை சுற்றியுள்ள தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் வியாபாரம் களை கட்டி உள்ளது.