search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாபம்"

    • தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,512.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
    • செலவழித்தது போக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

    2024 நீட் முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான CUET, பொறியியல் படிப்புகளுக்கான JEE தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

    கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் உருவாக்கப்பட்ட இந்த தேசிய தேர்வு முகமை அமைப்பு இதுவரை நடத்திய தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,512.98 கோடி  வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த புதன்கிழமை மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் இந்த தகவலைத் தெரிவித்திருந்தார்.

    குறிப்பாகக் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட CUET பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்குப் பிறகு தேசிய தேர்வு முகமையின் வருமானம் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22 ஆண்டில் ரூ. 490 கோடி ஈட்டிய நிலையில் 2022-23 ஆண்டு காலத்தில் ரூ.873 கோடி ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில் தேசிய தேர்வு முகமை மாணவர்களின் எதிர்காலத்தை வெறும் வருமானம் ஈட்டுவதற்கான வழியாக மாற்றியுள்ளது என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், நீட் தேர்வு ஊழலின் மையமாகத் தேசியத் தேர்வு முகமை உள்ளது. அது, மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒரு அங்கம். ஆனால், தனது பணிகளை தனியார் வியாபாரிகளிடம் ஒப்படைத்துச் செயல்படுகிறது. தேசிய தேர்வு முகமையானது தற்போது, மெகா மோசடிகள் நடைபெற்ற மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்குத் தலைமை தாங்கிய ஒருவரின் தலைமையில் உள்ளது.


     


    மாணவர்களிடமிருந்து ரூ.3,512.98 கோடி வசூலித்துள்ள NTA, தேர்வுகளை நடத்துவதற்காக ரூ.3,064.77 கோடி செலவழித்தது போக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

    ஆனால் இந்த லாபத்தைத் தேசிய தேர்வு முகமை, தானாகவே தேர்வு நடத்தும் அளவுக்கு அதன் திறமையை மேம்படுத்தப் பயன்படுத்தவில்லை. எனவே, மில்லியன் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை வருவாய் ஈட்டும் நடவடிக்கையாக மோடி அரசு சீரழித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். 

    • ஐபிஎல் ஃபீவரில் இந்திய ரசிகர்கள் உள்ள நிலையில் விரைவில் டி20 உலகக் கோப்பையும் வர உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
    • தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துக்கு கிடைக்கக்கூடிய வருவாயின் அளவுக்கு டி20 உலகக்கோப்பை போட்டிகளிலும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது

    ஐபிஎல் ஃபீவரில் இந்திய ரசிகர்கள் உள்ள நிலையில் விரைவில் டி20 உலகக் கோப்பையும் வர உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.ஐபிஎல்- க்கு பின் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் டி-20 உலகக் கோப்பை 2024 வரும் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 29 ஆம் தேதி வரை பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.

    இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் பொறுபேற்று நடத்துகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதையும் தாண்டி பணம் கொழிக்கும் முக்கிய வணிக வியாபாரமாக உருவெடுத்துள்ளது. இந்த தலைமுறை இளைஞர்கள் கிரிக்கெட் மீது கொண்டுள்ள அதீத ஆர்வமே இந்த வணிகத்தின் பிரதான முதலீடு ஆகும்.

    ஐபிஎல் ஆகினும் உலகக்கோப்பை போட்டிகள் ஆகினும் பல்வேறு நிறுவனங்கள் தங்களை விளம்பரப் படுத்திக்கொள்ள இதை சரியான களமாக பயன்படுத்திக் கொள்வர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான டி20 போட்டிகளை ஒளிபரப்பும் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துக்கு விளம்பரங்கள் மூலமும் அதனுடன் தொடர்புடைய வர்த்தகங்கள் மூலமும் மொத்தமாக ரூ.1600 முதல் ரூ.1800 வரை வருமானம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

    தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துக்கு கிடைக்கக்கூடிய வருவாயின் அளவுக்கு டி20 உலகக்கோப்பை போட்டிகளிலும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. விளம்பரங்களுக்கு 40 சதவீதம் வர்த்தக இடத்தை ஒதுக்கியுள்ள டிஸ்னி ஸ்டார்க்கு கேமிங் மற்றும் இதர ஒளிபரப்ப்பு தொடர்புடைய வர்த்தகங்கள் மூலமும் இந்த அளவு வருமானம் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

     

    டி20 உலகக்கோப்பை 2024 இந்திய கிரிக்கெட் அணியில், ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங் , ஜஸ்பிரித் பும்ரா, முகமட். சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    • 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
    • கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.

    மும்பை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமலேயே உள்ளன. இந்நிலையில் எண்ணை நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக கிரிசில் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச சந்தையில் கடந்த நிதி ஆண்டோடு (2022-23) ஒப்பிடுகையில், இந்த நிதி ஆண்டில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.

    ஆனால் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதத்துக்கு பிறகு எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன.

    இதனால் இந்நிதி ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022-23ம் நிதி ஆண்டில் இது ரூ.33 ஆயிரம் கோடியாக இருந்தது. எனவே இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்காக அதிகரித்துள்ளது.

    கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் சராசரியாக ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்தது.

    இந்த அதிக லாபம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.

    எண்ணெய் நிறுவனங்கள் 2 வழிகளில் லாபம் ஈட்டுகின்றன. அவை எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சில்லரை விற்பனை ஆகும். கச்சா எண்ணையின் விலை, அதை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றுடன் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் மொத்த விலையை கழித்தால் வரும் லாபம் எண்ணை நிறுவனங்களுடையது. மேலும் கச்சா எண்ணையை சுத்திகரித்த பின்பு கிடைக்கும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலமும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பெறுகின்றன.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    • சீதோசன நிலை காரணமாக நண்டுகள் வரத்து அதிகரிப்பு.
    • நல்ல லாபம் கிடைப்பதால் மீன்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம் கடற்பகுதியை ஒட்டிய கொள்ளுக்காடு பகுதியில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகு மூலமாக கடலுக்குள் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதிராம்பட்டினம் முதல் மல்லிப்பட்டினம் வரையிலான கடல் பகுதி சேற்று பகுதி என்பதால் இப்பகுதிகளில் கிடைக்கும் கொடுவா மீன், இறால், நண்டு சுவை மிகுந்ததாக இருக்கும்.

    இதனால் இப்பகுதியில் கிடைக்கும் மீன் இறால் நண்டுகளுக்கு மவுசு அதிகம்.

    இந்த நிலையில் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள நல்ல சீதோசன நிலை காரணமாக நண்டுகள் வரத்து அதிகரிக்கப்பட்டு, அதிக அளவில் கிடைக்கின்றன.

    இந்த நண்டுகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்து வருவதால் நல்ல லாபம் கிடைப்பதாக மீன்வர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    இப்பகுதி யில் தினந்தோறும் பல லட்சகணக்கான ரூபாய்க்கு வர்த்தககம் நடைபெறும் நிலையில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததால் கொள்முதல் செய்ய வரும் நிறுவனங்கள், பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.

    எனவே கொள்ளுக்காடு ஊராட்சி நிர்வாகம் முறையான சாலை தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

    • திருவாரூரில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
    • நன்கு காயவைத்து கொண்டு வந்தால் 30 சதவீதம் வரை கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    திருவாரூர்

    திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    திருவாரூா் மாவட்டத்தை பொருத்தவரையில் திருவாரூர், மன்னார்குடி, வலங்கைமான், மூங்கில்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனா்.

    திருவாரூரில் 3 முறை பருத்தி ஏலம் நடந்துள்ளது. முதல் ஏலத்தின் போது சுமார் ரூ.54 லட்சம் மதிப்பிலும், 2-வது ஏலத்தில் ரூ.1 கோடியே 52 லட்சத்து 87 ஆயிரத்து 514 மதிப்பிலும், நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் ஒரே நாளில் ரூ.2 கோடியே 3 லட்சத்திற்கு ஏலம் போனது.

    அதிகபட்ச விலை நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் அதிபட்சமாக குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 899-க்கும், சராசரியாக ரூ.6 ஆயிரத்து 355-க்கும் ஏலம் போனது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.4.05 கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது. பருத்தியை விவசாயிகள் ஈரப்பதமாக கொண்டு வருவதால் குறைந்த விலைக்கே வியாபாரிகள் ஏலம் எடுக்கின்றனர்.

    அதே நிலையில் பருத்தியை நன்கு காயவைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தால் 30 சதவீதம் வரை கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் பருத்தியை காய வைத்து கொண்டு வந்தால் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி நடைபெற்று வருகிறது
    • இந்த ஆண்டு கடலை சாகுபடியில் எதிர்பார்த்த லாபம் இருக்காது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனம், பெரியகுத்தகை ,செம்போடை, தேத்தாகுடி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் ஆண்டுதோறும் பயிரிடப்படும் நிலக் கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

    இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி நடைபெற்று வருகிறது .ஒரு சில இடங்களில் மழை காலத்திற்கு முன்பே விதைகடலை போடப்பட்டு அவைகள் முளைத்து பூ பூத்த நிலையில் விழுந்து இறங்குவதற்கு வசதியாக மண் அணைக்கும் பணியும் நடைபெற்றது.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை சீராக தொடர்ந்து பெய்யும் என்று நம்பி நிலக்கடலை சாகுபடி செய்த விவசாயிகள் திடீரென்று வழக்கத்தைவிட குறைவான அளவு மழை பெய்ததால் தற்போது கடலை சாகுபடிக்கு தண்ணீர் இறைக்க வேண்டி சூழல் ஏற்பட்டுள்ளது.

    கடலை சாகுபடி செய்து 20 முதல் 40 நாட்கள் ஆன நிலையில் குளம் குட்டையில் இருந்து தண்ணீர் வைக்க வேண்டிய சூழ்நிலையில் விவசாயிகள் கடலை சாகுபடிக்கு தண்ணீர் இறைத்து வருகின்றனர்.

    இதனால் கடலை சாகுபடிக்கு கூடுதல் செய்வு ஏற்படுகிறது எனவிவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    கடலை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உர தட்டுபாடு, பூச்சி தாக்குல், தண்ணீர் பற்றா குறையால் என்ஜீன் வைத்து தண்ணீர் இறைப்பதால் ஏற்படும் கூடுதல் செலவு, ஆள் சம்பளம் கூடுதல் என பல்வேறு செலவுகள் அதிகரிப்பால் இந்த ஆண்டுகடலை சாகுபடி எதிர்பார்த்த லாபம் இருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.

    • சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தால் மூடி அலங்கரித்து வழிபாடு.
    • அன்னாபிஷேகத்தை கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும்.

    நாகப்பட்டினம்:

    400 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து வந்து ஜீவ சமாதி நிலையில் இருந்து நாகூரில் அருள்பாலித்து வரும் தமிழ் புலவராம் ஸ்ரீ காங்கேயர் சித்தர் ஜீவ பீடத்தில் ஐப்பசி முழுநிலவு தின வேள்வி மற்றும் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்க அன்னாபிஷேகம் மாற்றும் வேள்வியாகம் நடைபெற்றது கல்லினுள் இருக்கும் தேரை முதல் கருப்பையில் இருக்கும் உயிர் வரை என அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் சிவபெருமான்.

    அதைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த நிகழ்வின் போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்யப்படும்.

    அறிவியலும் ஆன்மிகமும் சந்திரன் இந்த ஐப்பசி பெளர்ணமி தினத்தில் பிரகாசிப்பார் என ஆன்மிகம் உணர்த்தியது.

    அதே போல அறிவியலும் பூமிக்கு அருகே சந்திரன் வருவதால் மிக பிரகாசமாக தனது முழு ஒளியை பூமிக்கு வீசுவதாக வானவியல் அறிவியல் தெரிவிக்கிறது ஐப்பசி பெளர்ணமி அன்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜீவ பீடங்களின் வேள்விகளில் கலந்துகொள்வது, அதில் பங்கெடுப்பது என்பது மிக மிக சிறப்பான பலன் தரக்கூடிய செயல் ஆகும் சோறு கண்ட இடம் சொர்க்கம் அன்னபிஷேகத்தை கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் தான், 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்ற பழமொழி கூறப்படுகிறது.

    அன்னாபிஷேகத்தை கண்டால் தொழில், வியாபார பிரச்னைகள் தீர்ந்து நல்ல லாபம் கிடைக்கும். வாழ்வில் இல்லை என்று சொல்லாத அளவிற்கு உணவு எப்போதும் கிடைக்கும்.நிதி நிலை எப்போதும் சீராக இருக்கும்.அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம்

    உண்டு என்பது ஐதீகம்.சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தார்கள் ஏற்பாட்டினை ஸ்ரீ காங்கேய சித்தர் ஜீவ பீடத்தை நிர்வகித்து வரும் ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    அறக்கட்டளையை சேர்ந்த ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், அனிதா பழனிவேல், சுதாகர், குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • கடல் பாசி 30 முதல் 40 நாட்கள் வரை வளர்க்கப்பட்டு அறுவடைக்கு தயார் செய்யப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தின் அருகே உள்ள கடல்பகுதியில் கடல்பாசி வளர்ப்பு பணி நடைபெற்று வருகிறது. அதில் சின்னமுட்டம் மற்றும் ஆரோக்கியபுரத்தை சார்ந்த மீனவ கிராமங்களில் 25 பயனாளிகள் கடற்பாசி வளர்ப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதம மந்திரி மத்திய சம்பட யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 2 அலகுகள் வீதம் 25 பயனாளிகளுக்கு 50 அலகுகள் என்ற வீதத்தில் சென்னை ஆணையர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தால் கடற்பாசி வளர்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கடல்பாசி வளர்க்கும் திட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடற்பாசியானது கடலில் கயிறு மற்றும் மூங்கில் மிதவைகள் மூலம் கடற்பாசிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் முழுவளர்ச்சியானது 30 முதல் 40 நாட்கள் வரை வளர்க்கப்பட்டு அறுவடைக்கு தயார் செய்யப்படுகிறது.

    கடற்பாசி ஊட்டச்சத்து மிக்க உணவாக மனிதன் மற்றும் விலங்குகளுக்கும் பயன்படுகிறது. மருந்து மூலப்பொருட்கள் இக்கடற்பாசி மூலமாக தயார் செய்யப்படுகிறது. குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் வேதிபொருட்கள் தயாரிக்கவும், வேளாண் துறையில் உரம் தயாரிக்கவும், அழகு பொருட்கள் தயாரிக்கவும், அகார் என்னும் மூலப்பொருட்கள் கடற்பாசியிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.

    கடலில் வளர்க்கப்படும் கடற்பாசிகள் ஈரத்தன்மையுடன் கிலோவிற்கு ரூ.8 என்றும் உலர்ந்த கடற்பாசி கிலோவிற்கு ரூ.60 என்று நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுகின்றன. எனவே, கடல்பாசி வளர்ப்பினால் பல்வேறு நற்பயன்கள் இருப்பதால் இதனை வளர்ப்பதற்கு மீனவர்கள் முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) காசிநாதபாண்டியன், உதவி இயக்குநர், மீன்வளத்துறை ஆய்வாளர், மீன்வளத்துறை (கடல்) முதல்வர், கடலோர அமலாக்க பிரிவு ஆய்வாளர், சார்நிலை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×