search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி விற்பனை"

    • நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கை வினைஞர்களுக்கு ரூ.7.01 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது.
    • அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கூட்டுறவுத்துறையின் மூலம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி, நடப்பாண்டில் 31.01.2024 வரை 15,87,522 விவசாயிகளுக்கு பயிர்கடனாக ரூ.13,364.75 கோடி வழங்கப்பட்டுள்ளது. 73,599 பயனாளிகளுக்கு சிறுவணிகக் கடனாக ரூ.277.21 கோடி, 4,978 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.19.69 கோடி கடனும், 1,681 நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கை வினைஞர்களுக்கு ரூ.7.01 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், கூட்டுறவு மருந்தகங்கள் வாயிலாக ரூ.121.47 கோடி அளவிற்கு மருந்துகளும், கூட்டுறவு மொத்த, பிரதம பண்டக சாலைகள் மூலம் ரூ. 1019 கோடி அளவிற்கு பொருட்களும், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் வாயிலாக ரூ.2084.49 கோடி புரள் வணிகமும், பண்ணை பசுமை கடைகள் வாயிலாக 6236 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.28.53 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர் கோபால், பதிவாளர் டாக்டர் சுப்பையன், சிறப்புப் பணி அலுவலர் சிவன்அருள் உட்பட கூடுதல் பதிவாளர்கள், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நிலங்களில் விளையும் காய்கறிகளை தினமும் இந்த உழவர் சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து வருகின்றனர்.
    • சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தினசரி காய்கறி உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் கள்ளக்கு றிச்சி பகுதியைச் சேர்ந்த சடையம்பட்டு, மட்டிகை குறிச்சி, மல்லிகைபாடி, பொட்டியம், மாயம்பாடி, புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் விளையும் காய்கறிகளை தினமும் இந்த உழவர் சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். இதனை கள்ளக்குறிச்சி மற்றும் அதனைசுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் பலரும் வாங்கிச் செல்வது வழக்கம்.

    தீபாவளி பண்டிகை யை ஒட்டி விவசாயிகள் வெங்காயம், தக்காளி, கத்தரி க்காய், வெண்டைக்காய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட சுமார் 17 டன் காய்கறிகளை 140 விவசாயிகள் விற்பனை க்காக கொண்டு வந்தனர். இதனை கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். உழவர் சந்தையில் வழக்கமாக 8 முதல் 10 டன் காய்கறி மட்டுமே விற்ப னை நடைபெறும் நிலை யில் தீபாவளி பண்டிகையை யொட்டி சுமார் 17 டன் காய்கறிகள் சுமார் ரூ. 8 லட்சத்திற்கு வியாபாரம் நடை பெற்றதாக கூறப்படு கிறது.

    ×