என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏகாம்பரேஸ்வரர் கோவில்"
- பன்னிரண்டு சிவஸ்தலங்களில் கடைசியாக இருப்பது ஏகாம்பரேஸ்வர் திருக்கோவில்.
- கும்பகோணத்திற்குள் இருக்கும் இந்த கோவிலைப் பற்றி புராணங்களில் அங்கங்கே லேசாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பன்னிரண்டு சிவஸ்தலங்களில் கடைசியாக இருப்பது ஏகாம்பரேஸ்வர் திருக்கோவில்.
கும்பகோணத்திற்குள் இருக்கும் இந்த கோவிலைப் பற்றி புராணங்களில் அங்கங்கே லேசாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எல்லா சிவன் கோவில்களில் காணப்படும் நெறிமுறைகள் இங்கு இருக்கிறது.
மாசி மகப் பெருவிழா அன்று ஏகாம்பரேஸ்வரர் உத்சவர் மகாமகக் குளத்திற்கு எழுந்தருளுகிறார்.
இக்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ளது.
கோவிலில் உள்ள ராஜகோபுரம் நான்கு நிலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் உள்ள இறைவன் ஏகாம்பரேஸ்வரர், இறைவி காமாட்சியம்மன்.
அலங்கார நாயகன் ஏகாம்பரேஸ்வரர் நான்கு கரங்களுடன் நின்ற வடிவில் அற்புதமாகக் காட்சியளிக்கிறார்.
அம்மன் சன்னதியின் இரு புறமும் அழகுற தீட்டப்பட்டுள்ள காயத்ரிதேவியின் திருவுருவமும், காமாட்சியம்மனின் ஓவியமும் அழகின் அற்புதமாகக் காண்போரை ரசிக்கத் தூண்டுகிறது.
மகாமண்டபத்தின் தெற்கு முகமாக நின்ற கோலத்தில் அபயம், வரதம், அங்குசம், கதை, நாகாஸ்திரம், பாசம், எச்சரிக்கை ஆகிய கரங்களுடன் எழுந்தருளி தெய்வீகக்கலை அழகுடனும் சிம்ம வாகனத்தில் துவாரபாலகியர் வாசலை அலங்கரிக்க கொலு வீற்றிருக்கிறார் காமாட்சியம்மன்.
- விநாயகப் பெருமான் தனது உடன் பிறப்பான முருகப்பெருமானுக்கு தன் உடலில் பாதியைக் கொடுத்துள்ளார்.
- இவரை வணங்கினால் சகோதர ஒற்றுமை ஏற்படும் என்று நம்புகிறார்கள்.
சென்னை தங்கசாலைத் தெருவில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில்
விநாயகப் பெருமான் தனது உடன் பிறப்பான முருகப்பெருமானுக்கு தன் உடலில் பாதியைக் கொடுத்துள்ளார்.
அவருக்கு பின்புறம் முருகனது தோற்றம் உள்ளது.
எழு நாகர்தலை உருவின் மேல் ஐந்து முருகங்களுடன் அமர்ந்த கோலத்தில் இவர் காணப்பட,
பின்புறம் நின்ற கோலத்தில் தம்பி முருகன் இருக்கிறார்.
இவரை வணங்கினால் சகோதர ஒற்றுமை ஏற்படும் என்று நம்புகிறார்கள்.
- மர்ம நபர் 3 அடி உயர முருகன் கற்சிலையை உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.
- கோவிலுக்குள் புகுந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிக் குளத்தில் பிரசித்தி பெற்ற பழமையான ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
செட்டிக்குளம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆண்டின் அனைத்து மாதங்களிலும் இந்த கோவிலில் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கோவில் நடை அடைத்து பூட்டப்பட்டது. அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம ஆசாமி இரும்பு கேட்டின் ஒரு பகுதியை வளைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அங்குள்ள வாகன மண்டபத்திற்கு சென்ற அவர்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.
அந்த மண்டபத்தில் விநாயகர், முருகன், பைரவர் கல் சிலைகளும், கருடாழ்வார், சிற்ப மரத்தினாலான வாகனங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் மர்ம நபர் 3 அடி உயர முருகன் கற்சிலையை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். மேலும், பைரவர் சிலையை கீழே தள்ளிவிட்டதோடு கருடாழ்வார் மர வாகனத்தையும் உடைத்துள்ளார். பின்னர் அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த பழைய கோவில் பதிவேடுகளையும் தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இன்று காலை கோவிலை திறந்த பார்த்தபோது சாமி சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த கோவில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி மற்றும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் சிலைகளை உடைத்து அத்துமீறலில் ஈடுபட்ட நபரின் முகம் பதிவாகி இருந்தது. அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்தது செட்டிக்குளம் அருகேயுள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி மகன் செல்வராஜ் (வயது 36) என்பது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கோவிலுக்குள் புகுந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது. அவர் தானாக கோவிலுக்குள் புகுந்தாரா அல்லது யாராவது தூண்டுதலின் பேரில் வந்தாரா என்பது குறித்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம் நடைபெற்றது.
- சிறப்பு வழிபாடும் வெகு விமரிசையாக நடந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களுக்குமான குபேரர் மீன ஆசனத்தில் வீற்றிருக்குமாறு ஏகாம்பரேஸ்வரர் கல் தூண்களின் சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் காமாட்சி அம்பாள் சன்னதிக்கு எதிரில் மகா குபேரருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் மகா குபேரர் சித்ரலேகாவுடன் தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். இந்த சன்னதியில் ஒவ்வொரு மாதமும் குபேரரின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று மகா குபேர ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று பூரட்டாதி நட்சத்திரத்தை ஒட்டி மகா குபேரருக்கு ஹோமமும், சிறப்பு வழிபாடும் வெகு விமரிசையாக நடந்தது.
- ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள குபேரன் சன்னிதியில் நடைபெறும் தீபாவளி குபேர சிறப்பு பூஜையும் பிரபலமாகி வருகின்றது.
- சிறப்பு பூஜையில் குபேரர்-சித்ரலேகாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கா ரங்கள் மேற்கொ ள்ளப்ப ட்டன.
பெரம்பலூர்
தீபாவளி நாளில் குபேரன் மற்றும் லட்சுமி பூஜைகள் நடத்தி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். எனவே, குபேர மற்றும் லட்சுமி வழிபாடுகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள குபேரன் சன்னிதியில் நடைபெறும் தீபாவளி குபேர சிறப்பு பூஜையும் பிரபலமாகி வருகின்றது.
கொரோனா தொற்று காலம் என்பதை கருத்தில் கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி நாளில் நடைபெற்ற குபேர பூஜைகள் குறைவான நபர்கள் பங்கேற்கும் விதமாகவே நடைபெற்றது. இந்த நிலையில் நடப்பாண்டில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் குபேரர்-சித்ரலேகாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கா ரங்கள் மேற்கொ ள்ளப்ப ட்டன.
இதில் நாணயங்கள், பொன், பொருட்களைக் கொண்டும் குபேரருக்கு சிறப்பு அர்சனைகள் நடை பெற்றன. அதனைத் தொடர்ந்து அன்ன தானமும் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆடிட்டர் ஆறுமுகம் தலைமையில் பொறியாளர் ராமலிங்கம், செட்டிக்குளத்தைச் சேர்ந்த மணிக ண்டன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
நாணயங்கள் இலவச விநியோகம் குபேர பூஜையில் வைத்து பூஜிக்கப்படும் ரூபாய் நோட்டுகள், நாண யங்கள், நகைகளை வீட்டில் வைத்து குபேர மற்றும் லட்சுமி பூஜைகளை செய்து வந்தால், கஷ்டங்கள் நீங்கி, லட்சுமி கடாட்ஷம் பெருகும். இதனை கருத்தில் கொண்டு, தரிசனத்துக்கு வரும் அனைவருக்கும் பூஜிக்கப்பட்ட நாணயங்கள் உபய தாரர்கள் மற்றும் பக்தர்களால் ஆண்டு தோறும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்