என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கல்லூரி மாணவன் கொலை"
- தீபாவளி தினத்தன்று பாலு நவீனை நைசாக பேசி மது குடிக்க அழைத்தார்.
- இருவரும் விஜயநகரம் டவுன் அருகே ஒன் டவுன் அடுத்துள்ள துவாரபடி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே இருந்து மது குடித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே உள்ள கே.எல்.புரத்தை சேர்ந்தவர் நவீன் (வயது19). அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பாலு (25). இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். ஒன்றாக நெருங்கி பழகி வந்தனர்.
பாலு அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.
அந்த இளம்பெண்ணின் செல்போனுக்கு நவீன் குறுந்தகவல் அனுப்பினார். மேலும் அவர் பாலியல் மற்றும் காதல் தொல்லை கொடுக்கும் விதமாக சில தகவல்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் இளம்பெண் வெறுப்படைந்தார். இது குறித்து தனது காதலன் பாலுவிடம் தெரிவித்தார். அவர் நவீனை கண்டித்தார். ஆனால் நவீன், இளம்பெண்ணுக்கு வாட்ஸ்அப் மற்றும் மெசேஜ் அனுப்புவதை நிறுத்தவில்லை.
தொடர்ந்து வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து வாட்ஸ்அப்பில் படங்கள் மற்றும் தகவல் அனுப்பினார். இதனால் மனமுடைந்த இளம்பெண் இது குறித்து மீண்டும் பாலுவிடம் கூறினார். ஆத்திரமடைந்த பாலு நவீனை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
தீபாவளி தினத்தன்று பாலு நவீனை நைசாக பேசி மது குடிக்க அழைத்தார். இருவரும் விஜயநகரம் டவுன் அருகே ஒன் டவுன் அடுத்துள்ள துவாரபடி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே இருந்து மது குடித்தனர்.
அப்போது பாலு தனது காதலியை துன்புறுத்துவதாக நவீனுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பாலு நவீனை கட்டையால் தாக்கினார். படுகாயமடைந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பின்னர் பாலு எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து புறப்பட்டு வந்தார். இதற்கு இடையே நவீன் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் விஜயநகரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து நவீனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பாலு கொலை செய்யப்பட்ட நவீனின் நண்பர்கள் சிலருக்கு போன் செய்து நவீன் ரெயிலில் அடிபட்டு தண்டவாளம் அருகே இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.
நவீன் குடும்பத்தினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவீன் உடலை பார்வையிட்டனர். உடலில் இருந்த காயங்களை பார்த்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாலு தலைமறைவாகிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் பாலுவை பிடித்து விசாரித்தனர்.
அப்போது காதலிக்கு நவீன் தொடர்ந்து வாட்ஸப் மூலம் மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததால் அடித்து கொலை செய்ததாக அவர் தெரிவித்தார். போலீசார் பாலுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்