search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருத்தி- சூரியகாந்தி"

    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 12 வணிகா்கள் வாங்க வந்திருந்தனா்.
    • ஒரு குவிண்டால் ரூ. 7,550 முதல் ரூ. 10,102 வரை விற்பனையானது.

    மூலனூர்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 233 விவசாயிகள் தங்களுடைய 2,160 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 720 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 12 வணிகா்கள் வாங்க வந்திருந்தனா். ஒரு குவிண்டால் ரூ. 7,550 முதல் ரூ. 10,102 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.8,450. கடந்த வார சராசரி விலை ரூ. 8,650. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 58 லட்சம்.

    விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தனா்.

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 14.46 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்த வார ஏலத்துக்கு அரவக்குறிச்சி, விஸ்வநாதபுரி, மேட்டுவலசு, வடுகபட்டி, மோளபட்டி, பெத்தாம்பூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 27 விவசாயிகள் தங்களுடைய 451 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 22 டன். ஈரோடு, காரமடை, சித்தோடு, பூனாட்சி, காங்கயத்தில் இருந்து 8 வணிகா்கள் வாங்குவதற்காக வந்திருந்தனா்.

    ஒரு கிலோ ரூ.57.27 முதல் முதல் ரூ. 70.37 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 66.59. கடந்த வார சராசரி விலை ரூ.65.61. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 14.46 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

    ×