search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாங்குநேரி"

    • நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம், தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ஜான்சிராணி வடக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கள பொறுப்பாளராக உள்ளார்.
    • சம்பவத்தன்று இரவில் ஜான்சிராணியின் தாயாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக, அவரது தந்தை போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம், தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சென்னையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ஜான்சிராணி (வயது 43) வடக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கள பொறுப்பாளராக உள்ளார். இவருக்கும், இவரது தம்பியான அதே ஊரை சேர்ந்த எட்வர்டு ராஜனுக்கும் பணம் மற்றும் நகை கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று இரவில் ஜான்சிராணியின் தாயாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக, அவரது தந்தை போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஜான்சிராணி கீழரதவீதியில் உள்ள தந்தை வீட்டிற்கு தாயாரை பார்ப்பதற்காக சென்றார்.

    அப்போது எட்வர்டு ராஜன் எங்கள் வீட்டிற்கு எப்படி வரலாம் என கேட்டு ஜான்சிராணியை அவதூறாக பேசினார். மேலும் அரிவாளால் வெட்டினார். பின்னர் கொலை மிரட்டலும் விடுத்தார்.

    இதனால் காயமடைந்த ஜான்சிராணி சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி எட்வர்டு ராஜனை தேடி வருகின்றனர்.

    • நாங்குநேரி ரெயில்வே கேட் பகுதியில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி ரெயில்வே கேட் பகுதியில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். மேலும் அவர்களிடம் ஒரு மூட்டையும் இருந்தது.

    இதைப்பார்த்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த மூட்டையை சோதனையிட்டனர். அப்போது அதில் 30 கிலோ அளவிலான புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சிங்கநேரியை சேர்ந்த சங்கர்கணேஷ் (வயது 25), வேல்கண்ணன் (27) தூத்துக்குடியை சேர்ந்த வீரபத்ரன் (32) என்பது தெரியவந்தது. 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×