என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆராய்ச்சி பணி"
- வேளாண் பல்கலையின் ஆராய்ச்சி உதவியாளர் பிரிவின் கீழ் தற்காலிக பணி வாய்ப்புகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
- பி.எஸ்சி., அக்ரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள், 15-ந்தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.
திருப்பூர்:
வேளாண் பல்கலையின் ஆராய்ச்சி உதவியாளர் பிரிவின் கீழ் தற்காலிக பணி வாய்ப்புகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பயிர் மேலாண்மை துறையின் கீழ், பயிர் பல்வகைப்படுத்துதல் பிரிவின் கீழ் திட்ட ஆராய்ச்சிக்கு ஓராண்டு தற்காலிக அடிப்படையில், இளம் தொழில்வல்லுநர் ஒருவரும், விவசாய பயிர்களில் விதை உற்பத்தி ஆராய்ச்சியின் கீழ் ஜூனியர் ஆராய்ச்சி உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு மாத ஊதியம், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. பி.எஸ்சி., அக்ரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள், 15-ந்தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் காலை 9 மணிக்கு பயிர் மேலாண்மை துறையில் நடைபெறும். மேலும், விபரங்களை https://tnau.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
- சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை ஆராய்ச்சி பணிக்கு வழங்கலாம்.
- இந்த தகவலை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்வித்துறையின் அரசாணையின் படி சரித்திர, முக்கியமான செய்திகள், ஏடுகள், ஆவணங்கள், ஆகியவற்றை தனியார் அமைப்புகளிடம் இருந்து பெற்று ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த தமிழக அரசால் உத்திரவிடப்பட்டு உள்ளது.
இந்த மாதிரியான தொன்மையான ஆவண ங்கள் நமது கலாச்சாரத்தை மிகவும் பிரதிபலிப்பதாக இருக்கும். இவற்றினை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ், ஆவணக் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வுகள் துறையின் பாதுகாப்பில் வைக்க வேண்டியது அவசியமாகிறது.
மேலும், காலமாற்றத்தினாலும், மனிதனின் அஜாக்கிரதையாலும் இதன் முக்கியத்துவம் கெடாமல், குறையாமல் மின்னணு முறையில் பாதுகாப்பதும் முக்கியமானதாகும்.
இது தொடர்பாக பொது மக்கள், நிறுவனங்களில் வரலாற்று சிறப்பு மிகுந்த ஆவணங்கள் தங்கள் வசம் இருந்தால், சிவகங்கை மாவட்ட கலெக்டருகக்கு தகவல் தெரிவித்து மேற்கண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை பாது காக்கவும், ஆராய்ச்சிக்கு பயன்படுத்த உதவிடுமாறும் கேட்டு கொள்கிறோம்.
இதுகுறித்த விவர ங்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கலெக்டர் அலுவலகம், சிவகங்கை என்ற முகவாிக்கும், 94450 08149 என்ற கைப்பேசி எண்ணிற்கும், 04575 - 240392 என்ற அலுவலக எண்ணிற்கும் தொடா்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்