search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "102.24 அடியாக உயர்வு"

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 102.24 அடியாக உயர்ந்துள்ளது.
    • அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டைக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நேற்று வினாடிக்கு 1,600 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 2,800 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 102.24 அடியாக உயர்ந்துள்ளது.

    அணையில் இருந்து தடப்பள்ளி -அரக்கன் கோட்டைக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    ×