search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தை மர்மச்சாவு"

    • வண்டிப்பெரியாறு மஞ்சுமலை ராஜமுடி பகுதியில் பெண் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
    • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைப்படி அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே உள்ள வண்டிப்பெரியாறு மஞ்சுமலை ராஜமுடி பகுதியில் பெண் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதை பார்த்ததும் அவ்வழியாக சென்ற தொழிலாளிகள் வனத்துறை யினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை கைப்பற்றி பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு கொண்டு வந்தனர்.

    தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைப்படி அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் சிறுத்தையின் கல்லீரல் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.

    இது குறித்து வனத்துறை யினர் கூறுகையில், வேலியில் சிக்கியதற்கான அறிகுறிகள் இல்லை. மேலும் உடலில் விஷம் எதுவும் இல்லை. எனவே நோய் தொற்று காரணமாக உயிரிழந்திருக்கலாம். சிறுத்தையின் உள் உருப்புகள் அடுத்த கட்ட ஆய்வுக்காக நிபுணர் பரிசோதனைக்கு அனுப்பப்படும்.

    அதன் பின்னரே சிறுத்தை இறந்ததற்கான உண்மையான காரணம் தெரிய வரும். இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருந்ததால் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டது.

    ஆனால் அதில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. அப்பகுதியில் மீண்டும் சோதனை நடத்தப்படும் என்றனர். பின்னர் சிறுத்தையின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

    ×