search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் தீ விபத்து"

    • தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • கார் தீப்பற்றி எரிந்த தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் திரண்டனர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த இடையபட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது காரை மணப்பாறை எடத்தெரு பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார்.

    இன்று காலை வேலைக்கு செல்வதற்காக காரை ஸ்டார்ட் செய்ய முயன்ற போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காரில் இருந் இறங்கி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மண்ணை கொட்டி தீயை அணைக்க முயன்றார்.

    ஆனாலும் சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. சுட்டெரிக்கும் வெயிலில் நெருக்கு கொழுந்து விட்டு எரியவே அக்கம் பக்கத்தினர் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கார் தீப்பற்றி எரிந்த தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் திரண்டனர். சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கார் தீப்பற்றி எரிந்ததாக தெரிகிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. 

    • கார் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடியில் ஒரு வீட்டில் விஷேச நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்கு மதிய விருந்திற்கு பிரியாணி ஆர்டர் கொடுத்திருந்தனர். அதன்படி கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள பிரியாணி கடையிலிருந்து ஒரு பெரிய அண்டாவில் பிரியாணியை ஏற்றிக்கொண்டு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    காரை அன்வர்அலி (வயது55) என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. அதனை தொடர்ந்து கார் தீப்பிடித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் அன்வர்அலி காரில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் சமயபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒர்க் ஷாப்பில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு (வயது 33). இவர் ஈரோடு-சக்தி மெயின் ரோடு வெள்ளாளபாளையம் பிரிவு அருகே சொந்தமாக ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் ரகு ஒர்க் ஷாப்பில் பழுதாகி நின்ற ஒரு காரை சரி செய்து ஒர்க் ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.

    ஒர்க் ஷாப்பில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களில் ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    அந்த கார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காரும் தீ பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கோபி செட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ஒரு கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. மற்றொரு கார் பாதி எரிந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

    மேலும் விபத்து நடந்த ஒர்க் ஷாப் அருகே பெட்ரோல் பங்க் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    குன்றத்தூர்:

    சென்னையை அடுத்த புழல் காவாங்கரையை சேர்ந்தவர் காளிராஜன் (வயது 28). இவர் தனக்கு சொந்தமான காரில் நேற்று அதிகாலை தனது நண்பர் கணபதி என்பவருடன் தாம்பரத்தில் இருந்து வேங்கடமங்கலம் கிராமத்திற்கு சென்று தங்களது நண்பரை பார்த்துவிட்டு தாம்பரம் - மதுரவாயல் பைபாசில் புழல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே சென்றபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.

    இதை பார்த்ததும் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினர். அதற்குள் காரின் முன் பகுதி தீப்பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தீயை அணைக்க போராடினார்கள்.

    இது குறித்து தகவல் அறிந்துவந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் உள்ள பேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீ விபத்தின் போது, காரில் இருந்து பட்டாசு வெடித்தது போன்ற சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காரஜ்மாவில் கிண்னெடும் கட்டில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் என்ற கிருஷ்ண பிரகாஷ் (வயது 35).

    இவர் மாவேலிக்கரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இன்டர்நெட் கபே (கணினி மையம்) நடத்தி வந்தார். திருமணமாகாத இவர், தற்போது புளிமூடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தினமும் தனது காரில் இண்டர்நெட் கபேக்கு சென்று வந்தார்.

    நேற்று தனது நிறுவனத்திற்கு சென்ற அவர் நள்ளிரவு வரை அங்கேயே இருந்து வேலை பார்த்துள்ளார். அதன்பிறகு காரில் அவர் வீட்டுக்குப் புறப்பட்டார். நள்ளிரவு 12.45 மணியளவில் வீட்டுக்கு வந்த அவர், வீட்டின் முன்பு காரை நிறுத்தினார். அப்போது திடீரென கார் தீப்பிடித்தது.

    இதனால் காருக்குள் இருந்த கண்ணன் என்ற கிருஷ்ண பிரகாஷ் உடனடியாக இறங்க முயன்றார். ஆனால் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அதற்குள் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. கண்ணன் தீயில் கருகியபடி அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கண்ணன் என்ற கிருஷ்ண பிரகாஷ் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் தீப்பிடித்தது எப்படி என்பது தெரியவில்லை. தீவிபத்தின் போது, காரில் இருந்து பட்டாசு வெடித்தது போன்ற சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். எனவே காரில் வெடிபொருட்கள் ஏதும் இருந்ததா? அல்லது தொழில் நுட்ப கோளாறு காரணமாக கார் தீப்பிடித்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிர்ச்சி அடைந்த அருண் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினார்.
    • தீப்பற்றிய உடன் அருண் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    போரூர்:

    வடபழனி ஈஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது48) தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று இரவு வெளியே செல்வதற்காக வீட்டு முன்பு நிறுத்தி இருந்த காரை இயக்கினார். அப்போது திடீரென காரில் இருந்து கரும்புகை கிளம்பியது.

    சிறிது நேரத்தில் தீப்பிடித்து மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருண் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் தீ மளமளவென கார் முழுவதும் பற்றி எரிந்தது.

    அருகில் இருந்தவர்கள் காரில் பற்றிய தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். எனினும் கார் முழுவதும் சேதம் அடைந்தது. காரில் தீப்பற்றிய உடன் அருண் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    • செல்வராஜ் பேரையூரில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட் செல்வதற்காக ஆம்னி காரில் வந்தார்.
    • பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென கார் தீ பற்றியது.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் போஸ். இவரது மகன் செல்வராஜ், மீன் வியாபாரி. வியாபாரம் செய்வதற்காக செல்வராஜ் பேரையூரில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட் செல்வதற்காக இன்று அதிகாலை ஆம்னி காரில் வந்தார்.

    திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் ஆம்னி காருக்கு கியாஸ் நிரப்பியுள்ளார். ஆனால் காரை இயக்க முடியவில்லை. இதனால் காரில் பெட்ரோல் இல்லாததால் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு காரை தள்ளி சென்றார். பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென கார் தீ பற்றியது.

    இதனால் அதிர்ச்சிடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    இருப்பினும் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை முக்கிய சாலையில் திருப்பரங்குன்றம் பெட்ரோல் பங்க் அருகிலேயே ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை வேளை என்பதால் அதிக போக்குவரத்து இல்லாமல் இருந்தது. இதனால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.

    • நாய் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் இடது புறமாக காரை வளைத்துள்ளனர்.
    • கார் நிலைத்தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.

    நீலாம்பூர்:

    கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரில் சூலூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    அந்த காரை முத்து கவுண்டம்புதூரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் காரை ஓட்டி வந்துள்ளனர்.

    அப்போது மண்டபம் அருகே வரும் பொழுது நாய் குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நாய் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் இடது புறமாக காரை வளைத்துள்ளனர்.

    கார் நிலைத்தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.

    உடனடியாக காரில் இருந்து இறங்கிய ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயை அணைப்பதற்கு முயற்சித்தும் முடியவில்லை. பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    இதில் அதிர்ஷ்டவசமாக கார் டிரைவரும், கார் உரிமையாளர் ரமேசும் உயிர் தப்பினர். இது தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாய் குறுக்கே சென்றதால் கார் புளியமரத்தின் மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காமநாயக்கன்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
    • கணவன்-மனைவி இருவரும் அலறி அடித்து காரை விட்டு இறங்கியதால் தீ விபத்தில் இருந்து இருவரும் உயிர் தப்பினர்.

    பல்லடம்:

    திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் ( வயது 70 ). இவர் தனது மனைவியுடன் திருப்பூரிலிருந்து பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அருகே காரை நிறுத்தி இயற்கை உபாதை கழித்துவிட்டு மீண்டும் காரை ஸ்டார்ட் செய்த போது திடீரென முன்பக்க என்ஜினில் இருந்து புகையுடன் தீப்பிடித்தது. இதனை கண்டு கணவன்-மனைவி இருவரும் அலறி அடித்து காரை விட்டு இறங்கியதால் தீ விபத்தில் இருந்து இருவரும் உயிர் தப்பினர்.இந்த நிலையில் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் தீயணைப்புதுறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் காரின் முன்பகுதி தீயில் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×