என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அபராதம் வசூல்"
- தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 23 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
- விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 406 குற்றங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு ரூ.2 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 400 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்றுமுன்தினம் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதாவது பிரேக் லைட் எரியாத வாகனங்கள், அதிக அளவில் ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள், அதிக அளவு சரக்கு ஏற்றிச்சென்ற வாகனங்கள், உரிமங்களை தவறாக பயன்படுத்தியது, உரிமங்களின் விதிமீறலுக்கு மாறாக செயல்பட்டது, உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியது, வரி கட்டாமல் ஓடும் வாகனங்கள், காலாவதியான ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவுச் சான்று புத்தகங்கள் இன்றி வாகனம் ஓட்டியது என பல்வேறு குற்றங்கள் கண்டறியப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 23 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 2 ஆயிரத்து 281 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.28 லட்சத்து 49 ஆயிரத்து 315 அளவிற்கு செலுத்தப்படாத வரிகள் கண்டறியப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளன.
மேலும், விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 406 குற்றங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு ரூ.2 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 400 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் செலுத்தப்படாத வரிகள் மற்றும் அபராதத் தொகையை சேர்த்து ரூ.2 கோடியே 39 லட்சத்து 80 ஆயிரத்து 715 வசூலிக்கப்பட்டுள்ளது.
அதிகபாரம் ஏற்றி வந்ததாக 389 வாகனங்களும், அதிக அளவில் ஆட்களை ஏற்றி வந்ததாக 251 வாகனங்களும், உரிமம் இல்லாமல் வந்த 96 வாகனங்களும், வரி கட்டாமல் இயக்கப்பட்டதாக 135 வாகனங்களும், தகுதிச் சான்றிதழ் (எப்.சி.) இல்லாத 308 வாகனங்களும், உரிய காப்பீடு இல்லாத 312 வாகனங்களும், ஓட்டுனர் உரிமம் இல்லாத 295 வாகனங்களும், புகைச்சான்று இல்லாத 111 வாகனங்களும், பிரேக் லைட் எரியாத 267 வாகனங்களும் கண்டறியப்பட்டன. அவற்றில் 368 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற திடீர் சோதனைகள் மாநிலம் முழுவதும் அவ்வப்போது நடத்தப்படும்.
மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை கமிஷனர் சண்முக சுந்தரம் தெரிவித்து உள்ளார்.
- தருமபுரி மாவட்டத்தில் 9 மாதங்களில் வட்டாரப் போக்குவரத்துறை வாகன தணிக்கையில் மூலம் ரூ. 2.42 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
- 513 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2023 முதல், செப்- 2023 வரை 9 மாதங்களில் போக்குவரத்து துறையின் சார்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, அரூர் அலுவலக பகுதி மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அதில், ஏறத்தாழ 19,500 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 5740 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக்காக 513 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.
மேலும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 189 வாகனங்களுக்கும், அதிக பாரம் ஏற்றிச்சென்ற 60 வாகனங்களுக்கும், அனுமதீச்சீட்டு இல்லாமல் இயக்கிய 113 வாகனங்களுக்கும், அதிவேகமாக வாகனங்களை இயக்கிய 3510 வாகனங்களுக்கும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கிய 285 வாகனங்களுக்கும், காப்புச்சான்று, புகைச்சான்று இல்லாமல் இயக்கிய 740 வாகனங்களுக்கும், சிகப்பு நிற பிரதிபலிப்பான் இல்லாமல் இயக்கிய 432 வாகனங்களுக்கும் மற்றும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 222 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் பொழுது அபராதம் விதிக்கப்பட்டது.
மேற்கண்ட வாகன சோதனையின் மூலமாக அரசுக்கு சாலை வரியாக ரூ.87.72,240 மற்றும் இணக்க கட்டணமாக ரூ. 62,50,950 ஆக மொத்தம் ரூ.1,50,23,190/- உடனடியாக வசுலிக்கப்பட்டது. மேலும், இந்த வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.92.01,385 நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த ஒன்பது மாதங்களில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக அரசுக்கு வாகன சோதனை மூலம் மொத்தம் ரூ.2,42,24,575/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பான 30 கி.மீ. மேல் இயக்கப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் வேகம் கண்காணிக்கும் கருவி உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளில் 11,231 வாகனங்களுக்கு இ செலான் மூலம் ரூ.79,13,425- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன், அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- போலியான, உணவுக்கு ஒவ்வாத கேடு விளைவிக்க கூடிய உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு சேலம் டி.ஆர்.ஓ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
- தொடர்ந்து 43 சிவில் வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த சோதனையில் கலப்படம், தரமற்ற, பாதுகாக்கப்பட்ட உணவு பொருட்களை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் போலியான, உணவுக்கு ஒவ்வாத கேடு விளைவிக்க கூடிய உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு சேலம் டி.ஆர்.ஓ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சிவில் பிரிவின் கீழ் பதியப்பட்ட 43 வழக்குகளில் 3.7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து டி.ஆர்.ஓ மேனகா உத்தரவிட்டார்.
அதில் அதிகபட்சம் ஜவ்வரிசி தொடர்பான 7 வழக்குகளில் 1.11 லட்சம் ரூபாய், நாட்டு சக்கரை தொடர்பான 7 வழக்கில் 71 ஆயிரம் ரூபாய், மசாலா பொருட்கள் தொடர்பான 7 வழக்கில் 45 ஆயிரத்து 500 ரூபாய், இனிப்பு வகை தொடர்பான 3 வழக்கில் 12 ஆயிரம் ரூபாய் உள்பட மொத்தம் 3.7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து 43 சிவில் வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.
- உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்ட விரோத மாக கனிமங்கள் எடுத்துச் செல்வதை தடுக்க வேண்டும்
- திடீர் தணிக்கை மற்றும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் அதிக அளவில் கனிமங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.
மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.
கூட்டத்திற்கு பின் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துச் செல்வதை தடுப்பதற்கும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக அதிக பாரம் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சோதனை செய்து நடவடிக்கை எடுப்பதற்காகவும் தனி தாசில்தார் தலைமையிலான 7 சிறப்பு குழுவினர்கள், காவல் துறையினர் மற்றும் மதுரை மண்டல பறக்கும் படையினரால் திடீர் தணிக்கை மற்றும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட் டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை உரிய அனுமதி சிட்டு இல்லாமல் சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துச் சென்றதாக 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக பாரம் ஏற்றிச்சென்ற 49 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகனங்களின் உரிமையாளர்கள் மீது அபராதம் ரூ.17 லட்சத்து 99 ஆயிரத்து 920 விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், துணை இயக்குநர் (கனிமம்) தங்க முனியசாமி, உசூர் மேலாளர் சுப்பிரமணியம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- ஒரே நாளில் மட்டும் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் பகுதியில் மது போதையில் வாகனங்களை அதிவேகமாக இயக்கி விபத்துக்களை அதிகளவில் ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக பொதுமக்களும் போலீசாரிடம் இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் வேகமாக, மது போதையில் செல்வது குறித்து தெரிவித்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூர் பஸ் நிலையம், அண்ணா மடுவு, ஜிஹெச் கார்னர், தவிட்டுப் பாளையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடத்தில் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதில் ஒரே நாளில் மட்டும் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
- அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகளின் செல்போன் எண்களுக்கு மையங்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
- போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத்தொகை 'டிஜிட்டல்' முறையில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் போலீசார் வசூலித்து வருகின்றனர்.
சென்னை:
மதுபோதையில் வாகனங்களை ஓட்டிச்செல்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அபராதத்தொகை அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் உடனடியாக செலுத்துவது இல்லை. இவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராதத் தொகையை வசூலிப்பதற்காக சென்னையில் 10 இடங்களில் போலீஸ் அழைப்பு மையங்கள் (கால் சென்டர்) இயங்கி வருகிறது.
அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகளின் செல்போன் எண்களுக்கு இந்த மையங்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் கடந்த 20-ந்தேதி அன்று ஒரேநாளில் 586 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.60 லட்சத்து 36 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் இந்த அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 12 ஆயிரத்து 551 குடிபோதை வழக்குகளுக்கு போலீசார் தீர்வு கண்டுள்ளனர்.
இதன் மூலம் ரூ.12 கோடியே 99 லட்சத்து 8 ஆயிரத்து 600 அபராதத் தொகையாக கிடைத்துள்ளது. தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டும் அபராதத் தொகை செலுத்தாத 371 வாகன ஓட்டிகளின் அசையும் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத்தொகை 'டிஜிட்டல்' முறையில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் போலீசார் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 4 மாதங்களில் நிலுவையில் இருந்த 1 லட்சத்து 63 ஆயிரத்து 318 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளுக்கு போலீசார் தீர்வு கண்டு ரூ.6 கோடியே 78 லட்சத்து 69 ஆயிரத்து 540 அபராதத்தொகை வசூலித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையை போலீசார் துன்புறுத்தலாகக் கருதக்கூடாது. விழிப்புணர்வாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் ரூ23.83 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
- மேற்கண்ட தகவலை மதுரை மண்டல மின்வாரிய அமலாக்க பிரிவு செயற் பொறியாளர் பிரபாகரன் தெரிவித்தார்.
மதுரை
மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, துாத்துக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் துாத்துக்குடி மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட ஒட்டநத்தம், ஒட்டப்பிடாரம், கங்கை கொண்டான், தாழையூத்து, வெள்ளாரம், கவர்னகிரி, பாஞ்சாலங்குறிச்சி, துாத்துக்குடி, புதியம்புதூர், முப்புலிவெட்டி, அய்யன் பொம்மையபுரம், விளாத்தி குளம் மற்றும் இருவேலி ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 17 இடங்களில் மின்சாரம் திருடியது கண்டறியப்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.22 லட்சத்து 18 ஆயிரத்து 576 அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டவர்களிடம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் பெறப்பட்டது.
மதுரை கோட்டத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வர்களிடம் ஒட்டு மொத்தமாக ரூ.23லட்சத்து 83ஆயிரத்து 576 அபராதம் பெறப்பட்டது. மதுரை கோட்டத்தில் மின்திருட்டு தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் மதுரை கோட்ட மின்வாரிய அமலாக்க பிரிவு செயல் பொறியாளர் தொலைபேசி எண் 94430 37508-ல் தகவல் தெரிவிக்கலாம் என்று மதுரை மண்டல மின்வாரிய அமலாக்க பிரிவு செயற் பொறியாளர் பிரபாகரன் தெரிவித்தார்.
- 2021-2022 ஆம் நிதியாண்டை விட இந்த ஆண்டு 28.02 சதவீதம் அபராம் அதிகமாக வசூலாகியுள்ளது.
- ெரயிலில் பதிவு செய்யாமல் சரக்குகளை கொண்டு சென்றதாக ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 677 வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை,
சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ெரயில் நிலையங்களில் கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் மாதம் வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து ரூ.14.10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சேலம் ெரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ெரயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ெரயிலில் கொண்டு செல்பவர்களைக் கண்டறிந்து ெரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் மாதம் வரை சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ெரயில் நிலையங்களில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 2 லட்சத்து 821 பேரிடம் இருந்து ரூ.14 கோடியே 10 லட்சத்து 7 ஆயிரத்து 28 அபராதம் வசூலிக்கப்பட்டது. 2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் மாதம் வரை 1 லட்சத்து 93 ஆயி ரத்து 949 பேரிடமிருந்து ரூ.11 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரத்து 949 அபராதம் வசூலிக்கப்பட்டது.
2021-2022 ஆம் நிதியாண்டை விட இந்த ஆண்டு 28.02 சதவீதம் அபராம் அதிகமாக வசூலாகியுள்ளது.
2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் மாதம் வரை ெரயில்களில் முறையற்ற பயணம் மேற்ெகாண்டதாக 28 ஆயிரத்து 998 பேரிடமிருந்து ரூ.1 கோடியே 43 லட்சத்து 51 ஆயிரத்து 980 வசூலிக்கப்பட்டுள்ளது.
ெரயிலில் பதிவு செய்யாமல் சரக்குகளை கொண்டு சென்றதாக 558 பேரிடமிருந்து ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 677 வசூலிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக சேலம் கோட்டத்தில் 2022-2023 ஆண்டில் ரூ.15 கோடியே 57 லட்சத்து 14 ஆயிரத்து 685 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறப்பட்டு உள்ளது.
- 2021-22 ஏப்ரல் - பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 50.33 சதவீதம் அதிகமாகும்
- டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் இந்த முறை கேடுகளை குற்றங்களைக் கண்டறிந்தனர்.
கோவை,
சேலம் ரெயில்வே கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் பல்வேறு முறைகேடுகளை கண்டறிய, ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் வழக்க மான சோதனைகளை மேற்கொள்கின்றனர்.
இதுபோன்ற சோதனைகளின் போது பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் நபர்கள், முறையற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் போன்றவற்றை கண்டறிந்து அதற்கேற்ப அபராதம் விதிக்கின்றனர். அதன்படி, சேலம் கோட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடத்தப்பட்ட பரிசோ தனைகளில் அபராதமாக ரூ.14 கோடியே 65 லட்சத்து 10 ஆயிரத்து 717 வசூல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் ரூ.9.74 கோடி வசூல் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய தொகையை விட ரூ.4. 90 கோடி அதிகமாகும்.
சதவீதத்தின் அடிப்ப டையில் 50.33 சதவீதம் அதிகமாகும்.
இதுகுறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்பு துறை அதிகாரி கூறியதாவது:-
2022-23 ஏப்ரல் பிப்ரவரி மாதங்களில், சேலம் கோட்டத்தின் டிக்கெட் சோதனைக் குழுக்கள் 1,90,202 டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த வழக்குகளைக் கண்டறிந்து, குற்றவாளிகளிடமிருந்து அபராதமாக ரூ.13 கோடியே 35 லட்சத்து 58 ஆயிரத்து 969 வசூலித்தது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் கண்ட றியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் 14.19 சதவீதம் மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை யில் 40.60 சதவீதம் அதிகமாகும்.
மேலும், 2022-23 ஏப்ரல் - பிப்ரவரி மாதங்களில் 25, 397 முறைகேடான பயணங்கள் கண்டறியப்பட்டு, பயணி களிடமிருந்து அபராதமாக ரூ.1 கோடியே 26 லட்சத்து 26,990 வசூலிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கண்ட றியப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கையில் 530.82 சதவீதம் மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை யில் 531.55 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல், 2022-23 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையில், 507 முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பொருட்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது. இந்த வழக்குகளுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட தொகை ரூ.3,24,758 ஆகும். 53 ஆயிரத்து 598 சோதனைகளில் சேலம் கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் இந்த முறை கேடுகளை குற்றங்களைக் கண்டறிந்தனர்.
இதன் அடிப்படை யில் அபராதமாக வசூலித்த மொத்தத்தொகை ரூ.14 கோடியே 65 லட்சத்து 10 ஆயிரத்து 717 ஆகும், இது 2021-22 ஏப்ரல் - பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 50.33 சதவீதம் அதிகமாகும் என்றார்.
- 58 இடங்களில் வாகன சோதனை நடந்தது
- விதி மீறியவர்கள் மீது வழக்கு பதிவு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டத்தில் விதிகளை மீற வாகனங்களை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாடத்திற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஒரே நாளில் 58 இடங்களில் வாகன சோதனை நடைபெற்றது. இதில் மது குடித்துவிட்டு வாகனம் ஒட்டியது விதிகளை மீறியது 3 பேர் சேர்ந்து வாகனங்களில் சென்றது உள்ளிட்ட காரணங்களுக்காக மொத்தம் 265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- அரசுக்கு உரிய இணக்க கட்டணம் மற்றும் பல்வேறு வரியினங்களை சரக்கு போக்குவரத்து வாகனங்கள் முறையாக செலுத்த வேண்டும்.
- விபத்து ஏற்படும் அளவிற்கும் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்
கோவை,
கோவை, நீலகிரி மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் விதிமுறை மீறல் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்ட எல்லைப்பகுதி மற்றும் பல்வேறு பகுதியில் அவ்வப்போது தணிக்கை நடத்தி விதிமுறை மீறல் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
அரசுக்கு உரிய இணக்க கட்டணம் மற்றும் பல்வேறு வரியினங்களை சரக்கு போக்குவரத்து வாகனங்கள் முறையாக செலுத்த வேண்டும். பர்மிட், இன்சூரன்ஸ், டிரைவிங் லைசன்சு இல்லாமல் வாகனங்களை இயக்கக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை சரக போக்குவரத்து இணை கமிஷனர் சிவக்குமரன் கூறியதாவது:-
கோவை சரகத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 3,147 வாகனங்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதிக பாரம், உரிய ஆவணங்கள் இன்றி இயங்கியது. போக்குவரத்து விதிகளை பின் பற்றாமல் இயங்கியது, உரிய கட்டணம் செலுத்தாமல் இயங்கியது, ஹெல்மெட், சீட் பெல்ட் போன்ற பல்வேறு விதிமுறைகளை மீறிய வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் ரூ.28.79 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர இணக்ககட்டணம், வரியினங்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெறப்பட்ட கட்டணங்கள் என கடந்த 10 மாதத்தில் சரக போக்குவரத்து அலுவலகங்களின் மூலமாக ரூ.67.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை அதிக நபர்களை வாகனங்களில் ஏற்றியது, கூடுதல் கட்டணம் என பல்வேறு முறைகேடு காரணமாக சரக அளவில் 256 வாகனங்கள் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மூலமாக சிறை பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சரக்கு வாகனங்களில் ஓவர் லோடு தொடர்பாக அதிக புகார்கள் வருகிறது. வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே சரக்குகளை ஏற்ற வேண்டும் அதிக வேகம், போக்குவரத்து விதிமுறை மீறல், ஓவர் லோடு ஏற்றி வாகனங்களை இயக்கும்போது விபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. விபத்து ஏற்படும் அளவிற்கும் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரையில் சாலை விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் ரூ.5 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டது.
- குண்டும், குழியுமான ரோடுகளை சீரமைப்பது எப்போது? என்பது மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மதுரை
கோவில் மாநகரம், தூங்கா நகரம், கூடல் மாநகர் என்றழைக்கப்படும் மாமதுரையில் முக்கிய சாலைகள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் உள்ள ரோடுகள் சீரான போக்குவரத்திற்கு வழியின்றி சேதமடைந்து காணப்படுகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக மதுரையில் மழை காரணமாக முக்கிய சாலைகள், ரோடுகள் மேலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கி றது.
பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட பகுதிகளி லும் ரோடுகள் மற்றும் வீதிகளில் பொதுமக்கள் வாக னங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை நேரங்களில் அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களை மிரட்டி வருகிறது. இந்த நிலை எப்போது மாறும் என்று பொது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். மதுரை மற்றும் விரி வாக்கப் பகுதி யில் உள்ள சேதமடைந்த சாலைகளை உட னடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
இந்த நிலையில் சமீப நாட்களாக போலீசாரின் வாகன சோதனை மற்றும் கெடுபிடிகள் மதுரையில் அதிகரித்துள்ளன. மதுரை நகர் பகுதிகளை பொறுத்தவரை பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், நெல்பேட்டை, காளவாசல், பழங்காநத்தம், புதூர், தெப்பக்குளம், தெற்கு வாசல், வில்லாபுரம், செல்லூர், பி.பி.குளம் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் வாகன நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அதுவும் காலை மற்றும் மாலை வேளைகளில் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படும்.
இந்த பகுதிகளில் வாகனங்களில் செல்பவர்கள் மணிக்கு 10 முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வாகனங்களை இயக்க முடியும். ஆனாலும் இந்த பகுதிகளில் உள்ள முக்கிய சிக்னல்கள் மற்றும் பஸ் நிறுத்தங்களில் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் ரோடுகளில் முகாமிட்டு வாகன ஓட்டிகளை சுற்றி வளைத்து அபராதம் போடுவதை பெரிய சாதனையாக நினைத்து செயல்பட்டு வருகிறார்கள். பல சாலைகள் சேதமடைந்து போக்குவரத்திற்கு வழியின்றி கிடக்கும் நிலையில் கூட அதன் அருகே நின்று வாகனங்களை வழிமறித்து அபராதம் விதிப்பதை முக்கிய கடமையாக எண்ணி போலீசார் பணி செய்து வருகிறார்கள். இதனால் போலீசாரின் அபராத ஜாக்பாட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த 15-ந் தேதி வரை மதுரை யில் சாலை விதிகளை மீறியதாக 3 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரையில் சாலை விதிகளை மீறும் நபர் மீதான அபராத தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் ரூ.10 ஆயிரமும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும். அதிவேகம் மற்றும் அதிக நபர்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு பகுதியிலும் சாரை, சாரையாக இருசக்கர வாகனங்களை போலீசார் வழிமறித்து அபராதங்களை விதிப்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 11 மாதத்தில் மட்டும் மதுரையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2 லட்சத்து 23 ஆயிரத்து 338 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 831 பேர் அதிவேகமாக சென்றதாக வும், 1,407 பேர் குடிபோதையில் வாகனத்தை ஒட்டியதாகவும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மதுரையின் முக்கிய சாலையான நேதாஜி ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கும் காட்சி.
7 ஆயிரத்து 71 பேர் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியதாகவும், 4 ஆயிரத்து 960 பேர் அதிக நபர்களை வாகனங்களில் ஏற்றி சென்றதாகவும் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததாக 15 ஆயிரத்து 646 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி மற்றும் தியாகி இமானுவேல்சேகரன், மருது பாண்டியர், தேவர் ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக சென்ற வாகனங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டதையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 69 ஆயிரத்து 588 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 மாதத்தில் அதாவது ஜனவரி மாதம் தொடங்கி நவம்பர் 15-ந் தேதி வரை மதுரையில் சாலை விதிகளை மீறியதாக 3 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5 கோடியே 3 லட்சம் அபராத தொகையாக வசூலித்து மதுரை போலீசார் சாதனை படைத்துள்ளனர்.
ஆனால் மதுரையில் போக்குவரத்திற்கு தகுதி யான சாலைகள் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறி தான். 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் டி.பி.கே. ரோடு மற்றும் மேலவாசல் பகுதியில் கூட சாலைகளில் படுகுழிகளாக மோசமாக காணப்படுகிறது.
இது தவிர பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்த நிலையில் இருக்கும் சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மதுரை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. சாலை பள்ளங்களில் மண்ணை கொட்டி நிரப்பாமல் உரிய தார், ஜல்லி கலவைகளை போட்டு சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளமான இடங்களில் மண்ணைக் கொட்டி செல்வதால் வெயில் காலங்களில் அந்த பகுதி முழுவதும் தூசி மண்டலமாக மாறி வாகன ஓட்டிகளை பல்வேறு சிர மத்துக்கு உள்ளாக்கி வருகிறது.
எனவே தரமான சாலைகளை முதலில் அமைத்து கொடுத்துவிட்டு சாலை விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது அபராத வசூல் நடவடிக்கைகளை போலீசார் இறங்கலாம் என்பதும் மதுரை மக்களின் கருத்தாக உள்ளது.
எனவே பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் செவி சாய்த்து தரமான சாலைகளை அமைத்துக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பது தான் மதுரை மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்