search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கு தொடர்ச்சி மலை"

    • மலைச்சாரலில் மூன்று கற்கள் மாறுபட்ட நிறத்தோடு இருப்பதைக் காணலாம்.
    • இம்மூன்று கற்களும் சிலையாய் போன திருடர்கள் என்பர்.

    பதினெட்டாம்படி கடந்து மேல் சென்றால் மலைச்சாரலில் மூன்று கற்கள் மாறுபட்ட நிறத்தோடு இருப்பதைக் காணலாம்.

    இம்மூன்று கற்களும் சிலையாய் போன திருடர்கள் என்பர்.

    முருகனடியார்கள் கோவில் திருப்பணி நடந்த போது பொன்னையும், பொருளையும் உண்டியலில் போட,

    இதை கண்ட மூன்று கள்வர்கள் ஒருநாள் இரவில் உண்டியலை உடைத்து பொன்னையும், பொருளையும் களவாடி மலைச்சரிவு வழியாக சென்றனர்.

    முருகப்பெருமான் குதிரை வீரனைப்போல சென்று அவர்களைப் பிடித்து, "நீவிர் கற்சிலைகளாகக் கடவீர்" எனச் சபித்ததால் அம்மூன்று கள்வர்களும் கற்சிலைகளாக நிற்பதாகச் செவி வழிச் செய்தி கூறுகின்றது.

    • முருகன் அருள் பெற்று பிணி நீங்கி சித்தர் மருதமலையில் வாழ்ந்துள்ளார்.
    • அங்குள்ள பாறையானது பாம்பு போன்ற அமைப்பில் இயற்கையாகவே அமைந்துள்ளது.

    மருதமலை முருகன் கோவிலில் பாம்பாட்டி சித்தர் குகை உள்ளது.

    இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து பாம்பாட்டி சித்தரை வணங்கி தியானம் செய்து வழிபட்டு செல்கிறார்கள்.

    கோவில் தென்புறத்தில் படிக்கட்டுகள் வழியாக கீழ் இறங்கி கிழக்கு திசை நோக்கி சென்றால் அங்கு பாம்பாட்டி சித்தர் சன்னதி உள்ளது.

    அங்குள்ள பாறையானது பாம்பு போன்ற அமைப்பில் இயற்கையாகவே அமைந்துள்ளது.

    பாம்பாட்டி சித்தருக்கும் கோவிலுக்கும் ஆதி மூலஸ்தானத்துக்கும் இடையே சுரங்க வழி உள்ளது.

    அதன் வழியாக தான் சித்தர் ஆதி மூலஸ்தானத்தில் உள்ள வள்ளி தெய்வானையுடன் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானை தினமும், காலை , மாலை நேரத்தில் தரிசித்து வருவதாக நம்பப்படுகிறது.

    முருகன் அருள் பெற்று பிணி நீங்கி சித்தர் மருதமலையில் வாழ்ந்துள்ளார்.

    இவர் வாழ்ந்த குகையில் ஒரு பாம்பு, பாலும் பழமும் உண்டு செல்வதாக சொல்லப்படுகிறது.

    தற்போது பக்தர்கள் பாம்புக்கு பாலும் பழமும் அளித்து வருகிறார்கள்.

    பாம்பாட்டி சித்தரை வழிபடும் பக்தர்களுக்கு நஞ்சினால் ஏற்படும் நோய்கள் நீங்கும்.

    இந்த சித்தரை வழி பட்டால் அமைதியின்றி வாழ்வோர் அமைதியான வாழ்க்கையான பெறுவர்.

    இங்கு தியானம் செய்வது மன அமைதியை தரும்.

    • முருகப்பெருமான் பாம்பாட்டி சித்தரிடம் மருத மலையில் அருள் விளையாட்டுகள் செய்தார்.
    • பதினெட்டு சித்தர்களுள் பாம்பாட்டி சித்தரும் ஒருவர்.

    பதினெட்டு சித்தர்களுள் பாம்பாட்டி சித்தரும் ஒருவர்.

    இறைவனை இடைவிடாது நினைத்து நினைத்து அகக்கண்ணால் கண்டு ஆத்ம சக்தியால் செயற்கரிய செயல்களை செய்து மருத்துவம், ஜோதிடம், இரச வாதம் ஆகியவற்றில் கை தேர்ந்தவர்களை சித்தர்கள் என்பார்கள்.

    பாம்பாட்டி சித்தர் பாண்டிய நாட்டில் காடுகளில் காணப்பட்ட பாம்புகளை பிடித்து ஆட்டியும், தன் சொல்படி நடக்க செய்தும் வந்தார்.

    ஒருமுறை "நவரத்னம்" என்னும் பாம்பை ஆட்ட முயற்சித்த போது சட்டை முனிவரை சந்தித்து யோக நெறியில் சமாதி கூடும் நிலை பெற்றாராம்.

    பாம்பாட்டி சித்தர் ஒரு முறை இறந்து போன மன்னன் உடலில் கூடு விட்டு கூடு பாயும் வித்தை மூலம் புகுந்தாராம்.

    இவ்வாறு பல சித்துகளை செய்த இவர் இந்த பாம்பை ஆட்டுவித்ததால் பாம்பாட்டி சித்தர் என்று அழைக்கப்பட்டார்.

    முருகப்பெருமான் பாம்பாட்டி சித்தரிடம் மருத மலையில் அருள் விளையாட்டுகள் செய்தார்.

    ஒரு காலத்தில் உயரமான குன்று உருண்டோடி வர சித்தர் தம் அருட் சக்தியால் பாறையின் முகட்டிலேயே நிற்கும்படி செய்தார் என்பர்.

    • இடும்பனை வணங்கினால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது
    • அடிவாரத்தில் படிகளின் வழியாக செல்லும் வழியில் இந்த சன்னதி அமைந்துள்ளது.

    மருதமலை முருகன் கோவிலில் இடும்பன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

    அடிவாரத்தில் படிகளின் வழியாக செல்லும் வழியில் இந்த சன்னதி அமைந்துள்ளது.

    இங்கு காவடியை சுமந்து கொண்டு இருக்கும் தோற்றத்தில் பெரிய உருண்டை வடிவமான பெரிய பாறையில் காவடியை சுமந்து கொண்டிருக்கும் தோற்றத்தில் இடும்பன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

    இடும்பனை வணங்கினால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

    இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இடும்பனை வணங்கி செல்கிறார்கள்.

    மேலும் இங்கு குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி ஏராளமான பெண்கள் இன்றும் வழிபட்டு செல்கிறார்கள்.

    • இந்த விநாயகரின் விக்ரகம் இயற்கை அமைப்பு மிக அழகு உடையது.
    • விநாயகரை வணங்கி சென்றால் சரியாக 18 படிகளை கொண்ட பதினெட்டாம்படி உள்ளது.

    மருதமலை அடிவாரத்தில் படிக்கட்டு பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த விநாயகரின் விக்ரகம் இயற்கை அமைப்பு மிக அழகு உடையது.

    பிற தலங்களில் காண்பதற்கு அரிதாகும்.

    விநாயகரின் அழகையும் பெருமைகளையும் மருதமலை தான்தோன்றி பதிகத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கூறியுள்ளார்.

    தான் தோன்றி விநாயகரை வணங்கி சென்றால் சரியாக 18 படிகளை கொண்ட பதினெட்டாம்படி உள்ளது.

    சபரிமலைக்கு சென்று அய்யப்பனை வழிபட இயலாதவர்கள் இந்த பதினெட்டாம்படிக்கு வந்து வணங்கி செல்கிறார்கள்.

    • அசலம் என்ற வடசொல்லுக்கு தமிழில் மலை என்பது பொருளாகும்.
    • அந்த மரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பீறிட்டு கிளம்பியது.

    முன்னொரு காலத்தில் முருக பக்தரான சித்தர் ஒருவர் மருதமலை பகுதிக்கு வந்தார்.

    அதிக தாகத்தாலும் களைப்பாலும் துன்புற்று மருத மரத்தின் அடியில் இளைப்பாறினார்.

    அந்த மரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பீறிட்டு கிளம்பியது.

    இந்த அதிசயம் கண்ட சித்தர் மகிழ்ச்சி அடைந்தார்.

    முருகனின் திருவருளே அதற்கு காரணம் என்று மகிழ்ந்த சித்தர் முருகப் பெருமானை "மருதம்+ சலம்(நீர்) ஆகியவற்றின் தலைவா" என வாழ்த்தி பாடினார்.

    அதுவே காலப் போக்கில் மருதாசலபதி என மருவி அழைக்கப்படுகிறது என்பர்.

    அசலம் என்ற வடசொல்லுக்கு தமிழில் மலை என்பது பொருளாகும்.

    எனவே மருத மரங்கள் அடர்ந்த மலை என்ற பொருளில் மருதாசலம் என்று பெயர் ஏற்பட்டது என்றும் கருதலாம்.

    எனவே கி.பி.12&ம் நூற்றாண்டில் மருதமலை கோவில் அமைக்கப்பட்டது என்றும் கொங்கு நாட்டின் 24 பிரிவுகளுள் ஒன்றான ஆறை நாட்டின் எல்லையாக மருதமலை இருந்தது என்றும் அறியலாம்.

    பேரூர் புராணம், காஞ்சி புராணம், அருணகிரி நாதரின் திருப்புகழ் முதலிய நூல்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.

    • மருதமலை மூன்று புறங்களிலும் மலையரண்களால் சூழப்பெற்றுள்ளது.
    • தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளன.

    தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளன.

    இதில் 7வது படைவீடாக மருத மலை முருகன் கோவில் தனிச் சிறப்புடன் திகழ்ந்து வருகிறது.

    கோவை மாநகரின் மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் அமைப்பில் இக்கோவில் அமைந்துள்ளது.

    மருதமலை மூன்று புறங்களிலும் மலையரண்களால் சூழப்பெற்றுள்ளது.

    இந்த கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலைகளின் இயற்கை அமைப்புகளுடன் சேர்ந்து பார்க்கும்போது மயிலை தோகை விரித்தாற் போல் காட்சி அளிக்கிறது.

    இதனால் முருகன் மயில் மீது அமர்ந்த தோற்றம் நம் கண் முன்னால் வருகிறது.

    மருத மரங்கள் அதிகமாக காணபடுவதால் இந்த மலை மருதமால்வரை, மருதவரை, மருதவேற்பு, மருதக்குன்று , மருத லோங்கல், கமற் பிறங்கு, மருதாசலம் வேள் வரை என்றெல்லாம் பேரூர் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

    மருதமலை ஆண்டவன் என்று அழைக்கப்படுவதற்கு காரணம், மருத மரங்கள் நிறைந்த இந்த மலைக்கு தலைவன் என்பதாகும்.

    மருதமலையான், மருதப்பன், மருதாசல மூர்த்தி போன்ற திருப்பெயர்களாலும் இம்மலையில் எழுந்தருளியுள்ள முருகன் அழைக்கப்படுகிறார்.

    • மெயினருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது.
    • இன்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த 3 வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்ததால் அணைகள் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    நெல்லையில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 93.30 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து இருந்ததால் இன்று காலை மேலும் 3 அடி உயர்ந்து 96.30 அடியை எட்டியது.

    இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 21 அடி உயர்ந்து நேற்று 111 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் 3 அடி உயர்ந்து 114.34 அடியானது. மணிமுத்தாறில் 78.80 அடி நீர் இருப்பு உள்ளது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ததாலும், பிசான சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும் தாமிரபரணி ஆற்றில் சற்று கூடுதல் தண்ணீர் சென்றது.

    இந்நிலையில் கடனா அணை தனது முழுகொள்ளளவான 85 அடியில் 83 அடியை எட்டியதால் அந்த அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாகவும், மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையாலும் நேற்று தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது. நேற்று மழை பெய்யாததால், இன்று காலை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்பட்டது. மழை பெய்யவில்லை. ஒரு சில இடத்தில் மட்டும் லேசான சாரல் பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் நேற்று கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் நேற்று இரவில் மழை வெகுவாக குறைந்தது.

    இதனால் மெயினருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து இன்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதில் ஐய்யப்ப பக்தர்கள் அதிகளவில் குளித்து மகிழ்ந்தனர்.

    ×