search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாரண-சாரணியர்"

    • இரவில் கூடாரமிட்டுத் தங்குதல், கயிறு பாலம் அமைத்தல் மற்றும் சுடரொளிக் களியாட்டம் முதலான நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.
    • நல்ல பண்பாட்டினை மாணவர்களது மனதில் விதைக்கும் வகையில் இம்முகாம் தொடங்கப்பட்டது.

    திருப்பூர்  :

    திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் சாரண, சாரணியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. மேலும் சாரணர் இயக்க மாணவர்களுக்கு சாதி, மதம், மொழி கடந்து சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டினைக்கற்றுத் தருகிறது. அந்த நல்ல பண்பாட்டினை மாணவர்களது மனதில் விதைக்கும் வகையில் இம்முகாமை பள்ளியின் செயலாளர் டாக்டர் சிவகாமி ெதாடங்கி வைத்தார். இம்முகாமின் சிறப்பு விருந்தினர்களாக மயிலாடுதுறை மாவட்ட சாரணப்பயிற்சி ஆணையர் கே.சாரண தேவேந்திரன், மதுரை மாவட்டம் சாரணப்பயிற்சியாளர் எம்.முத்தையா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    பயிற்சியில் மாணவ சாரண, சாரணியர்கள் சிக்கனம், ஒழுக்கம், பாதுகாப்பு விழிப்புணர்வு, முதலுதவி மற்றும் முகாம் கூடாரம் அமைத்தல், பலவகையான முடிச்சுகள் பற்றிய பயிற்சி பெறுதல், உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளைக் கற்றுக்கொண்டனர். மேலும் இரவில் கூடாரமிட்டுத் தங்குதல், கயிறு பாலம் அமைத்தல் மற்றும் சுடரொளிக் களியாட்டம் முதலான நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.

    முகாமில் கலந்து கொண்ட மாணவ சாரண, சாரணியர்களையும் அதற்கு உறுதுணையாக இருந்த சாரண ஆசிரியர் நந்தகுமாரையும், சாரணியர் ஆசிரியர்கள் ராஜலட்சுமி, நந்தினி மற்றும் விஜயசபரி ஆகியோரை பள்ளி தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    ×