search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முரசொலி மாறன்"

    • உலக அரங்கில் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தந்த பண்பின் திருவுருவம் மதிப்புக்குரிய முரசொலி மாறன் நினைவுநாள்!
    • மாறாக் கொள்கை என எடுத்துக்காட்டாக வாழ்ந்து நிறைந்த அவரது பணிகளை நன்றியுடன் இந்நாளில் போற்றுகிறேன்.

    ஒன்றிய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் நினைவு நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் கழகத்துக்கும், உலக அரங்கில் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தந்த பண்பின் திருவுருவம் மதிப்புக்குரிய முரசொலி மாறன் நினைவுநாள்!

    தலைவர் கலைஞர் மீது கொண்ட தூய அன்பு - ஒப்பிலா அறிவுக்கூர்மை - மாறாக் கொள்கை என எடுத்துக்காட்டாக வாழ்ந்து நிறைந்த அவரது பணிகளை நன்றியுடன் இந்நாளில் போற்றுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91-வது பிறந்தநாள் இன்று.
    • முரசொலி மாறனின் திருவுருக சிலைக்கு முதலமைச்சர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறனின் திருவுருக சிலைக்கு முதலமைச்சர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.

    அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    • இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பல பாராட்டுக்கள் பெற்றவர்.
    • தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள கலைஞர் பிறந்த இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி. மு. கவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியான முரசொலி மாறன், முரசொலி வார இதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர் என்றும், மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி, பன்னாட்டு வணிக விலை பேரங்களில் இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பல பாராட்டுக்கள் பெற்றவர் என்றும் அவரின் சாதனைகள் குறித்து இரங்கள் நிகழ்வில் பேசப்பட்டது.

    ×