search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாடிக்கையாளர் உரிமை"

    • இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு மாதம் நடக்கிறது.
    • பாதுகாப்பான வங்கி நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    காங்கயம் :

    இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு மாதம் 1-11-2022 முதல் 30-11-2022 வரை நடக்கிறது. கனரா வங்கியின் (மாவட்ட முன்னோடி வங்கி) சார்பாக காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம்,மாவட்ட வளர்ச்சி அதிகாரி (நபார்டு) அசோக்குமார், வங்கியாளர்கள் , அனைத்து தொழில் முனைவோர், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் கூறுகையில், நிதி நிறுவன மற்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கான உரிமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை மேம்படுத்துதல், வங்கிகள் மீதான வாடிக்கையாளர்களுக்கான குறைகளை தீர்ப்பதற்கான வழிமுறை , பாதுகாப்பான வங்கி நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    வங்கியின் சேவைகளில் ஏதேனும் குறைபாடு இருக்கும் நிலையில் அதனை அந்தந்த வங்கியின் இணைய தளத்தில் புகாராக பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட குறைகளுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படவில்லை எனில் அதனை ஆர்.பி.ஐ. இணையதளத்தில் காணும் வங்கி குறை தீர்ப்பு அதிகாரியிடம் cms.rbi.in என்ற இணையதளம் மூலமாக மேல்முறையீடு செய்யலாம் என்றார். 

    ×