என் மலர்
நீங்கள் தேடியது "வெட்டிக்கொலை"
- விழுப்புரம் அருகே பா.ம.க. பிரமுகரை வெட்டிக்கொன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஆதித்யனை திட்டமிட்டு தீர்த்து கட்டியதாக வாக்கு மூலம் கூறியுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் கப்பியாம்புலியூரை சேர்ந்தவர் ஆதித்யன் (வயது 45) பா.ம.க.மாவட்ட துணைச் செயலாளர். நேற்று முன்தினம் இரவு ஆதித்யன் பனையபுரத்தி லிருந்து கப்பியாம் புலியூ ருக்கு மோட்டார் சைக்கி ளில் சென்றார். மண்டபம் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள வாதானூரான் வாய்க்கால் அருகே வரு ம்போது மர்ம நபர்கள் வழி மறித்து கத்தியால் வெட்டி னர். ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார். தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆதித்யன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ் பி ஸ்ரீநாதா டிஎஸ்பி பார்த்திபன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்தவர் மனைவி சாந்தி யிடம் விசாரணை செய்த னர்.
இது பற்றி ஆதித்யன் மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் கப்பி யாம்புலியூரை சேர்ந்த லட்சுமி நாராயணன் ,அவர் தம்பி ராமு,உறவினர் விஷ்ணு, வினோத், கோலியனூரைச் சேர்ந்த ராகவன். ஆகிய 5 பேரை தனிப்பிரிவு போலீ சார்கைது செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.விசாரணை யில் முன் விரோதம் காரண மாக ஆதித்யனை திட்டமிட்டு தீர்த்து கட்டியதாக வாக்கு மூலம் கூறியுள்ளனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.பா.ம.க., பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட பதட்டம் காரணமாக கப்பி யாம்புலியூர், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது.
- சாத்தூர் அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
- இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெருமாள்பட்டியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தரிசு நிலம் உள்ளது.
இங்கு சம்பவத்தன்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன.
இதுகுறித்து ஊமத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த வாலிபரின் அருகில் ஒரு பை கிடந்தது. அதில் விபூதி, கோவில் ரசீதுகள் உள்ளிட்டவை இருந்தன. மேலும் சில அடி தூரத்தில் டி.என்.37, ஏ.க்யூ. 1333 என்ற எண் கொண்ட மொபட்டும் கேட்பாரற்றுக கிடந்தது.
மேற்கண்டவற்றை கைப்பற்றிய போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கொலையான வாலிபரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கேமரா காட்சிகள் ஆய்வு
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் திருவண்ணாமலையில் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு இரவு 9.30 மணிளவில் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தாமரை நகர் பகுதியில் உள்ள ஹவு சிங் போர்டு அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மர்ம கும்பல் ஆறுமுகத்தை தடுத்து நிறுத்தி சரமாரியாக வெட்டினர். இதில் ஆறுமுகம் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டவுன் டிஎஸ்பி குணசேகரன் மற்றும் போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன் விரோத தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வயலில் பதுங்கி இருந்த தங்கவேல், மணியை அரிவாளை சரமாரியாக கை, கால், தலை உள்பட 10 இடங்களில் வெட்டினார்.
- டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி அடுத்துள்ள ஜொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது65). இவருக்கு சேட்டு (46), சம்பத் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (60), இவர் மணியின் உறவினர் ஆவர். தங்கவேலுக்கும், மணிக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இவர்களுக்குள் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இன்றுகாலை மணி தனது பேத்தி இந்துஜாவை இருசக்கர வாகனத்தில் பெரியாம்பட்டி நோக்கி பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது வயலில் பதுங்கி இருந்த தங்கவேல், மணி வந்த இருசக்கர வாகனத்தை மறித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தங்கவேல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணியை சரமாரியாக கை, கால், தலை உள்பட 10 இடங்களில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்த இந்துஜா அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு ஓடினார். அங்கு நடந்த சம்பவத்தை எடுத்து கூறினார். இது பற்றி சேட்டுவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பதறி போய் வயலில் உழுது கொண்டிருந்த டிரா க்டருடன் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
பின்னர் மணியின் வீட்டை நோக்கி தங்கவேல் சென்று கொண்டிருந்தார். அப்போது டிராக்டரில் வந்த சேட்டுவை மறித்து அவரின் கால்களை வெட்டினார். இதனால் டிராக்டர் தானாக முன்னால் சென்றது. அப்போது டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கவேல் உடலையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் படுகாயம் அடைந்த சேட்டுவை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்பகை காரணமாக சாமியப்பனை யாராவது வெட்டி கொலை செய்தனரா என விசாரிக்கின்றனர்.
மேட்டுப்பாளையம்,
திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 53). கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மாணிக்கம்கவுண்டன் புதூரில் உள்ள தோட்டத்துக்கு வேலைக்காக வந்தார். பின்னர் அங்கு தங்கி இருந்து கூலிவேலை செய்து வந்தார்.
நேற்று மாலை தோட்டத்து க்குள் நுழைந்த மர்மநபர் யாரோ சாமியப்பனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் நித்யா, சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், சிவக்குமார், தனிப்பிரவு ஏட்டு சிவபிரசாத் மற்றும் போலீ சார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினர்.
பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சாமியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்கு கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து முன்பகை காரணமாக சாமியப்பனை யாராவது வெட்டி கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமாக என விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமி ராக்களில் கொலையாளி கள் வந்து செல்லும் காட்சி கள் பதிவாகி உள்ள தா என ஆய்வு செய்து வருகின்றனர்.
- சிவகாசி அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
- திருத்தங்கல் ேபாலீசார் 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நமஸ் கரித்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 58). பந்தல் அமைக்கும் பணி செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இளையமகன் பொன்னு பாண்டி (23). கூலி வேலைக்கு சென்ற இவர் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுக ளாக வசித்து வந்தார்.
தீபாவளியை முன்னிட்டு பொன்னுபாண்டி தனது தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று மாலை அதே கிராமத்தை சேர்ந்த வீரபாண்டி என்பவர் சாலையில் பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்தார். அந்த சமயம் காளீஸ்வரி என்பவர் தனது மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார். பட்டாசு வெடி சத்தத்தில் அந்த மாடுகள் மிரண்டன.
உடனே காளீஸ்வரி வீரபாண்டியை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே தகராறு உருவானது. இதையடுத்து அங்கு வந்த பொன்னு பாண்டியின் சகோதரர் முனிராஜ் இருவரையும் சமாதானம் செய்துவைத் தார். இதற்கு எதிர்ப்பு தெரி வித்த வீரபாண்டி முனிரா ஜிடம், இந்த பிரச்சினை யில் நீ தலையிடாதே என்று எச்சரித்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
பின்னர் வீரபாண்டி தனது தோட்டத்திற்கு சென்றார். வடமலாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவ ருக்கு சொந்தமன இந்த தோட்டத்தை வீரபாண்டி குத்தகைக்கு எடுத்திருந்தார். இதற்கிடையே பொன்னு பாண்டி, முனிராஜ் ஆகி யோரை பத்திரமாக பார்த் துக்கொள்ளுமாறும், பிரச்சி னைகளுக்கு செல்லவேண் டாம் என்று அறிவுரை கூறு மாறும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வத்தி டம் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு பொன்னுபாண்டி தனது இருசக்கர வாகனத்தில் வீரபாண்டியின் தோட்டத் திற்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை. இதுபற்றி அந்த பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் செல்வம் அங்கு சென்றுபார்த்தபோது, பொன்னுபாண்டி அரிவா ளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந் தார்.
அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பொன்னுபாண்டி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரி வித்தனர். இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீ சார், வடமலாபுரம் கார்த்திக், வீரபாண்டி, அசோக் என்ற அய்யாதுரை உள்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகி றார்கள்.
- நேற்று காலையில் கோர்ட்டுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்.
- உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
சோழிங்கநல்லூர்:
சென்னை திருவான்மியூர் அவ்வை நகரில் வசித்து வந்தவர் கவுதம். 29 வயதான இவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று காலையில் கோர்ட்டுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் இருந்து தனது மோட்டார்சைக்கிளில் வெளியே சென்றார். திருவான்மியூர் ஜெயந்தி சிக்னல் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வக்கீல் கவுதம் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது 3 பேர் அவரை சுற்றி வளைத்தனர். தாங்கள் மறைத்து வைத்தி ருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து அவர்கள் கவுதமை வெட்டினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிர் பிழைப்பதற்காக ஓட்டம் பிடித்தார். இருப்பினும் 3 பேரும் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டினார்கள்.
இதில் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் கவுதம் கீழே சாய்ந்தார். உயிருக்கு போரா டிய அவரை மீட்டு அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கவுதம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை வெட்டிக் கொன்ற கும்பல் தப்பி ஓடி தலை மறைவானது.
இந்த பயங்கர கொலை சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் கிடைத்த தும் திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக் கொலையாளிகளை உடன டியாக பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதைத் தொடர்ந்து வக்கீல் கவுதம் கொலை தொடர்பாக கமலேஷ், கார்த்தி, நித்யா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கண்ணகி நகர் மற்றும் கொட்டிவாக்கம் பகுதிகளை சேர்ந்த இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வந்துள்ளது.
கொலையுண்ட வக்கீல் கவுதம் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிலரை ஜாமீனில் எடுத்துள்ளார். இது தொடர்பாக கமலேஷ், கார்த்தி, நித்யா ஆகிய 3 பேருக்கும், வக்கீல் கவுதமுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் கவுதமை கொலை செய்வதற்கு நேரம் பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில்தான் நேற்று அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர்.
இதையடுத்து அவரை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில்தான் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு திருவான்மியூர் சிக்னல் பகுதிக்கு சென்ற கவுதமை பின்தொடர்ந்து சென்று 3 பேரும் சரமாரி யாக டெ்டிக் கொன்றுள்ள னர். இரவு 8.30 மணி அளவில் சரமாரியாக வெட்டுபட்டதும் கவுதமை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இரவு 10 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.
அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உயிரிழந்த கவுதமின் உடலை ஒப்படைப்பதற்கு முன்னர் ஆஸ்பத்திரி நிர்வாகம் ரூ. 50 ஆயிரம் பணம் கேட்டுள்ளது. இதனால் கவுதமின் நண்பர்களான சக வக்கீல்களும், உறவினர்களும் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டினார்கள். உறவினர்கள் கதறி அழுது கண்ணீர் வடித்தனர்.
இதையடுத்து போலீசார் சென்று சமரச பேச்சு நடத்தியதையடுத்து ரூ.30 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு ஆஸ்பத்திரி நிர்வாகம் உடலை ஒப்படைத்தது. இதன் பின்னர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கவுதமின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
- முகமூடி அணிந்து வந்த கும்பம் ஓட்டுனர் சிவாவை பயணிகள் கண் எதிரே வெட்டிக் கொலை செய்துள்ளது.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் மினி பேருந்து ஓட்டுநர் சிவா (26) பயணிகள் கண்முன்னரே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் பயணிகள் காத்திருக்க டீ குடித்துவிட்டு பேருந்தை இயக்க ஓட்டுனர் சிவா சென்றுள்ளார்.
அப்போது, முகமூடி அணிந்து வந்த கும்பம் ஓட்டுனர் சிவாவை பயணிகள் கண் எதிரே வெட்டிக் கொலை செய்துள்ளது.
முகமூடி அணிந்து வந்த கும்பல் ஓட்டுநர் சிவாவை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியது. இதைதொடர்ந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டுனர் சிவாவின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் தஞ்சை கும்பகோணம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தார்.
- திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன் பட்டியைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 32). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் ரகுமான் (35) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
அனீஸ் ரகுமானின் மனைவிக்கும், பிரசாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரசாத்துடன் அவரது மனைவி சென்று விட்டார். அப்போது முதல் பிரசாத் மீது அனீஸ் ரகுமானுக்கு மேலும் கோபம் அதிகரித்தது. அவரை தீர்த்து கட்டுவதற்காக சமயம் பார்த்துக் கொண்டு இருந்தார்.
இன்று காலை பிரசாத் முனீஸ்வரன் கோவில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அவரை பார்த்ததும் அனீஸ் ரகுமான் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க முயன்றார்.
இதனால் சுதாரித்துக் கொண்டு பிரசாத் ஓட ஆரம்பித்தார். உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே ஓடிய போது அவரை கீழே தள்ளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதை பார்த்ததும் பொதுமக்கள் உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசாத் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பி ஓடிய அனீஸ் ரகுமானை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பிரசாத் மீது திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்ட பகலில் கோர்ட்டு வளாகம் அருகே வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பாழடைந்த வீட்டில் இன்று காலை 2 பேர் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தனர்.
- வெட்டுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர் மீட்பு.
புதுச்சேரி:
புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்குத் தெருவில் பாழடைந்த வீடு ஒன்று உள்ளது. இந்த வீடு அமைந்துள்ள பகுதி டி.வி. நகரையொட்டியும் மற்றும் தாங்கூர் தோட்டம் பகுதிக்கும் செல்லும் வழியாகும்.

இந்த பாழடைந்த வீட்டில் இன்று காலை 2 பேர் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். அந்த வழியாக சென்ற பொது மக்கள் வாலிபர்களின் பிணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பெரிய கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பாழடைந்த வீட்டின் காம்பவுண்டு சுவரையொட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் 2 பேர் இறந்து கிடந்தனர். மற்றொருவர் வெட்டுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். காயத்துடன் கிடந்த வாலிபரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வாலிபரும் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து கொலை செய்யப்பட்டவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலையான ஒருவர் ரிஷி என்பதும் மற்ற 2 பேர் அவனுடைய கூட்டாளிகளான திடீர் நகரை சேர்ந்த பன்னீர் தேவா, ஜெ.ஜெ. நகரை சேர்ந்த ஆதி என்பதும் தெரிய வந்தது.
ரிஷி உழவர்கரையை சேர்ந்த பிரபல தாதா தெஸ்தான் மகன் என்பது தெரியவந்தது. கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் டி.ஐ.ஜி. சத்யசுந்தரம் நேரில் வந்து பார்வையிட்டார். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தனர்.

மோப்ப நாய் ரோஜர் வரவழைக்கப்பட்டது. அது கொலையான இடத்தில் இருந்து டி.வி. நகர் செல்லும் சந்து வழியாக சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
தாதா தெஸ்தான் கடந்த 2008-ம் ஆண்டு உழவர்கரை ஜெ.ஜெ. நகர் வீட்டில் வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இவரது மகன் ரிஷி மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
இதனால் இவர்களது நடமாட்டத்தை கண்காணித்த எதிர்தரப்பினர் நள்ளிரவில் ரிஷி நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்த போது திடீரென புகுந்து ரிஷி மற்றும் அவனது கூட்டாளிகளை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து பெரிய கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை நகர பகுதியில் தாதாவின் மகன் உள்பட 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.