search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை
    X

    கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை

    • சிவகாசி அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • திருத்தங்கல் ேபாலீசார் 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நமஸ் கரித்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 58). பந்தல் அமைக்கும் பணி செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இளையமகன் பொன்னு பாண்டி (23). கூலி வேலைக்கு சென்ற இவர் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுக ளாக வசித்து வந்தார்.

    தீபாவளியை முன்னிட்டு பொன்னுபாண்டி தனது தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று மாலை அதே கிராமத்தை சேர்ந்த வீரபாண்டி என்பவர் சாலையில் பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்தார். அந்த சமயம் காளீஸ்வரி என்பவர் தனது மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார். பட்டாசு வெடி சத்தத்தில் அந்த மாடுகள் மிரண்டன.

    உடனே காளீஸ்வரி வீரபாண்டியை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே தகராறு உருவானது. இதையடுத்து அங்கு வந்த பொன்னு பாண்டியின் சகோதரர் முனிராஜ் இருவரையும் சமாதானம் செய்துவைத் தார். இதற்கு எதிர்ப்பு தெரி வித்த வீரபாண்டி முனிரா ஜிடம், இந்த பிரச்சினை யில் நீ தலையிடாதே என்று எச்சரித்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    பின்னர் வீரபாண்டி தனது தோட்டத்திற்கு சென்றார். வடமலாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவ ருக்கு சொந்தமன இந்த தோட்டத்தை வீரபாண்டி குத்தகைக்கு எடுத்திருந்தார். இதற்கிடையே பொன்னு பாண்டி, முனிராஜ் ஆகி யோரை பத்திரமாக பார்த் துக்கொள்ளுமாறும், பிரச்சி னைகளுக்கு செல்லவேண் டாம் என்று அறிவுரை கூறு மாறும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வத்தி டம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு பொன்னுபாண்டி தனது இருசக்கர வாகனத்தில் வீரபாண்டியின் தோட்டத் திற்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை. இதுபற்றி அந்த பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் செல்வம் அங்கு சென்றுபார்த்தபோது, பொன்னுபாண்டி அரிவா ளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந் தார்.

    அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பொன்னுபாண்டி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரி வித்தனர். இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீ சார், வடமலாபுரம் கார்த்திக், வீரபாண்டி, அசோக் என்ற அய்யாதுரை உள்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகி றார்கள்.

    Next Story
    ×