என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விபத்து ஏற்படும் அபாயம்"
- பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் தாழ்வான மின்கம்பியால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- மின்துறையினர் மாதந்திர பராமரிப்பு நாட்களில் இதுபோன்று ஆபத்தான மின் கம்பிகளை தேர்வு செய்து சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதியில் பொம்மிடி, கே என்.புதூர், முத்தம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, ராமியம்பட்டி, கடத்தூர், உள்ளிட்ட துணை மின்நிலையங்கள் உள்ளன.
இந்த மின் நிலையங்களில் இருந்து வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. கிராம பகுதிகளில் விவசாய நிலங்கல், சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் என ஏராளமான இடங்களில் மின்கம்பிகள் எட்டினால் கையில் எட்டும் அளவிற்கு மிகவும் தாழ்வாக செல்கின்றன.
இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் டிராக்டர், பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள், புல்லு கட்டு ஏற்றி செல்லும் வாகனங்களில் உரசி மின் விபத்துக்கள் ஏற்பட்டு சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை இருந்து வருகின்றது. இதை தவிர பல இடங்களில் கம்பிகளில் மரங்களில் உள்ள கிளைகள் உரசி மின் விபத்து ஏற்பட்டு கரும்பு பயிர்கள் எரிந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருவது தொடர்ந்து வருகின்றது.
இதேபோல் மின்கம்பங்கள் பழுதாகி மின்கம்பிகள் வெளியே தெரிந்து எப்போது விழுந்து ஆபத்து ஏற்படுத்துமோ என்ற வகையில் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மின்துறையினர் மாதந்திர பராமரிப்பு நாட்களில் இசூதபோன்று ஆபத்தான மின் கம்பிகளை தேர்வு செய்து சீர் செய்ய வேண்டும். அவற்றை சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பள்ளம்தோண்டப்பட்ட நிலையில் பல நாட்கள் ஆகியும் அவற்றை மூடாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
- குழிகளை முறையாக சரியாக மூடிட வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொம்மிடி மெயின் ரோடு, தருமபுரி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் தனியார் நிறுவனம் சார்பில் கேபிள் அமைக்கப்பட்டு இருந்தது.
பல்வேறு இடங்களில் தற்பொழுது பள்ளம்தோண்டப்பட்ட நிலையில் பல நாட்கள் ஆகியும் அவற்றை மூடாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
வேலைகள் முடிக்கப்படாமல் இருந்து வருகின்றது. ஆபத்தான வளைவுகளில் தோண்டப்பட்ட குழிகளால் விபத்து ஏற்படும் சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. அந்தக் குழிகளை முறையாக சரியாக மூடிட வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளன
- அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால் விபத்து ஏற்படும்.
- குறுகிய தரை பாலம் சீரமைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும்
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோவில் அருகே நீண்ட காலமாக குறுகிய தரைப்பாலம் விரிவாக சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் தரைபாலம் மிகவும் குறுகியதாக, ஆற்று பாசன கால்வாய் செல்லுவதாலும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
பாலக்கோட்டில் இருந்து நான்கு ரோடு பிரிவு சாலை, புதூர் மாரியம்மன் கோவில், பேளாரஹள்ளி, எலங்காலப்பட்டி, பெரியாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையாக உள்ளது. மேலும் சாலை வழியாக மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம், பிரசித்தி பெற்ற புதூர் மாரியம்மன் கோவில், தமிழக அரசு அரிசி சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் முன்பு குறுகிய தரை பாலம் சீரமைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்டது
- சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் பேரூராட்சி பஸ் நிலையம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. மேலும் இப் பகுதியில் ஊராட்சி ஒன்றி யம், வேளாண்மை அலுவல கம், பத்திர பதிவு அலுவலகம், போலீஸ் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற் றும் வங்கிகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவைகள் அமையப்பெற்றுள்ளன. இத னால் பஜார் வீதி, பஸ் நிலை யம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் பரபரப்பாக காணப்படும்.
இந்தநிலையில் காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே கடந்த சில மாதங்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பள்ளம் தோண் டப்பட்டன. ஆனால் பள்ளம் தோண்டிய பிறகு சாலை பணிகள் நடைப்பெறவே இல்லை. இதனால் பள்ளங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி, கொசுக்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால் இங்குள்ள தண்ணீரில் மீன் வளர்ந்து இருப்பதால்பொது மக்கள் தூண்டில் மற்றும் வலைகள் மூலம் மீன் பிடிக்க தொடங்கியுள்ளனர்.
மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இப்பகுதி யில், போதிய தடுப்பு நடவ டிக்கைகள் எடுக்கப்பட வில்லை. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் வாகன ஓட்டி கள் விபத்துக்குள்ளாகி வரு கின்றனர்.
எனவே தேசிய நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள், அனைத்து தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் சாலை பணி களை விரைந்து முடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். முன்னதாக தடுப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்