என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரசிகர்கள்"
- தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார்.
- ராயன் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் மட்டும்13 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு திரைப்பிரபலங்கள் அவர்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் ராயன் படத்தின் நடித்த துஷரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்னா முரளி, மற்றும் பலர் அவர்களது வாழ்த்துகளை பகிர்ந்தனர்.
ரசிகர்கள் அவர்களது அன்பை மற்றும் வாழ்த்தை தெரிவிக்க இன்று தனுஷின் வீட்டை சூழ்ந்தனர், அங்கு தனுஷ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ தாற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார்.
- ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது.
இந்திய திரையுலகில் தற்போது பெயர் சொல்லும் முன்னனி நடிகைகளில் ஒருவர் தன்னா. நடிகை, மாடல் மற்றும் டேன்ஸர் என பல பாத்திரங்களை தன்னுள் கொண்டு திரைவானில் மின்னும் நட்சத்திரங்களில் ஒருவர் இவர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மும்மொழிகளிலும் தனது முத்திரையை பதித்தவர். கதாபாத்தரத்தை முழுமையாக ஏற்று நடிப்பதிலும் , ஒரே படத்தில் பல குணங்களை வெளிக்காட்டி நடிப்பதிலும் கைதேர்ந்தவர்.இவரது திரைபயணம் 2005 ல் தொடங்கி இன்று வரை நில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தென் இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமன்னா. இதுவரை மூன்று மொழிகளிலும் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார்.
நடிகை தமன்னா சமீப காலமாக வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- "சிறு வயதிலேயே நடிகையாக வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அதை நிறைவேற்றும் விதமாகவே எனது முடிவுகளும் இருந்தன. அதுதான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
சினிமாவில் அடியெடுத்து வைத்ததும் எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது. ஆனாலும் நடிகையாக நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாகவே இருந்தேன். அதற்காக 100 சதவீதம் உழைத்தேன். இப்போது சாதித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சி எனக்கு கிடைத்துள்ளது.
ஒரு காலத்தில் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்த்தார்கள். இப்போது காலம் மாறி விட்டது. ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது. அதுமட்டுமன்றி சமூக வலைத்தளங்களில் 15 நொடி ரீல்ஸை கூட ரசித்து பார்த்து பொழுதை கழிக்கிறார்கள்.
ரீல்ஸ் பார்க்கும் ரசிகர்களை கவர்வது நடிகர், நடிகைகளுக்கு பெரிய சவாலாகி இருக்கிறது. அவர்களுக்கு பிடித்த மாதிரி கதைகளில் நடிக்க வேண்டி உள்ளது. ரீல்ஸ்கள் நடிகைகளான எங்களுக்கு பெரிய போட்டியாக மாறி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த ஊர்வலத்தில் இந்தியர்களின் நற்பண்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.
- லட்சக்கணக்கானோர் ஒரே சமயத்தில் விலகி வழி ஏற்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது
டி20 உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பியுள்ள இந்திய வீரர்களுக்கு நேற்று மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வான்கடே மைதானத்தில் நடக்கும் பாராட்டு விழாவுக்கு செல்லும் வழியில் கடற்கரை ஓரமாக மரைன் டிரைவில் நடந்த வெற்றி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இந்திய அணி வீரர்களை உற்சாகப் படுத்தினர்.
இந்த ஊர்வலத்தில் இந்தியர்களின் நற்பண்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. அதாவது ஊர்வலத்தின்போது மரைன் டிரைவ் சாலை வழியாக நோயாளியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. உடனே அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், அனைவரும் ஒன்றுதிரண்டு விலகி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
லட்சக்கணக்கானோர் ஒரே சமயத்தில் விலகி வழி ஏற்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி அனைவரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனரும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
- மகிழ்ச்சியான தருணங்களும், என்றும் மறக்கமுடியாத நினைவுகளை ரசிகர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் நேற்றைய தினம் வழங்கியுள்ளது.
- ரோகித் சர்மாவுடன் அணி வீரர்கள் அனைவரும் நடனமாடினர்.
டி 20 உலகக்கோப்பை கொண்டாட்டங்கள் நேற்று மும்பையில் களைகட்டியது. வான்கடே மைதானத்தில் வைத்து இந்திய வீரர்களும் ரசிகர்களும் இந்த வெற்றிடயை கொண்டாடித் தீர்த்தனர். மகிழ்ச்சியும் உணர்வுபூர்வமான தருணங்களும் மைதானத்தை நிறைத்தது.
மகிழ்ச்சியான தருணங்களையும் என்றும் மறக்கமுடியாத நினைவுகளை ரசிகர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் நேற்றைய தினம் வழங்கியுள்ளது. டிஜே பாடல்கள் மைதானத்தை அதிரவைத்த நிலையில் இந்திய வீரர்கள் அவற்றுக்கு வெற்றிக் களியாட்டம் போட்டனர்.
மைதானத்தில் நடந்த ரெயின் டான்ஸ் பார்ட்டியில் ஷாருக் கான் படத்தின் பிரபல பாடலான சக் தே இந்தியா பாடல் பின்னணியில் ஒலிக்க அதற்கு ரோகித் சர்மாவுடன் அணி வீரர்கள் அனைவரும் நடனமாடினர். ரசிகர்களும் அவர்களின் உற்சாக மனநிலை தொற்றிகொள்ளவே வான்கடே மைத்தனமே மகிழ்ச்சியில் திளைத்தது. பாடல்களுக்கு இந்திய வீரர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
- வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் பெருமளவு குவிந்திருந்துள்ளனர்.
- ரசிகர்கள் அனைவரும் ஹர்திக் ஹர்திக் என முழக்கமிட்டு வருகின்றனர்.
2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி இரண்டாவது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 17 ஆண்டுகள் கழித்து பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் வீரர்கள் இன்று டெல்லி வந்தடைந்தனர். காலையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனையடுத்து இந்திய வீரர்கள் மும்பைக்கு புறப்படனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்களை வரவேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். வான்கடே மைதானத்தில் வாழ்த்து நிகழ்ச்சியும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனால் மைதானத்தில் ரசிகர்கள் பெருமளவு குவிந்திருந்தனர். அப்போது ரசிகர்கள் அனைவரும் ஹர்திக் ஹர்திக் என முழக்கமிட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹார்திக் பாண்ட்யாவை ரசிகர்கள் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காமல் கடுமையான கிண்டல், கேலி செய்த வேளையில் தற்போது இந்திய அணிக்காக அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் ஹர்திக் என்று அவரது பெயரை கோஷமிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- டாப்சி சமூக வலைதளங்களிலும் தீவிர ஆர்வம் கொண்டவர்.
- அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
ஆடுகளம், வந்தான் வென்றான். ஆரம்பம் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் டாப்சி பன்னு. லாரன்ஸ் நடித்த முனி 3 படத்தில் பேயாக நடித்து மிரட்டினார்.
தொடர்ந்து தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்து வந்தார். ஷாருக்கானுடன் அவர் இணைந்து நடித்த 'டங்கி' என்ற படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் டென்மார்க் பேட்மின்டன் விளையாட்டு வீரர் மத்தியாஸ் போவை டாப்சி காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி உதய்பூரில் நடந்தது.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் டாப்சி சமூக வலைதளங்களிலும் தீவிர ஆர்வம் கொண்டவர். அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் டாப்சி.
அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு என் உதடுகளும் உள்ளங்கால்களும் சிவந்திருக்கும் போது பச்சையாக என்னை நோக்கி வராதே என தலைப்பிட்டு படத்தை பகிர்ந்துள்ளார் டாப்சி.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வங்காளதேசத்தை வீழ்த்தியதன் மூலம் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
- ஆப்கானிஸ்தான் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியின் முடிவை பொறுத்து 3 அணிகளில் (வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலையில் ஆட்டம் நடைபெற்றது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.
இதனை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியதை கண்ட அந்த நாட்டு ரசிகர்கள் நடனமாடி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள நங்க்ரஹர் என்ற இடத்தில் தெரு முழுவதும் மக்கள் கூட்டம் அலை கடல் போல் திரண்டு வந்த இந்த வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அதற்கு பழிவாங்கும் வகையில் தற்போது டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- உதயநிதி ஸ்டாலின் கூட விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் அன்று விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கூறிய அனைவரும் நன்றி கூறும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒ. பன்னீர்செல்வம், தமிழிசை சௌந்தரராஜன், சீமான், தொல். திருமாவளவன், அன்புமணி இராமதாஸ், டி.டி.வி. தினகரன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவரான விஜய்க்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தை ஆளும் திமுகவிலிருந்து யாரும் வாழ்த்து சொல்லவில்லை. குறிப்பாக தமிழ் திரைத்துறையில் நடிகராக தயாரிப்பாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் கூட விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து சொல்லி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் அன்று நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு மு.க.ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்கவில்லை.
ஆனால் விஜயின் இந்த வாழ்த்து செய்திகளே ஒருகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளானது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக விஜய் அவரது எக்ஸ் பக்கத்தில் திமுக அரசிற்கு எதிராக பதிவிட்டதும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து பேசியதும் திமுக அரசிற்கு நெருக்கடியை உருவாக்கியது.
இதனால் தான் விஜய்க்கு திமுகவிலிருந்து யாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
- வாழ்த்துக் கூறிய அனைவரும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
- பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கூறிய அனைவரும் நன்றி கூறும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
"எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும். சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய செந்தமிழன் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தொல். திருமாவளவன். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய டாக்டர் அன்புமணி இராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கமல்ஹாசன். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய ஜான் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய நெல்லை முபாரக்,
சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான மதிப்பிற்குரிய கு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர். மதிப்பிற்குரிய கே. அண்ணாமலை.
முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய எஸ். திருநாவுக்கரசர். முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய டி. ஜெயக்குமார். முன்னாள் அமைச்சர். சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய எஸ்.பி.வேலுமணி. முன்னாள் அமைச்சர். சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய வானதி சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய தாரகை கத்பட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய ஒ.பி.ரவீந்திரநாத் மற்றும் என்றும் எனது நெஞ்சிற்கினிய கலைத்துறை சார்ந்த அனைத்து ஆளுமைகள், வழிகாட்டிகள், நண்பர்கள், சகோதர சகோதரிகள், ஊடக நிறுவனங்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், உலகெங்கும் உள்ள என் உயிரினும் மேலான கோடானு கோடி சொந்தங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்" என்று கூறியுள்ளார்.
- போஸ்டர் திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.
- பேனர் வடிவிலும் வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பிறந்தநாள் விழா நாளை மறுநாள் (22-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
கோவில்களில் அன்னதானம், ஏழைகளுக்கு மருத்துவ உதவி, ஆடைகள் வழங்குதல், நோட்டு புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் விஜய் ரசிகர்கள் சார்பில் நூதன முறையில் மாலை மலர் போஸ்டர் போன்று சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
அதில், த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆணைக்கிணங்க திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தேவா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.
தனது பொன் விழாவை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.
ஆகஸ்ட்டு 15-ந் தேதி திண்டுக்கல்லில் முதல் அரசியல் மாநாடு.
2020 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் அமோக வெற்றி பெற்று விஜய் ஆட்சியை பிடிப்பார் என்று தொண்டர்கள் பேட்டி என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த போஸ்டர் திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் பேனர் வடிவிலும் வைக்கப்பட்டுள்ளது.
- பல டங்கள் ரீரிலீஸ் ஆன போதும் கூட கில்லிதான் ரீரிலீஸ் வசூலில் சாதனை படைத்தது.
- கடந்த 2007 ஆம் ஆண்டு பொங்கலன்று போக்கிரி திரைப்படம் ரிலீஸ் ஆனது.
தற்போது சூப்பர் ஹிட் படங்கள் அனைத்தும் ரீலீஸ் செய்யப்படுவது ட்ரெண்டாகி வருகிறது. ரஜினி, கமல், விஜய், அஜித், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் மாபெரும் வெற்றி பெற்ற படங்களை ரீ ரிலீஸ் செய்யப்படுவதால் ரசிகர்கள் அதனை ஆவலோடு ரசித்து கொண்டாடி வருகின்றனர். இப்படி ஏகப்பட்ட படங்கள் ரீரிலீஸ் ஆன போதும் கூட கில்லிதான் ரீரிலீஸ் வசூலில் சாதனை படைத்தது.
அந்த வகையில் நடிகர் விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு, விஜய் நடிப்பில் உருவான போக்கிரி திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாளாகும்.
விஜய் நடிப்பில், இயக்குநர் பிரபு தேவா இயக்கத்தில், கடந்த 2007 ஆம் ஆண்டு பொங்கலன்று போக்கிரி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதில் விஜய், அசின், வடிவேலு, நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்த்ராஜ், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 'போக்கிரி' படத்தை தழுவி, வங்காள மொழியில் 2011ல் எடுக்கப்பட்ட 'மோனெர் ஜாலா' திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த காட்சிகளை பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நல்ல படங்கள் எப்போது வெளிவந்தாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையே ‘கில்லி’ படம் காட்டுகிறது.
- சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக உள்ளார்கள்.
புதுச்சேரி:
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த 'ரத்னம்' திரைப்படம் நாளை மறுநாள் 26-ந்தேதி வெளியாக உள்ளது.
புதுவையிலும் 'ரத்னம்' திரைப்படம் வெளியாகிறது. திரைப்படம் வெளியாக உள்ள சண்முகா திரையரங்குக்கு வந்த இயக்குனர் ஹரி, விஷால் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இதன்பின் இயக்குனர் ஹரி நிருபர்களிடம் கூறியதாவது:-
விஷாலுக்கு 3-வது திரைப்படமாக இந்த படத்தை இயக்கி உள்ளேன். மிகப்பெரிய வெற்றியை இந்த திரைப்படம் கொடுக்கும். மக்கள் அனைவரும் திரையரங்குக்கு வந்து படத்தை பார்க்க வேண்டும். சாலையில் செல்லும்போது ஒரு பிரச்சனையை கண்டால் யாரும் உதவ முன்வருவதில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அப்படி உதவும் இளைஞனின் ஒரு கதை தான் இது. 'கில்லி' திரைப்படம் மறுபடியும் திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. நல்ல படங்கள் எப்போது வெளிவந்தாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையே இந்த படம் காட்டுகிறது.
இது போன்ற படங்களை பார்க்கும்போது நாமும் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்று இயக்குனர்களுக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர்களுக்கு ஒரு தரப்பினர் மட்டுமே ரசிகர்களாக இருப்பார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக உள்ளார்கள். தலைவர் படம் என்றால் சொல்ல தேவையில்லை. அவர் படம் எப்போது வந்தாலும் முதல் நாளில் பார்ப்பேன். எந்த ஒரு இயக்குனரும் சாதிகளை முன்வைத்து படங்களை இயக்குவதில்லை.
நாட்டில் நடக்கும் சாதிய சிந்தனைகளை வைத்து மட்டுமே படங்கள் எடுக்கிறார்கள். சினிமா என்பது சாதி, மதம், மொழி என இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து விஷால் ரசிகர்களுடன் அவர் செல்பி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து நகர பகுதிக்கு வந்த இயக்குனர் ஹரி நேரு வீதி, பாரதி வீதி, குபேர் அங்காடி பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த வியாபாரிகளிடம் 'ரத்னம்' படம் பற்றி கூறி திரையரங்கில் பார்க்க அழைப்பு விடுத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்