search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொக்கப்பனை"

    • சொக்கப்பனைக்குள் பட்டாசுகள் போடப்பட்டு இருந்ததால் அதுவும் வெடித்தன.
    • மேலும், அந்த சாம்பலை தங்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர்.

    தஞ்சாவூர்:

    கார்த்திகை தீபத்திரு நாளை முன்னிட்டு நேற்று மாலை தஞ்சாவூர் பெரிய கோவில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக பெருவு டையார்-பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் கோவில் நுழைவு கோபுரவாசல் அருகே சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்தில் எழுந்தருளினர்.

    அங்கு சிறப்பு ஆராதனை காண்பிக்கப்பட்டு, அந்த தீபச்சுடரால் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. எரிகின்ற சொக்கப்பனையை அக்னிமய லிங்கமாக பக்தர்கள் வணங்கினர்.

    மேலும் சொக்கப்பனைக்குள் பட்டாசுகள் போடப்பட்டு இருந்ததால், அந்த பட்டாசுகளும் வெடித்தன.

    சொக்கப்பனை கொளுத்தி முடித்தபிறகு அந்த சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டனர்.

    மேலும் அந்த சாம்பலை தங்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர்.

    • 7 கோவில்க ளில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
    • காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும், அன்னதானமும் நடந்தது.

    கன்னியாகுமரி :

    கார்த்திகை தீபத்திரு விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 7 கோவில்களில் நேற்று இரவு சொக்கப்பனை கொளு த்தப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டா டப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், கிருஷ்ணன்கோ வில் கிருஷ்ணசுவாமி கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், களியல் மகாதேவர் கோவில் ஆகிய 7 கோவில்க ளில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    திருக்கார்த்திகையை யொட்டி அந்தந்த கோவில் அர்ச்சகர் அந்தப்பனை மரத்தின் உச்சியில் ஏறி பூஜை செய்து தீபம் ஏற்றி விட்டு கீழே இறங்கி வந்துவிட்டார். அதன்பிறகு அந்த பனை மரத்தை சுற்றி வேயப்பட்டிருக்கும் பனை ஓலை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாகி விழுந்தது. அந்த சாம்பலை பக்தர்கள் அள்ளிசென்று தங்களது வீடுகளிலும். விளைநிலங்களிலும். தொழில்நிறுவனங்களிலும் வைத்தனர். இவ்வாறாக இந்த சொக்கப்பனையில் எரிந்த சாம்பலை வைப்பதால் அந்த இடத்தில் அந்த ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். இந்த சொக்கப்பனை கொளு த்தும் நிகழ்ச்சியில் ஏராள மான பக்தர்கள் பங்கே ற்றனர். சொக்க ப்பனை கொளுத்தும் இடங்களில் தீயணைக்கும் படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். பறக்கை அருகே உள்ள புல்லுவிளை பெருமாள் சுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா வினை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொக்கப்பனை கொளு த்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஊர் தலைவர் நாகராஜன், துணைத்தலைவர் சுரேஷ், செயலாளர் அய்யப்பன், துணை செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் பாஸ்கர், முன்னாள் ஊர் செயலாளர் கனகராஜ் மற்றும் ஊர் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்ட பகுதியில் அமைந்துள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் "மகாதீபம்" ஏற்றப்பட்டது. முன்னதாக மருந்துவாழ் மலையில் உள்ள பரமார்த்தலிங்க சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும், அன்னதானமும் நடந்தது.

    மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பபட்ட இந்த மகா தீபம் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம்வரை தெரிந்தது. 3 நாட்கள் இரவு-பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும். மருந்துவாழ் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டபிறகு வீடுகளில் உள்ள வாசல் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடினார்கள். வீடுகள் தோறும் கொழு க்கட்டை, அப்பம், திரளி, போன்றவைகளை தயார் செய்து இறைவனுக்கு படைத்து வழிபட்டு பின்னர் உண்டு மகிழ்ந்தா ர்கள். கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களி லும் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சிறுவர்கள் இரவு நேர ங்களில் சுக்குநாரி புல், டயர், தீப்பந்தங்கள் போன்ற வைகளை கொளுத்தி விளையாடினார்கள்.

    • கார்த்திகை தீப திருவிழாவில் ராமேசுவரம் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • திருச்சுழியில் திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் கார்த்திகை பவுர்ணமியை யொட்டி சிவபெருமான் திரிபுரம் எரித்த புரா ணத்தின் அடிப்படையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெறும். அதன்படி நேற்று கோவில் முன்பு மிகப்பெரிய சொக்கப்பனை உருவாக்கப்பட்டு கொளுத்தப்பட்டது.

    தொடர்ந்து கோவிலில் சுவாமி-அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜை, தீபாரதணை நடந்தது. இதன் பின் கிழக்கு கோபுரம் முன்புள்ள மண்ட பத்திற்கு சுவாமி-அம்மன் எழுந்தருளினர். கிழக்கு கோபுர வாசல் முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கபனைக்கு கோவில் தலைமை குருக்கள் உதய குமார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது.

    சொக்கப்பனை கொளுத் தப்பட்ட பின்னர் சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு 3-ம் பிர காரத்தில் வீதி உலா நடந்தது.

    ஏற்பாடுகளை துணை ஆணையர் சிவராம் குமார், உதவி ஆணையர் பாஸ்கரன், ஆய்வர் பிரபாகரன் செய்தி ருந்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வனத்துறை கட்டுப் பாட்டில் இருக்கும் சஞ்சீவி மலையில் குமாரசாமி கோவிலில் உள்ள மூலவர், உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் மலை உச்சியில் அமைக் கப்பட்டிருந்த தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து சந்தான கிருஷ்ணன் கோயில் உச்சியிலும் மகா தீபம் ஏற்றப் பட்டது. இன்று மாலை 6 மணிக்கு மேல் முருகன், சந்தான கிருஷ்ணன் மற்றும் கம்பத்து பெருமாள் கோயில்களிலும் மகா தீபம் ஏற்றப் பட உள்ளது.


    கார்த்திகை மகா தீபத்தையொட்டி திருச்சுழி திருமேனிநாதர்- துைண மாலை அம்மன் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்ததையும், திடியன் மலை மீது கொப்பரையில் ஏற்றப்பட்ட மகா தீபத்தையும் படத்தில் காணலாம்.

     திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    திருமேனிநாதர், துணை மாலையம்மன் உட்பட பஞ்சமூர்த்தி உற்சவ சிலை களுக்கு மஞ்சணை, மஞ்சள், சந்தனம், விபூதி, பால், பன்னீர், இளநீர் உள்பட 18-க்கும் மேற்பட்ட வாசனை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. பின்னர் சுவாமி, அம்ம னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    தொடர்ந்து சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 15 அடி உயரத்திற்கு கோபுர வடிவில் சொக்கப்பனை உருவாக்கப்பட்டு அதற்கு தீபாராதனைகள் காட்டப்பட்டு பின்பு கொளுத்தப்பட்டது. திருச்சுழி, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி சரக போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி கண்டன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மானாமதுரை

    மானாமதுரை அருகே குறிச்சியில் உள்ள வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவிலில் உள்ள செந்தில் ஆண்டவர் சன்னதியில் கார்த்திகை மகாதீப விழா நடந்தது. இதில் பாலா பிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் முருக பெருமான் காட்சியளித்தார். மானாமதுரை வைகைஆற்று கரையில் உள்ள ஆனந்த வல்லி சோமநாதர் கோவில், சுந்தரபுரம் தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோவில், பைபாஸ் சாலையில் உள்ள வழிவிடு முருகன் கோவில் வேம்பத்தூர் கைலாசநாதர் கோவில், இடைக்காட்டூர் பாலமுருகன் கோவில், கட்டிக்குளம் ராமலிங்கம் சுவாமி கோவில்,

    தாய மங்கலம் அருகே உள்ள அலங்காரகுளம் சோனையா சுவாமி வைகைகரை அய்யனார் கோவில் ஆகிய கோவில்களி லும் கார்த்திகை மகா தீபத்தையொட்டி சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் திடியன் மலையில் 2 ஆயிரம் அடி உயரத்தில் 100 மீட்டர் திரி, நெய் கொண்டு தயாரிக்கப்பட்ட பெரிய கொப்பரையில் கார்த் திகை மகாதீபம் ஏற்றப் பட்டது. தொடர்ந்து மலை ே மல் உள்ள தங்கமலை ராமர் கோவில், அடி வாரத்தில் உள்ள கைலாச நாதர் சமேத பெரிய நாயகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர்.

    • கார்த்திகை தீப திருநாளையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனைக்காக முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.
    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வரும் 27-ந்தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது.

    திருச்சி

    கார்த்திகை தீப திருநாளையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனைக்காக முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வரும் 27-ந்தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார்.

    கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா கார்த்திகை கோபுரம் அருகே நேற்று நடைபெற்றது. சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லெட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின.

    இந்நிகழ்ச்சியில் கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த பந்தல் காலை சுற்றி சுமார் 15 அடி அகலத்திற்கும் 20 அடி உயரத்திற்கும் சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    • வருகிற 26-ந்தேதி நடக்கிறது
    • இதில் சுசீந்திரம் தாணு மாலயசாமி கோவிலுக்கு 36 அடி உயரம்

    கன்னியாகுமரி :

    கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ந்தேதி (ஞா யிற்றுக்கிழமை) கோலா கலமாக கொண்டாடப்படு கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணசுவாமி கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், களியல் மகாதேவர் கோவில் ஆகிய 7 கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி வருகிற 26-ந்தேதி இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் சுசீந்திரம் தாணு மாலயசாமி கோவிலுக்கு 36 அடி உயரத்திலும், பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலுக்கு 30 அடி உயரத்திலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு 25 அடி உயரத்திலும், களியல் மகாதேவர் கோ வில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் மற்றும் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் ஆகிய 4 கோவில்களுக்கு தலா 23 அடி உயரத்திலும் பனை மரங்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பனந்தோப்புகளில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு உள்ள வீதியில் நடப்படும்.

    அந்த பனை மரத்தை சுற்றி பனை ஓலைகளால் வேயப்படும். மறுநாள் 26-ந்தேதி திருக்கார்த்திகை அன்று இரவு கோவில் அர்ச்சகர் அந்தப்பனை மரத்தின் உச்சியில் ஏறி பூஜை செய்து தீபம் ஏற்றி விட்டு கீழே இறங்கி வந்து விடுவார். அதன் பிறகு அந்த பனை மரத்தை சுற்றி வேயப்பட்டிருக்கும் பனை ஓலை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாகி விடும். அந்த சாம்பலை பக்தர்கள் அள்ளி சென்று தங்களது வீடுகளிலோ, தொழில் நிறுவனங்களிலோ அல்லது விளை நிலங்களிலோ போடுவது வழக்கம். இவ்வாறாக இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். சொக்கப் பனை கொளுத்தும் இடங்களில் தீயணைக்கும் படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்ட உள்ளனர். இந்த தகவலை குமரி மாவட்ட திருக்கோவில் களின் அறங்காவலர் குழு தலை வர் பிரபா ராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • 108 வைணவத் திருத்தலங்களில் இந்த கோவில் முக்கியமான திருத்தலமாகும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முக்கியமான திருத்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவில் முன்புறமும், பெரிய பெருமாள் சன்னதி பெரிய கோபுரம் வாசல் முன்பும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    அந்தவகையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று 2 இடங்களிலும் சொக்கபானை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக ஆண்டாள் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க, சர்வ அலங்காரத்தில் ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய பெருமாள் ஆகியோர் சப்பரங்களில் எழுந்தருளினர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கார்த்திகை திருவிழாவில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது.
    • இதில் டிரஸ்டி சேதுமாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தி யப்பட்ட முத்துமாரியம்மன் கோவில், இந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு திருக்கார்த்திகை திருவிழா விமரிசையாக நடந்தது. நேற்று இரவு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமி, மயில்

    வாகனத்தில் மாடுகள் பூட்டிய தேரில் கோவிலை வலம் வந்தது.

    பின்னர் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு, சுவாமி முன்பு சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நாடார் உறவின்முறை முறைகாரர் பாபுசெல்வக்கனி, அம்பலகாரர் சக்திவேல் மற்றும் டிரஸ்டிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதே போல் கவுரவ உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காமாட்சி அம்மன் கோவில் முன்பும் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரஸ்டி சேதுமாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.
    • இன்று மாலை சுவாமி நெல்யைப்பர்-காந்திமதியம்மாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்கின்றனர்.

    நெல்லை:

    திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    சிறப்பு பூஜைகள்

    இதையொட்டி சுவாமி நெல்லையப்பர் சன்னதி மகாமண்டபத்தில் அமைந்திருக்கும் நந்தி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பரணி தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மகாஹோமங்கள் செய்து சுவாமி நெல்லையப்பருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தீபத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று மாலை சுவாமி நெல்யைப்பர்-காந்திமதியம்மாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்கின்றனர்.

    சொக்கப்பனை

    தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, பரணி மகா தீபத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமி சன்னதி தெருவில் உள்ள சொக்கப்பனை முக்கு பகுதிக்கு கொண்டு வருகிறார்கள். அங்கு மகா ருத்ரதீபம் எனும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பின்னர் பாரதியார் தெரு அம்மன் சன்னதி முகப்பில் கார்த்திகை தீபம் சொக்கப்பனை ஏற்றப்படுகிறது.

    அதுபோல நெல்லை மாநகர பகுதியில் உள்ள தச்சநல்லூர் நெல்லையப்பர் கோவில், பாளை திரிபுராந்தீஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் இன்று இரவு சிறப்பு தீபாராதனை மற்றும் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படுகிறது. 

    • சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்
    • இதற்காக உயரமான பனை மரங்கள் வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு உள்ள வீதியில் நடப்படும்

    கன்னியாகுமரி:

    கார்த்திகை தீபத் திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண் டாடப்படுகிறது. இதை யொட்டி குமரி மாவட் டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில் உள்பட பல கோவில்களில் கார்த்திகை தீபத் திரு விழாவையொட்டி நாளை மறுநாள் இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

    இதற்காக உயரமான பனை மரங்கள் வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு உள்ள வீதியில் நடப்படும். அந்த பனை மரத்தை சுற்றி பனை ஓலைகளால் வேயப்படும். இரவு கோவில் அர்ச்சகர் பனை மரத்தின் உச்சியில் ஏறி பூஜை செய்து தீபம்ஏற்றி விட்டு கீழே இறங்கி வந்து விடுவார். அதன் பிறகு அந்த பனை மரத்தை சுற்றி வேயப்பட்டிருக்கும் பனைஓலை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாகிவிடும்.

    அந்த சாம்பலை பக்தர்கள் அள்ளி சென்று தங்களது வீடுகளிலோ தொழில் நிறுவனங்களிலோ அல்லது விளை நிலங்களிலோ போடுவது வழக்கம். இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    ×