என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நைவேத்தியம்"
- கற்பூர ஆரத்தி காட்டி விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது.
- விநாயகருக்கு உரிய திசை கிழக்கு
பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமானது கொழுக்கட்டை. கணபதிக்குத் தொந்தி பெருத்தது கொழுக்கட்டையாலே என்பார்கள். எனவே, பிள்ளையாருக்குப் பூஜை செய்யும் போது கொழுக்கட்டை படைக்க வேண்டும். இருபத்தோரு கொழுக்கட்டைகள் படைக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
கணபதிக்கு உகந்த நைவேத்தியம்
கொய்யா, இலந்தை, வாழைப்பழம், திராட்சை, நாகப்பழம் போன்றவற்றுடன் கரும்புத்துண்டு தேங்காய், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும்.
பின்பு வெண்பொங்கல், வெல்ல மோதகம், உப்பு மோதகம், அப்பம், உளுந்து வடை, கறுப்பு சுண்டல், மொச்சக்கொட்டை வேக வைத்தது. இட்லி, தோசை. பாயாசம், அவல்,பொரியில் நாட்டுச்சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன்பின் கற்பூர ஆரத்தி காட்டி விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது.
எப்படி வணங்க வேண்டும்?
முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடது பக்கத்திலும், இடது கையால் வலது பக்கத்திலும் மூன்று முறை குட்டி, காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும்.
தூங்க வேண்டிய திசை
விநாயகருக்கு உரிய திசை கிழக்கு சொந்த வீட்டில் வசிப்பவர்கள் கிழக்கே தலை வைத்து படுக்க வேண்டும். இடது புறம் உடல் கீழே படும்படியோ, மல்லாந்தோ படுக்கலாம்.
மாமனார் வீட்டிற்குச் சென்றால் தெற்கே தலை வைத்துப் படுக்க வேண்டும். முகம் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். அப்போது வடக்குத் திசையில் உள்ள குபேரனின் பார்வை மருமகனுக்குக் கிடைக்கும். மாமனார் வீட்டிலும் செல்வம் பெருகும்.
வடக்கே தலை வைத்துப்படுத்தால் ஊரில் இருப்பவர்கள் நம்மை விரட்டியடிக்கும் நிலைமை ஏற்படும். இதனால்தான் இறந்து போனவர்களின் தலையை வடபுறமும் காலைத் தென்புறமும் வைத்து இறுதிச் சடங்குகளைச் செய்கிறார்கள். இந்த தகவல்களை சொல்லியிருப்பவர்கள் நம் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள்.
விக்னமில்லாத சுகவாழ்வுக்கு இரவில் படுக்கப்போகும் முன் விநாயகரை மனதால் வணங்கியபடி கிழக்கே தலை வைத்துப் படுப்பதே மிக நல்லது.
- நாளை கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
- நாளை தீபம் ஏற்றும் போது என்ன நைவேத்தியம் படைக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமே மிகச் சிறப்பாக மக்களால் கொண்டாடப்படுகிறது.
அருட்பெருஞ்ஜோதியாகிய ஈசன், தனிப்பெருஞ்கருணையோடு நமக்கருள் புரியும் நாள் திருக்கார்த்திகை. இறைவனுக்கு நைவேத்தியம் செய்யாவிட்டால் வழிபாடு நிறைவு பெறுவதில்லை.
திருக்கார்த்திகையன்று சிவனுக்கும், முருகனுக்கும் வெல்லம் சேர்த்த பாயாசம், பிடி கொழுக்கட்டை ஆகியவை நைவேத்தியம் செய்யப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்