என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பேனர்கள் அகற்றம்"
- 7 பேனர்களை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வைத்திருந்தனர்.
- அனைத்து பேனர்களையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்து முன்னணியினர் எஸ்.ஆர்.டி. கார்னர், சத்தியமங்கலம் பஸ் நிலையம், வடக்குப்பேட்டை, கோட்டுவீராம்பாளையம், பழைய மார்க்கெட் ஆகிய பகுதிகளில் மொத்தம் 7 பேனர்களை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வைத்திருந்தனர்.
சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் பேனர் வைத்ததால் இன்று காலை அனைத்து பேனர்களையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர்.
- சார்ஆட்சியர் ஐஸ்வர்யா ஆய்வு செய்து பொது இடங்களில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 28 வார்டுகளில் பொது மக்களுக்கு இடையூறாக பஸ் நிலையம், முக்கிய வீதி, பஜார், தெருக்களில், சாலை ஓரங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனை சார்ஆட்சியர் ஐஸ்வர்யா ஆய்வு செய்து பொது இடங்களில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.
அதன்படி பொன்னேரி நகராட்சி ஆணையாளர் கோபிநாத் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர். மேலும் அனுமதியின்றி பேனர் வைத்தால் அபராதம் விதித்து போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
- தனியார் நிறுவன விளம்பர பேனர்கள் உள்ளிட்ட ஏராளமான பேனர்கள் ஆங்காங்கே மிக உயரமாகவும், மிகவும் நீளமாகவும் வைக்கப்பட்டு உள்ளது.
- இந்த நிலையில், பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் 6-ந் தேதி காலைக்குள் அனுமதியின்றி வைத்துள்ள பேனர்களை அகற்றி கொள்ளுமாறு தெரிவித்திருந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் உள்ள பரமத்தி, வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும், கபிலர்மலை, பரமத்தி, மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளிலும் சாலை ஓரங்களில் பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூராகவும், ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் கண்ணீர் அஞ்சலி, பிறந்தநாள் வாழ்த்து, கோவில், கட்சி விளம்பரங்கள், தனியார் நிறுவன விளம்பர பேனர்கள் உள்ளிட்ட ஏராளமான பேனர்கள் ஆங்காங்கே மிக உயரமாகவும், மிகவும் நீளமாகவும் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் 6-ந் தேதி காலைக்குள் அனுமதியின்றி வைத்துள்ள பேனர்களை அகற்றி கொள்ளுமாறு தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில், சாலை ஓரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு அகற்றப்படாமல் இருந்த அனைத்து பிளக்ஸ் பேனர்களையும் நேற்று மாலை வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.
பரமத்தி பேரூராட்சியில் பஸ் ஸ்டாப் அருகில் மற்றும் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டது. அதேபோல் பரமத்திவேலூர்-ஜேடர்பாளையம் 4 ரோடு சாலைகளிலும், முக்கோண பூங்கா, சுல்தான்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் வைத்திருந்த விளம்பர பிளக்ஸ் பேனர்களை வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
அதேபோல் பொத்தனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் எம்.ஜி.ஆர்., சிலை அருகிலும், 4 ரோடு சாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றினர்.
இனி வரும் நாட்களில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறியும், பேரூராட்சி நிர்வாகத்தின் அனுமதி இன்றியும் பேரூராட்சி பகுதிகளில் வைக்கப்படும் விளம்பர பிளக்ஸ் பேனர்களின் உரிமையா ளர்கள் மீது அபராதம் விதித்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 60 ஊழியர்களை கொண்டும், காவல் துறை மற்றும் வருவாய் துறையின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டது.
- 100-க்கு மேற்பட்ட விளம்பர பேனர்கள் சாலை இருபக்கங்களிலும் வைக்கபட்டிருந்தது.
சூளகிரி.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் 161 எண்ணிக்கை, பேனர்கள் 462 எண்ணிக்கை மற்றும் போஸ்டர்கள் 435 எண்ணிக்கை ஆகியவை மாநகராட்சியின் 60 ஊழியர்களை கொண்டும், காவல் துறை மற்றும் வருவாய் துறையின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டது.
இம்மாநகராட்சியின் அனுமதி பெறப்பட்ட பின்னரே விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட வேண்டும் என பொதுமக்களுக்கு தெரிவித்து க்கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில், தமிழ்நாடு உள்ளாட்சி விதிகள் 2023-ன் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா தெரிவித்துள்ளார்.
அதேபோல் சூளகிரியில் பேரிகை, கிருஷ்ணகிரி, உத்தப்பள்ளி சாலைகளில் 100-க்கு மேற்பட்ட விளம்பர பேனர்கள் சாலை இருபக்கங்களிலும் வைக்கபட்டிருந்தது.
இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சி சரயு உத்தரவின் பேரில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிக்குமார், கோபாலகிருஷ்ணன் தலைமையில் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், ஊராட்சி செயலர் வெங்கடேஷ், மற்றும் அலுவலர்கள் அனைத்து விளம்பர பேனர்களையும் அகற்றினர்.
- அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அகற்றும் பணி நடை பெற்றது.
- நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்தியூர்:
அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் அனுமதி யின்றி வைக்கப்ப ட்டுள்ள விளம்பர பல கைகள், பேன ர்கள் மற்றும் பிளாஸ்டிக் போர்டு களை அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில், துப்பு ரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வை யாளர் ஈஸ்வரமூர்த்தி, செந்தில்கு மார் ஆகியோர் தூய்மை பணியாளர்களை கொண்டு அகற்றும் பணி நடை பெற்றது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்புக்கள் 2023-2024-ன்படி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் இந்த விளம்பர பலகைகளை அகற்றும் பணி நடை பெற்றது.
- பேனர்களை அதிரடியாக அகற்றி தடை விதித்தும் வருகின்றனர்.
- உரிய அனுமதி பெற்று பேனர்கள் வைக்க வேண்டும்
கடலூர்:
பொது இடங்கள் மற்றும் சாலைகளின் ஓரத்தில் பேனர்கள் வைப்பதால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அவ்வப் போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு பேனர்களை அதிரடியாக அகற்றி தடை விதித்தும் வருகின்றனர். கடலூர் மாநகராட்சி பகுதியில் பேனர்கள் வைக்க வேண்டும் என்றால் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அதன் மூலம் உரிய அனுமதி பெற்று பேனர்கள் வைக்க வேண்டும் என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூராகவும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட கடலூர் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் ஓரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. மேலும் மாநகராட்சி ஊழியர்கள் பேனர்கள் அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் தி.மு.க. தலைமை அறிவுறுத்தியதை தொடர்ந்து கடலூர் மாநகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தி.மு.க.வினர் பேனர்களும் அதிரடியாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
- நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
- பேனர்கள் அகற்றும் பணி தொடரும்
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அனுமதியின்றி அதிக அளவிலான பிளக்ஸ் பேனர்கள் வைத்திருப்பதாக எழுந்த புகாரினை தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் மாரிச்செல்வி வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற நகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து நகரமைப்பு அலுவலர் சண்முகம், நகரமைப்பு ஆய்வாளர் பாலாஜி, அல்லிமுத்து, சுகாதார ஆய்வாளர் செந்தில், நகராட்சி பணியாளர்கள் சரவணன், தயாளன் உள்ளிட்டோர், வாணியம்பாடி நகராட்சி பணியாளர்கள் வாணியம்பாடியின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகளை அகற்றினர்.
மேலும் வாணியம்பாடியின் அனைத்து பகுதிகளிலும் இதேபோல் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றும் பணி தொடரும் என்றும், தொடர்ந்து அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை செய்துள்ளார்.
- தூய்மை பணிகளை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
- சுவரொட்டிகளை கிழித்து அகற்றினர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி சார்பில், மக்களுக்கான தூய்மை இயக்கத்தின் படி மாதந்தோறும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் நகர் பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பஸ் நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்களில் தூய்மைப் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில் சுவரொட்டிகள் மற்றும் பேனர்களை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சுவரொட்டிகளை கிழித்து அகற்றினர். ஊட்டி நகராட்சி மார்க்கெட், பிங்கர்போஸ்ட், கோடப்பமந்து, அப்பர் பஜார், லோயர் பஜார் உள்பட பல இடங்களிலும் நடந்தது. முன்னதாக பணியாளர்கள் தூய்மை பணிகளை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் சுவர்களில் போஸ்டர் ஒட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்