என் மலர்
நீங்கள் தேடியது "ஆருத்ரா தரிசனம்"
- வருகிற 28-ந் தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- ஆண்டு முழுவதும் மரகத நடராஜர் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணியதலமான திருஉத்தரகோசமங்கை கோவில். பூலோகத்தில் தோன்றிய முதல் கோவிலான இங்கு மங்களநாதர், மங்களநாயகி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
மேலும், இங்கு எழுந்தருளி உள்ள ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை ஒலி, மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் மரகத சிலை அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.
வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இதன்படி வருகிற 28-ந் தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி காலை மரகத நடராஜர் மீது பூசப்பட்டு இருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக தொடர்ந்து பால், பன்னீர், திரவியம், தேன், மஞ்சள் பொடி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பகல் முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் களையப்பட்ட அபூர்வ மரகத நடராஜர் வைக்கப்பட்டிருக்கும்.
பின்னர் அன்றைய தினம் இரவு 11 மணிக்குமேல் ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி மறுநாள் 6-ந் தேதி அதிகாலை அருணோதய காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னதாக மீண்டும் நடராஜர் மீது சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- மரகத நடராஜரின் ஆருத்ரா தரிசனம் ஜனவரி 5-ந்தேதி நடக்கிறது.
- ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணியதலமான திருஉத்தரகோசமங்கை கோவில். இங்கு சிவபெருமான் மங்கள நாதராகவும், உமையம்மை மங்கள நாயகியாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
மேலும், இங்கு எழுந்தருளி உள்ள ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை ஒலி, மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் மரகத சிலை அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.
வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இதன்படி வருகிற 28-ந் தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி காலை மரகத நடராஜர் மீது பூசப்பட்டு இருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக தொடர்ந்து பால், பன்னீர், திரவியம், தேன், மஞ்சள் பொடி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பகல் முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் களையப்பட்ட அபூர்வ மரகத நடராஜர் வைக்கப்பட்டிருக்கும்.
பின்னர் அன்றைய தினம் இரவு 11 மணிக்குமேல் ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி மறுநாள் 6-ந் தேதி அதிகாலை அருணோதய காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னதாக மீண்டும் நடராஜர் மீது சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- ஜனவரி 5-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
- ஆருத்ரா தரிசன விழா 6-ந்தேதி நடக்கிறது.
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த இரு விழாக்களிலும் மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் உற்சவராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும். வேறு எந்த கோவில்களிலும் இத்தகைய சிறப்பை காண இயலாது என்பதால் இந்த விழாவை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்திற்கு வருவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.பின்னர் 29-ந் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்திலும், 30-ந் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 31-ந்தேதி வெள்ளி பூத வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.
தொடர்ந்து அடுத்த மாதம்(ஜனவரி) 1-ந்தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 2-ந்தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 3-ந் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 4-ந் தேதி தங்க ரதத்திலும் சாமி வீதி உலா நடைபெறும். தொடர்ந்து 5-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 6-ந்தேதி நடக்கிறது. முன்னதாக அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.
இதைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் திருவாபரண அலங்கார காட்சி, சிற்சபையில் ரகசிய ஸ்தாபன பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சாமியும், அம்பாளும் சிற்சபைக்கு எழுந்தருளும் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.
தொடர்ந்து 7-ந்தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதி உலா, 8-ந் தேதி இரவு ஞானபிரகாச குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறும். மார்கழி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ சன்னதியில் பந்தல் அமைக்கும் பணிகள் முடிவடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
- திருவாதிரை நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.
- நடராஜ பெருமானுக்கு பல்வேறு திரவிய சிறப்பு அபிஷேகம் நடைபெறும்
கொங்கு ஏழு ஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும், நடுச்சிதம்பரம் என போற்றக்கூடியதுமான சேவூர் அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா, வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 5-ந் தேதி மாலை 6 மணிக்கு சேவூர் அங்காளம்மன் கோவிலில் திருவாதிரை நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது. திருவாதிரை நாச்சியார் சிறப்பு அலங்காரத்துடன், முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெறவுள்ளது. இரவு 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும்.
முக்கிய நிகழ்ச்சியாக வரும் 6-ந் தேதி காலை 9 மணிக்கு நடராஜ பெருமான் உடனமர் சிவகாமியம்பாளுக்கு பல்வேறு திரவிய சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து காலை 11 மணிக்கு சிவபெருமானுக்கு ராக தாளங்கள் வாசிக்கப்பட்டு மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மதியம் 2 மணிக்கு புஷ்ப அலங்காரத்தில் கோவில் வெளிபுற வளாகத்தில் உள்ள அரச மரத்தடி விநாயகரை மூன்று முறை சுற்றும் "பட்டி சுற்றுதல் "நிகழ்ச்சி நடைபெற்று, திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் கையால வாத்திய இசையுடன் முக்கிய வீதிகளின் வழியாக சாமி திருவீதி உலா மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு 6-ந் தேதி காலை 9 மணி முதல் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
- உத்திரகோசமங்கையில் காப்புக்கட்டுதலுடன் ஆருத்ரா தரிசனம் விழா தொடங்கியது.
- வருகிற 5-ந் தேதி கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு படியை களையும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்க உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயமாக விளங்குகிறது. இங்கு பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது.
மரகத நடராஜரின் மீது ஒளி, ஒலியால் ஏற்படும் அதிர்வுகளை கட்டுப்படுத்தவும், வருடம் முழுவதும் பாதுகாக்கும் பொருட்டும் சந்தனம் பூசுவது வழக்கம். வருட த்திற்கு ஒருமுறை மட்டுமே நடராஜர் சிலையில் பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்டு பொது மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும். இந்த நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த நிலையில் உத்திர கோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு இரவு 7 மணியளவில் கோவில் முன்புறமுள்ள நர்த்தன விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.தினமும் காலை 10 மணிக்கு மாணிக்கவாசகரின் உட்பிரகார வீதி உலாவும், திருவெம்பாவை பாடுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று காலை 8 மணிக்கு மேல் கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு படியை களையும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்க உள்ளது.
அன்று காலை 11 மணியளவில் மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேக, ஆராதனை நிறை வேற்றப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்படும். பின்னர் இரவு 10.30 மணிய ளவில் ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று, கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மறுநாள் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமையன்று) அதிகாலை 5.30 மணியளவில் அருணோதய நேரத்தில் நடராஜர் சிலைக்கு மீண்டும் சந்தனக் காப்பிடுதலும் நடக்கும்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- 6-ந்தேதி நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது.
- நடராஜருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா திருவிழா கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டின் திருவாதிரை ஆருத்ரா திருவிழா நேற்று முன்தினம் இரவு நடராஜருக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
ஆருத்ரா திருவிழாவில் இரண்டாவது நாளான நேற்று ருத்ராட்ச மண்டபத்தில் வீற்றிருந்த நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. அதுபோல் மாணிக்கவாசகர் தங்க கேடயத்தில் வைத்து மூன்றாம் பிரகாரத்தை சுற்றி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஆருத்ரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 6-ந்தேதி அதிகாலை 4 மணி அளவில் நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு பால், பன்னீர், திரவியம், மஞ்சப்பொடி, இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து நடராஜருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை பூஜைகள் நடைபெற்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
- குகநாதீஸ்வரர் கோவில் மூலஸ்தானத்தில் குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5 ½ அடி உயர சிவலிங்க சிலை அமைந்து உள்ளது.
- பக்தர்களுக்கு “களி” பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநா தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது ஆகும்.
இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே கட்டிஉள்ளார் என்று வரலாற்றுச் சான்று கள் கூறுகின்றன. இங்கு குகன் என்ற முருகக்கடவுள் ஈஸ்வரன் என்றசிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக்காரணமாயிற்று. இந்த கோவில் மூலஸ் தானத்தில் குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5 ½ அடி உயர சிவலிங்க சிலை அமைந்து உள்ளது. அப்படிப் பட்ட புகழ்பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசனம்நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினமான வருகிற 6-ந்தேதி காலை இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.
இதையொட்டி அன்று அதிகாலை 3 மணிக்கு மிருத்ஞ்சய ஹோமமும் 4 மணிக்கு சிவபெருமானுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், களபம், மஞ்சள்பொடி, மாபொடி, விபூதி, தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன்பின்னர் 5 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கி றது. அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட தட்டு வாகனத்தில் நடராஜரும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு "களி" பிரசாதமாக வழங்கப் படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வ ரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வரு கின்றனர்.
- ஆண்டுதோறும் 1 நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதி திறக்கப்படும்.
- நடராஜருக்கு 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது.
- 6-ம்தேதி மாலை மீண்டும் நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். இந்த கோவில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையான கோவிலாகும். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும்.
இந்த நிலையில் திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் இந்த ஆண்டின் ஆருத்ரா திருவிழாவானது கடந்த 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் சுவாமி-அம்பாள் மற்றும் நடராஜர் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
ஆருத்ரா திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி அளவில் மரகத நடராஜர் சன்னதியானது திறக்கப்படுகின்றது. தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனங்கள் முழுவதுமாக களையப்படுகிறது. பின்னர் நடராஜருக்கு பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப்பொடி, தேன், இளநீர் உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு 11 மணி அளவில் மீண்டும் ஆருத்ரா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறுகின்றது. அபிஷேகம் முடிந்து 6-ம் தேதி அன்று காலை சூரிய உதய நேரத்தில் நடராஜருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகின்றன. 6-ம்தேதி மாலை மீண்டும் நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது.
நாளை 5-ம் தேதி காலையிலிருந்து 6-ம் தேதி மாலை வரையிலும் மட்டும் மரகத நடராஜர் சன்னதியில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை கோவிலில் நாளை பகல் மற்றும் இரவு முழுவதும் சென்னை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது.
நாளை நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜராஜேஸ்வரி நாச்சியார் ஆகியோர் மேற்பார்வையில் திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
அதுபோல் நாளை மறுநாள் திரு உத்தரகோசமங்கை கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்காக மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 1 நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதியானது பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடுவதையே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கின்றனர்.
- சிவன் கோவிலில்களில் நாளை இரவு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. திருவாதிரை நட்சத்திரத்தில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் வருடத்திற்கு 6 முறை அபிஷேகம் நடைபெறும். சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடுவதையே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கின்றனர்.
நடராஜர் கங்கையை தன் முடி மீது வைத்துக் கொண்டதால் அம்மன் கோபித்து கொண்டு திருவானைக்காவல் கோவிலின் தெற்கு வாசல் அருகே நின்றார். இந்த ஊடலை சரிசெய்ய சிவபெருமானின் பிம்பமான மாணிக்கவாசகர் திருவெம்பாவை 12-வது பாடலில் `ஆர்த்த பிறவித் துயர் கெட' என்னும் பாடலை பாடி இருவரையும் சேர்த்து வைத்ததாக ஐதீகம். இந்த ஊடல் காட்சி திருவாதிரையன்று திருவானைக்காவல் கோவிலில் ஓதுவார் பாட ஊடல் உற்சவம் என்ற பெயரில் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருவாதிரை திருவிழா நடைபெறுகிறது. விழாவைமுன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு ஏத்தி, இறக்கும் நிகழ்ச்சி, 9 மணிக்கு பச்சைபார்த்தல் நடைபெறும் தொடர்ந்து இரவு 10 மணிக்கு நடராஜர் சன்னதியில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. கோவில் 4-ம் பிரகாரத்தில் நடராஜர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து காலை 9 மணிக்கு ஊடல் உற்சவம் நடைபெறுகிறது.
இதுபோல் உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் நாளை இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நடராஜர்- சிவகாமி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது. கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதைதொடர்ந்து பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், சுவாமி புறப்பாடு கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும்.
மேலும் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் நாளை இரவு 10 மணிக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் நடராஜர்- சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மறுநாள் காலை 8 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. உள் மற்றும் வெளி வீதிகளில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதுபோல் லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர், துவாக்குடி அடுத்த திருநெடுங்களநாதர் கோவிலில், நம்பர்-1 டோல்கேட் பகுதியில் உள்ள உத்தமர்கோவில், முசிறியில் உள்ள கற்பூரவல்லி உடனுறை சந்திரமவுலீஸ்வரர் கோவில், வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில், திருஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் கோவில், திண்ணக்கோணம் பசுபதீஸ்வரர் கோவில், திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் கோவில், தொட்டியம் அனலாடீஸ்வரர் உடனுறை திரிபுரசுந்தரி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
- உத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி அபிஷேக நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- திருவிழா முன்னேற்பாடு பணிகளை ராமநாதபுரம் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசனத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த கோவிலில் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் 9 மணி வரை மரகத நடராஜப் பெருமானுக்கு சந்தனம் படி களைதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட உள்ளன.
திருஉத்தரகோசமங்கை ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் டாக்டர்கள் அடங்கிய மருத்துவ முகாம் ராஜகோபுரம் முன்பும், நடராஜர் சன்னதி அருகிலும் அமைக்கப்படுகிறது. 2 108 அவசர ஊர்திகள் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆருத்ரா தரிசனம் நடைபெறும் மரகத நடராஜர் சன்னதியின் உள் வளாகத்தில் சமஸ்தான தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் பாதுகாப்பு செய்யவும், ஆருத்ரா தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் தரிசனத்திற்கு பக்தர்களின் வரிசையினை ஒழுங்குபடுத்தி அனுப்பவும் ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்வார்கள்.
ஆங்காங்கே ஒலி பெருக்கி வசதிகள் அமைத்து பக்தர்களை வரிசைப்படுத்தவும், தேவையான உதவிகளை மேற்கொள்ளவும் துறை யினருக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊராட்சி பொதுக்கழிவறை மற்றும் கோவில் கழிவறைகள், கோவில் நுழைவாயிலுக்கு வெளியே மொபைல் டாய்லெட் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
பக்தர்கள் வசதிக்காக தடையில்லா மின்சாரம் வழங்க தெரிவிக்கப்ப ட்டுள்ளது. இரவு நேரங்களில் பூஜைகள் நடைபெறும் என்பதால் போதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் ஜெனரேட்டர் வசதியும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆருத்ரா தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி நிகழ்வுகளைக் கண்டுகளிக்க கோவிலில் முக்கிய இடத்தில் பெரிய அளவில் மின்னணு திரை அமைத்து அபிஷேக நிகழ்வுகளை காண ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழி மற்றும் வெளியில் வரும் வழி எனத் தனித்தனியாக பிரிக்கப்பட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போதுமான வாகனங்கள் நிறுத்துவதற்கு வாகன காப்பகம் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, வருவாய் கோட்டாட்சியர் கோபு, கீழக்கரை துணைக் காவல் கண்காணிப்பாளர் சுபாஷ், வட்டாட்சியர் சரவணன், திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
- 28-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 6-ந் தேதி (வெள்ளிக் கிழமை) அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான 28-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
மேலும், உள்ளுர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் வெ ே 6-ந் தேதி அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.
- அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
- கோவில் நிர்வாகிகள் தகவல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
இதைமுன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, 5 மணியளவில் 5½ அடி உயர ஸ்ரீநடராஜருக்கு அபிஷேகம், ஆராதனையும், காலை 7 மணியளவில் கோபுர தரிசனமும், பின்னர் பக்தர்களுக்கு ஆருத்ரா தீப மை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
மாலை 6 மணியளவில் ஸ்ரீநடராஜர் சிவகாமசுந்தரி அம்மனுடன், 63 நாயன்மார்கள், சந்தான குறவர்கள் தனித்தனியே சப்பரத்தில் வீதி உலா சிவகான பேரிகை முழங்க நடைபெறும் என கோவில் விழாக்குழு நிர்வாகிகள் கூறினர்.