என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திடீர் போராட்டம்"
- கோட்டார் மறை மாவட்ட 2 இணை பங்கு தந்தையர்கள் குளச்சல் காணிக்கை அன்னை ஆலயம் வந்து வழிபாடு செய்கின்றனர்
- பேச்சு வார்த்தையில் வழக்கம் போல் ஆலய வழிபாடு நடத்துவது என சுமூக முடிவு ஏற்பட்டது.
கன்னியாகுமரி :
குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் கோட்டார் மறை மாவட்டத்தால் உருவாக்கப்பட்ட அன்பியங்கள் இல்லை என்ற காரணத்தால் கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி முதல் தினசரி திருப்பலி, நினைவு திருப்பலி, ஒப்புரவு அருட்சாதனம், முதல் திருவிருந்து, மந்திரிப்புகள், தவக்காலத்தில் குருக்களால் நடத்தப்படும் சிலுவைப் பாதை ஆகியவைகள் தடை செய்யப்பட்டது. இதையடுத்து குளச்சல் பங்கு மக்கள் மற்றும் கோட்டார் மறை மாவட்ட கடற்கரை பங்குகளின் கூட்டமைப்பு குழு சார்பில் கடந்த மாதம் 24-ந் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை முன்னிட்டு மீனவர்கள் அன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதனால் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் வழக்கம் போல் ஆலய வழிபாடு நடத்துவது என சுமூக முடிவு ஏற்பட்டது.
தொடர்ந்து கோட்டார் மறை மாவட்ட 2 இணை பங்கு தந்தையர்கள் குளச்சல் காணிக்கை அன்னை ஆலயம் வந்து வழிபாடு செய்துவிட்டு செல்கின்றனர். ஆனால் ஆலய நிர்வாகிகள் வழிபாடு நடத்த வரும் இணை பங்கு தந்தையர்கள் குளச்சல் ஆலயத்தில் தங்கியிருக்க வேண்டும் எனவும், வேறு பங்குத்தந்தையை நியமிக்க வேண்டும் எனவும், தடைப்பட்டுள்ள நினைவு திருப்பலியை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை கோட்டார் மறைமாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் குளச்சல் ஆலய நிர்வாகிகள் நேற்று மாலை அவசரக்கூட்டம் நடத்தினர். இதில் சபைகள், சங்கங்கள் மற்றும் இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்ட முடிவுப்படி 26-ந் தேதி (இன்று) மாலை 3.30 மணியளவில் வேலை நிறுத்தம் செய்யாமல் குளச்சல் காணிக்கை அன்னை ஆலய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட் டது. இதன்படி குளச்சலில் மீனவர்கள் இன்றும் மீண்டும் போராட்டம் நடத்துகின்றனர்.
- பேரூராட்சி மன்ற தலைவரை கண்டித்து நடந்தது
- பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த தேசூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ள நிலையில் 8 தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பேரூராட்சி மன்ற தலைவருக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் இடையே பணியின் காரணமாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது பேரூராட்சி மன்ற தலைவரின் கணவர் தகாத வார்த்தையால் பேசியதாகவும் மேலும் தூய்மை பணியாளர்களை தரகுறைவாக நடத்து வதாகவும் கூறி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சம்பவம் இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- பெற்றோரும் பங்கேற்றதால் பரபரப்பு
- வேறு பள்ளிகளில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.
நாகர்கோவில் :
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் கடந்த 19-ந்தேதி வெளியானது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பிளஸ்-1 வகுப்புகளில் சேர்ந்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-1 மாணவ-மாணவிகள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டத்திலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான பள்ளிகள் தங்கள் பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்கள் விரும்பும் பாடப்பிரிவு களை ஒதுக்கி வருகின்றனர்.
அதற்கு பிறகு காலியாக உள்ள இடங்கள், வேறு பள்ளிகளில் இருந்து வரும் மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடப்பிரிவுக்கு உரிய கட்டணங்களை செலுத்தி பள்ளியில் சேர்ந்து வருகின்றனர்.
நாகர்கோவில் கவிமணி அரசு பள்ளியிலும் பிளஸ்-1 மாணவிகள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை பிளஸ்-1 சேர்க்கைக்காக ஏராளமான மாணவிகள், தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்தனர். அப்போது சில மாணவிகளுக்கு அவர்கள் விரும்பி கேட்ட பாடப்பிரிவுகள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டனர். அவர்கள் கொடுத்த விளக்கத்தை ஏற்காத 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோருடன், பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறுவயது முதல் ஒரே பள்ளியில் படித்த தங்களுக்கு விரும்பும் பாடப்பிரிவுகளை ஒதுக்காமல், வேறு பள்ளிகளில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போராட்டம் குறித்து மாணவிகள் கூறுகையில், நாங்கள் சிறுவயது முதல் இந்த பள்ளியில் தான் படித்து வருகிறோம். தற்போது பிளஸ்-1 படிப்புக்கு விருப்ப பாடத்தை கேட்டு நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தோம்.
அந்த பிரிவில் சேர்வதற்காக இன்று பெற்றோரை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்தோம். ஆனால் நாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் ஒதுக்கப்படாதது தெரியவந்தது. எங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல், வேறு பள்ளிகளில் இருந்து வந்தவர்களுக்கு கொடுத்திருப்பது வேதனை அளிக்கிறது. அவர்களும், எங்கள் அளவிற்கு தான் மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.
எனவே எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, விரும்பும் பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும் என்றனர். மாணவிகளின் இந்தப் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- நிலத்தை ஆக்கிரமித்து அரசு நூலகம் கட்டுவதாக புகார்
- நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் அருகே உள்ள அரியூரை சேர்ந்த சூரிய நாராயணன் (வயது 62) இவர் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு தரையில் அமைந்து தனியாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
சத்துவாச்சாரி போலீசார் வந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அரியூரில் எனது தந்தை சிவானந்த முதலியாருக்கு சொந்தமான 14 சென்ட் காலி இடத்தை அரசு ஆக்கிரமித்து பொது நூலகம் கட்டி வருகின்றனர்.
நான் அரசு அதிகாரிகளிடம் சென்று முறையிட்டும் அதிகாரிகள் இந்த இடம் அரசுக்கு சொந்தமானமதாக அலட்சியமான பதிலை கூறுகிறார்கள்.
தாசில்தார், கிராம நிர்வாகி, கலெக்டர் ஆகியோரிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை, இந்த சொத்துக்குரிய ஆவணங்கள் அனைத்தும் இன்று வரை எனது தந்தை சிவானந்த முதலியார் பெயரில் உள்ளதிற்கான அனைத்து முறையான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது.
சர்வேயருக்கு பணம் கட்டியும் அவர் இதுநாள்வரை அளப்பதற்கு வரவில்லை. ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரி மேற்படி நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் எனக் கூறினார்.
இதையடுத்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு சென்றார்.
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை மற்றும் பட்டப்படிப்பு படித்து வருகிறார்கள்.
- 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை கையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடவள்ளி,
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை மற்றும் பட்டப்படிப்பு படித்து வருகிறார்கள். இதில் சிலர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர்.
குறிப்பாக பெண்கள் தங்கி பயில கண்ணம்மா, பெரியார், வாசுகி என 3 விடுதிகள் உள்ளன. 3 விடுதிகளிலும் மொத்தம் 1,500 பேர் உள்ளனர்.
முன்பு 3 விடுதிக்கும் தனித்தனியாக சமையல் செய்து கொடுத்து வந்தனர். கடந்த ஒரு வருடமாக 3 விடுதிக்கும் ஒரு இடத்தில் சமையல் செய்து கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு கையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவிகள் கூறும், போது விடுதியில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை. இதுகுறித்து புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கழிப்பிடமும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. தண்ணீர் வினியோகமும் செய்யப்படுவதில்லை என்றனர்.
மாணவிகள் போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் வடவள்ளி போலீசார் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உங்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார். இதையடுத்து மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- 44 குடும்பங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையினர் காலி செய்ய வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
- ஹவுசிங் போர்டில் மாற்று இடம் வழங்க வேண்டி வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை ராஜ விநாயகர் வீதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வரும் 44 குடும்பங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையினர் காலி செய்ய வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையிலும், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் வருகிற ஜனவரி 20ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இதன் காரணமாக ஒருங்கிணைப்பாளர்ஆல்பேட்டை பாபு தலைமையில் 44 வீட்டிலும் மற்றும் முத்தாலம்மன் கோவில் ஆலயத்திலும் தங்களுக்கு குண்டு சாலை சாலை ஹவுசிங் போர்டில் மாற்று இடம் வழங்க வேண்டி வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் இன்று திடீர் போராட்டம் நடைபெற்றது
- பல்வேறு கோரிக்ைககளை வலியுறுத்தி
திருச்சி
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மேகராஜன் முன்னிலையில் சங்கத்தின் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் இருந்த ஆரூரான் சர்க்கரை ஆலைகள் 14,144 விவசாயிகள் ரூ.400 கோடிக்கு 2016-ம் ஆண்டு வெட்டிக் கொடுத்த கரும்புக்கு தஞ்சை விவசாயிகள் 7,592 பேருக்கு ரூ.33 கோடிகளும், கடலூர் விவசாயிகள் 6552 பேருக்கு ரூ.12 கோடிகளும் கொடுங்கள் என்று தீர்ப்பாயம் கூறியது. அதையும் ஒரு வருட காலத்தில் 4 தவணையாக கொடுக்கவும், அதிலும் ரூ.100-க்கு ரூ.57 தருவதாக கூறுவது நியாயமா?
அத்துடன் விவசாயிகள் பெயரில் விவசாயிகள் வங்கிக்கு போகாமல் ரூ.160 கோடிகள் விவசாயிகள் பெயரில் பெற்று ஏமாற்றியதை கண்டித்தும் கடந்த 13 நாட்களாக பாபநாசம் திருமண்டங்குடியில் போராடும் விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்றும், பிரதமர் மோடி கரும்புக்கு ரூ.8100 கொடுப்பதாக கூறி ரூ.2900 மட்டுமே கொடுக்கிறார். ஆனால் ஆருரான் ஆலை ரூ.1550 கரும்புக்கு தருகிறது.
இதற்கு ஆலை முதலாளியையும், வங்கி மேலாளரையும் கைது செய்ய வலியுறுத்தியும், கடந்த ஆண்டு அதிக மழையால் அழிந்த பயிர்களுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உதவிட வேண்டுகிறோம்.60 வயதடைந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
காவிரியில் சுமார் 500 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்த நீரில் 10 டி.எம்.சி. தண்ணீரை அய்யாற்றுடன் இணைத்தால் 1 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்வதுடன் 1 கோடி சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலுர், அரியலுர் மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்