search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலபைரவர்"

    • சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.
    • எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

    சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.

    எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

    சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர்

    வைகாசி தாதா - ருரு பைரவர்

    ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர்

    ஆடி அரியமான் - கபால பைரவர்

    ஆவணி விஸ்வான் - ஸ்வர்ணாகர்ஷண பைரவர்

    புரட்டாசி பகன் - வடுக பைரவர்

    ஐப்பசி பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர்

    கார்த்திகை துவஷ்டா - பீஷண பைரவர்

    மார்கழி மித்திரன் -அசிதாங்க பைரவர்

    தை விஷ்ணு - குரோதன பைரவர்

    மாசி வருணன் - ஸம்ஹார பைரவர்

    பங்குனி பூஷா - சட்டநாத பைரவர்.

    • ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும்.
    • அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும்.

    குழந்தைச் செல்வம் பெற:

    திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதிய ருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.

    சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க:

    சனீஸ்வரரின் குரு பைரவர் என்ப தால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார்.

    எனவே, நாம் சனிக் கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.

    தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்:

    ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும்.

    அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும்.

    6 சனிக் கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கை கூடும்.

    தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறை வேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

    • தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
    • பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

    பஞ்ச தீபம்

    தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.

    பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.

    பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

    இழந்த பொருட்களை மீண்டும் பெற:

    பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

    • இவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகும்.
    • அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் ஜஸ்வரியம், சுகம், பொன், பொருளையும் தருவார்.

    அதியமான் கோட்டை கால பைரவர் கோவிலில் உள்ள உன்மந்திர பைரவரின் திருமேனியில் 27 நட்சத்திரமும், 12 ராசியும் அடக்கம்.

    எனவே இவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகும்.

    மேலும் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

    தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு

    அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் ஜஸ்வரியம், சுகம், பொன், பொருளையும் தருவார்.

    அஷ்டமி திதியில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வணங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிவதால் நாமும் அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலையில் விரதம் இருந்து பைரவருக்கு பூஜைகள் செய்தால் நினைத்தது எல்லாம் நடக்கும்.

    தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்சதீபம் எண்ணையால் தீபமேற்றி வழிபட்டால் காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி நல்ல அருள் கிடைக்கும்.

    • தருமபுரியை ஆட்சி செய்த மன்னர் அதியமான், போரில் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
    • அப்போது காவல் தெய்வமான கால பைரவரை வணங்க வேண்டும் என்றனர்.

    தொட்டில் பூஜை

    நீண்ட நாளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெற அதியமான் கோட்டை

    ஸ்ரீதட்சிணகாசி கால பைரவருக்கு ருத்ரா அபிஷேகம் செய்து கால பைரவர் (உற்சவமூர்த்தி) தொட்டிலில் இட்டு

    வடுக பைரவ சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து தொட்டில் ஆட்டினால் இல்லத்தில்

    குழந்தை பாக்கியம் பெற்று வீட்டில் தொட்டில் ஆட்டலாம்.

    காசியில் இருந்து பல்லக்கு மூலம் தருமபுரிக்கு வந்த கால பைரவர் சிலை

    9ம் நூற்றாண்டில் எதிரிகளால் அதிக இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன.

    அப்போது தருமபுரியை ஆட்சி செய்த மன்னர் அதியமான், போரில் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் ஜோதிடர்களை அழைத்து ஆலோசனை கேட்டார்.

    அப்போது காவல் தெய்வமான கால பைரவரை வணங்க வேண்டும் என்றனர்.

    ஆஸ்தான ஜோதிடர்களின் ஆலோசனைப்படி மன்னர் அதியமான் காசியில் இருந்து சிலைகளை அதியமான் கோட்டைக்கு கொண்டு வந்து கால பைரவர் கோவிலை கட்டினார்.

    அந்த சமயத்தில் கால பைரவர் சிலையை காசியில் இருந்து தருமபுரிக்கு பல்லக்கு மூலம் தூக்கி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    • தருமபுரி அதியமான்கோட்டை கால பைரவர் மிகவும் பிரசித்திபெற்றது.
    • இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்.

    தருமபுரி அதியமான்கோட்டை கால பைரவர் மிகவும் பிரசித்திபெற்றது.

    இந்தியாவில் 2 இடங்களில் மட்டுமே கால பைரவர் கோவில் உள்ளது.

    முதல் இடம் காசியில் தட்சிண காசி (தென்காசி காலபைரவர்) உள்ளார்.

    இரண்டாம் இடம் தர்மபுரி அதியமான் கோட்டையில் (இங்கு) உள்ளது.

    ஆதியும் அந்தமும் இவரே. மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர்.

    இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்.

    அதியமான் கோட்டை கால பைரவர் கோவில் கர்நாடகா மாநிலம் முக்கியமாக பெங்களூர் நகர மக்கள் மற்றும் ஆந்திர மாநில மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கோவில் ஆகும்.

    இதனால் மாதத்தோறும், ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கர்நாடக, ஆந்திர மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்து கால பைரவரை தரிசனம் செய்கிறார்கள், மேலும் தமிழகத்தில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் கால பைரவரை வழிபட்டு செல்கிறார்கள்.

    • பைரவருக்கு சாம்பராணி தைல அபிஷேகமும் கதம்ப சாதம் நெய்வேத்தியமும் மிகவும் பிடித்தமானவை.
    • பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபடுவதால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

    பைரவருக்கு மோட்ச தீபம்

    மோட்சத்திற்கு அதிபதி சிவன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அது தவறு. சிவனின் 64 அவதாரங்களில் ஒன்றான கால பைரவரே மோட்சத்துக்கு அதிபதி ஆவார்.

    அதனால் தான் காசி தலத்திற்கு கால பைரவர் அதிபதியாக உள்ளார்.

    ஒவ்வொருவருடமும் தர்ப்பணம் பூஜையை ஆற்று ஓரமும், கடற்கரை ஓரமும் அல்லது குருமார்களை வைத்து வீட்டிலும் செய்யலாம்.

    வீட்டில் செய்யும் பூஜையை சிரார்த்தம்(திதி) பூஜை என்பார்கள். இறுதியாக பிண்டங்களை கடலிலோ,ஆற்றிலோ கரைக்கலாம்.

    மோட்ச தீபம் சிவனுக்கு ஏற்றக்கூடாது.

    அது பைரவருக்கு உரியது, சிரார்த்தம் பூஜை அல்லது மோட்ச தீபம் பைரவருக்கு ஏற்றி, மோட்சத்துக்குரிய அர்ச்சனை செய்த பின் கடைசியில் சிவனுக்கோ அல்லது விநாயகருக்கோ நெய்தீபம் ஏற்றி குடும்ப அர்ச்சனை மட்டும் செய்ய வேண்டும்.

    பைரவருக்கு சாம்பராணி தைல அபிஷேகமும் கதம்ப சாதம் நெய்வேத்தியமும் மிகவும் பிடித்தமானவை.

    எனவே இவற்றை எல்லா பூஜைகளுக்கும் பயன்படுத்தலாம்.

    பஞ்ச தீபம்

    பஞ்ச தீபம் என்பது விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்த எண்ணெய் ஆகும்.

    இவற்றை தனித்தனியாக அகல்விளக்கில் ஏற்ற வேண்டும்.

    பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபடுவதால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

    • தேங்காய்- குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற் றுமை உண்டாகும்.
    • அன்னாசிப்பழம்-சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.

    பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும், காய்கறிக்கும் மகத்தான சக்தியும், வெவ்வேறு பலன்களும் உண்டு.

    1.தேங்காய்- குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற் றுமை உண்டாகும்.

    2.துரைஞ்சி நாரத்தை ராஜகனி-நரம்பு வியாதி திருமணம் தடை நீங்கும்.

    3.கொடை மிளகாய்-புற்று நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் தீரும்.

    4.கொய்யா பழம்/ கத்திரிக்காய்-நீரழிவு நோய், இருதய நோய், கிட்னி நோய்கள் குணமாகும்.

    5.பீட்ருட்- ரத்தம் சம்பந்தமான நோய்கள், எதிரிகள் நீங்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும்.

    6.பாகற்காய்-சனி பாதிப்பு நீங்கு, கர்ம தோஷம் நீங்கும், வம்சாவழி தோஷம் நீங்கும்.

    7.வில்வபழம்/ மாதுளம்-லட்சுமி கடாட்சம் உண்டாகும். வசீகரம் ஏற்படும்.

    8.ஆரஞ்சு பழம்-தொழில் விருத்தி ஏற்படும்.

    9.அன்னாசிப்பழம்-சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.

    10.பப்பாளி பழம்-திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

    11.இளநீர்-ரத்தம் சம்பந்தமான நோய் விலகும்.

    12.வெள்ளரிக்காய்-சுகமான வாழ்க்கைஅமையும்.

    13.மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவர்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.

    • கண்திருஷ்டி நாசம் விலகும். தீய சக்திகள் விலகி சத்ரு சம்ஹார பைரவரின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கும்.
    • இந்த யாகத்தால் எதிரிகளின் தொல்லைகள் விலகும்.

    தட்சிண காசி கால பைரவருக்கு பூசணி தீபம் ஏற்றி வழிபட்டால், எதிரிகளின் தொல்லைகள் அகல்வதுடன், காரியங்கள் சித்தியாகும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

    இது தவிர கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியன்று தட்சிண காசி காலபைரவருக்கு தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது.

    வரமிளகாய் யாகம்

    பைரவர், பகுலாமுகி, மோகினி, சக்திகளை கலசத்தில் ஆவாகனம் செய்து பகுலாமுகிக்கு பிடித்த வரமிளகாய் , பைரவருக்கு பிடித்த மிளகும், மோகினி சக்திக்கும் பிடித்த வேப்பெண்ணை மற்றும் பூசணி கொண்டு யாகம் நடத்தப்படுகிறது.

    இந்த யாகத்தால் எதிரிகளின் தொல்லைகள் விலகும்.

    கண்திருஷ்டி நாசம் விலகும். தீய சக்திகள் விலகி சத்ரு சம்ஹார பைரவரின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கும்.

    • தமிழகத்தில் நாய்களுக்கு பைரவர் எனவும் பொதுப்பெயர் உண்டு.
    • இதில் சுவர்ண பைரவர் சிறப்பு பைரவ தோற்றங்களுடன் காட்சி தருகின்றார்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால பூஜை, மாதம்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று காலை கணபதி, லட்சுமி, அஷ்டமி நாளில் அஷ்ட பைரவ ஹோமம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் அன்று நள்ளிரவு 1,008 கிலோ மிளகாய் மற்றும் 108 கிலோ மிளகு கொண்டு சத்ரு சம்ஹார ஹோமமும் நடைபெறுகிறது.

    கால பைரவரின் சிறப்பு பெயர்கள்

    சிவபெருமானின் 64 திருமேனிகளுள் பைரவரும் ஒருவராவார். பைரவரின் வாகனம் நாய் என குறிப்பிடப்படுகிறது.

    தமிழகத்தில் நாய்களுக்கு பைரவர் எனவும் பொதுப்பெயர் உண்டு.

    பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.

    மகா பைரவர் எட்டு திசைகளையும் காக்கும் பொருட்டு அஷ்ட பைரவராகவும் 64 பணிகளை செய்ய 64 பைரவர்களாக விளங்குவதாக நம்பப்படுகிறது.

    இதில் சுவர்ண பைரவர் சிறப்பு பைரவ தோற்றங்களுடன் காட்சி தருகின்றார்.

    • ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும்.
    • அந்த நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம்.

    "ஆணவத்தை அழிக்க சிவபெருமான், ஸ்ரீ கால பைரவராக அவதரித்த நாளே "கால பைரவ அஷ்டமி" எனப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும்.

    அந்த நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம்.

    அதிலும் அவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும்.

    சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது.

    ஸ்ரீ ஸ்ரீ பகவத்பாதாள் ஆதி சங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு தொன்மையான பிணி தீர்க்கும் வழிபாடு ஆகும்.

    பைரவர் அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.

    பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.

    அவை வருமாறு:

    1.நீலகண்ட பைரவர்

    2.விசாலாட்ச பைரவர்

    3.மார்த்தாண்ட பைரவர்

    4.முண்டனப்பிரபு பைரவர்

    5.ஸ்வஸ்சந்த பைரவர்

    6.அதிசந்துஷ்ட பைரவர்

    7.கேர பைரவர்

    8.சம்ஹார பைரவர்

    9.விஸ்வரூப பைரவர்

    10.நானாரூப பைரவர்

    11.பரம பைரவர்

    12.தண்டகர்ண பைரவர்

    13.ஸ்தாபாத்ர பைரவர்

    14.சீரீட பைரவர்

    15.உன்மத்த பைரவர்

    16.மேகநாத பைரவர்

    17.மனோவேக பைரவர்

    18.சேத்ர பாலக பைரவர்

    19.விருபாட்ச பைரவர்

    20.கராள பைரவர்

    21.நிர்பய பைரவர்

    22.ஆகர்ஷண பைரவர்

    23.ப்ரேக்ஷத பைரவர்

    24.லோகபால பைரவர்

    25.கதாதர பைரவர்

    26.வஞ்ரஹஸ்த பைரவர்

    27.மகாகால பைரவர்

    28.பிரகண்ட பைரவர்

    29.ப்ரளய பைரவர்

    30.அந்தக பைரவர்

    31.பூமிகர்ப்ப பைரவர்

    32.பீஷ்ண பைரவர்

    33.ஸம்ஹார பைரவர்

    34.குலபால பைரவர்

    35.ருண்டமாலா பைரவர்

    36.ரத்தாங்க பைரவர்

    37.பிங்களேஷ்ண பைரவர்

    38.அப்ரரூப பைரவர்

    39.தாரபாலன பைரவர்

    40.ப்ரஜா பாலன பைரவர்

    41.குல பைரவர்

    42.மந்திர நாயக பைரவர்

    43.ருத்ர பைரவர்

    44.பிதாமஹ பைரவர்

    45.விஷ்ணு பைரவர்

    46.வடுகநாத பைரவர்

    47.கபால பைரவர்

    48.பூதவேதாள பைரவர்

    49.த்ரிநேத்ர பைரவர்

    50.திரிபுராந்தக பைரவர்

    51.வரத பைரவர்

    52.பர்வத வாகன பைரவர்

    53.சசிவாகன பைரவர்

    54.கபால பூஷண பைரவர்

    55.ஸர்வவேத பைரவர்

    56.ஈசான பைரவர்

    57.ஈசான பைரவர் முண்டாக்தாரிணி

    58.ஸர்வபூத பைரவர்

    59.கோரநாத பைரவர்

    60.பயங்க பைரவர்

    61.புத்திமுக்தி பயப்த பைரவர்

    62.காலாக்னி பைரவர்

    63.மகாரௌத்ர பைரவர்

    64.தட்சிணா பிஸ்திதி பைரவர்

    ×