search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்டிபயாட்டிக் மருந்துகள்"

    • நோயால் பாதிக்கப்படுவோரில் சிலர் அவர்களாவே மருந்துக்கடைகளுக்குச்சென்று மருந்து வாங்கி உட்கொள்கின்றனர்.
    • வைரஸ் காரணமாக மூக்கு,தொண்டைப்பகுதியில் ஏற்படும் சளி, மருந்துகள் ஏதுமின்றி தானாகவே சரியாகி விடும்.

    பல்லடம்:

    காய்ச்சல்,சளி,போன்ற நோய்களுக்கு தாமாகவே மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பல்லடம் சுகாதாரத்துறையினர் தெரிவித்ததாவது:- பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பருவநிலை மாற்றத்தின் காரணமாக சளி, காய்ச்சல், இருமல், போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றில் வைரஸ் காய்ச்சல், அதிக அளவில் காணப்படுகிறது. இந்தநிலையில் நோயால் பாதிக்கப்படுவோரில் சிலர் அவர்களாவே மருந்துக்கடைகளுக்குச்சென்று மருந்து வாங்கி உட்கொள்கின்றனர். பயம் மற்றும் அறியாமையால் அதிகப்படியான ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வதும் தெரியவந்துள்ளது. உடனடியாக நிவாரணம் பெற அதிகப்படியான மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் வைரஸ் காரணமாக மூக்கு,தொண்டைப்பகுதியில் ஏற்படும் சளி, மருந்துகள் ஏதுமின்றி தானாகவே சரியாகி விடும். மார்புச்சளி,ஒவ்வாமைச்சளி ஆகியவற்றுக்கு சிகிச்சை தேவைப்படும் நிலையில், டாக்டரின் பரிந்துரையுடன் தரப்படும் மாத்திரைகளைச் சாப்பிட்டால் சரியாகி விடும். டாக்டரிடம் தங்களுக்கு வந்துள்ள நோய்க்கான காரணத்தை, முழுமையாகக்கேட்டுத் தெரிந்து கொண்டு,அவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகள் சாப்பிட்டால் நோய்கள் சரியாகி விடும் .இதை விடுத்து நோய் வந்தவுடன் தாங்களாகவே மருந்துக்கடைகளுக்குச்சென்று உடனடியாக நிவாரணம் பெற அதிகப்படியான ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே டாக்டரின் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×